Wednesday, October 3, 2012

மருதாணி - மலரும் நினைவுகள்

மருதாணி....
இதை சொல்லும் போதே அம்மணிகளுக்கு ரொம்ப பிடிக்கும்.மருதாணியை பிடிக்காத அம்மணிகளே இல்லை எனலாம்.இது பெண்கள் மட்டுமல்ல என்னை போன்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஆண்களுக்கும் பிடிக்கும்.
எங்க ஊருல திருவிழா நடக்கும் போது ரெண்டு நாளைக்கு முன்னாடியே சொந்தகாரங்க எல்லாம் வருவாங்க.அன்னிக்கு சாயந்திரமே மருதாணி இலை பறிக்க கும்பலா குவிஞ்சு செடிய மொட்டையாக்கி எல்லாத்தையும்  ஆட்டுக்கல்லில் அரைப்பாங்க.
எங்க  வீட்டு மருதாணி செடி
இரவு சாப்பிட்டவுடன் உட்கார்ந்து ஒரு கும்பலே மருதாணி வைக்கும்.இரண்டு கைகளிலும் வச்சிக்கிட்டு ரத்த கண்ணீர் படத்துல எம் ஆர் ராதா வர்ற மாதிரி குஷ்டம் பிடிச்ச கைய வச்சிக்கிட்டு கொஞ்ச நேரம் வெளிய சுத்துவோம்.பாயில படுக்கும் போது மல்லாக்க போட்ட சிக்கன் மாதிரி படுப்போம்.ஆனா காலையில் பார்க்கும் போது கைல ஒரு பொட்டு மருதாணி இருக்காது.எல்லாம் போர்வையிலும் பாயிலயும் ஒட்டி இருக்கும்.அதைவிட ஒரு சில நேரங்களில் சிவந்திடுச்சா என வச்ச ஒரு மணி நேரத்திலேயே கைகளை கழுவி விடுவோம்.காலையில் எழுந்து யார் கை ரொம்ப சிவந்து இருக்கு, யாருக்கு பித்தம் இருக்கு அப்படின்னு ரொம்ப ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்போம்.அம்மணிகள் எல்லாம் உள்ளங்கைல ரவுண்ட் போட்டு சுத்தியும் சின்ன சின்ன புள்ளியா வைப்பாங்க.
     பசங்க ஒரே ரவுண்டு மட்டும் வைத்து புள்ளி வைக்காம தொப்பி போட்டு இருப்பாங்க விரல்களில்.ரொம்ப மகிழ்ச்சியான தருணங்கள் அவை.இதெல்லாம் கிராமத்துல மட்டும் தான்.இப்போ மெஹந்தி அப்படின்னு கண்ட கண்ட கலர்ல எல்லாம் வைக்கிறாங்க.இதனால் சில பேருக்கு அலர்ஜி வரும்.உடம்புக்கு சேராம போய்டும்.
மருதாணி ஒரு மருத்துவ குணம் வாய்ந்த ஒரு செடி.அழகுக்காக மட்டும் இதை பயன்படுத்தவில்லை.இதன் மூலம் பல்வேறு பயன்கள் ஏற்படுகின்றன.
உடல் சூடு தணிக்கவும் கைகளில் மருதாணி இடுவர்.இன்னும் பல தகவல்கள் நம்ம சங்க தலைவர் சங்கவி பிளாக்ல  விரிவா இருக்கு.
கடைகளில் விற்கும் மருதாணி பேஸ்ட்களில் இத்தகைய மருத்துவ குணங்களை எதிர்பார்க்க முடியாது.அலர்ஜி வரும் வாய்ப்பு இருக்கிறது.
 
இப்போ ஒவ்வொரு முறையும் வீட்டுக்கு செல்லும் போது மறக்காம அம்மா ஆசையா அரைச்சு என் கையில் வச்சிடுவாங்க.அதுல அன்பு எப்போதும் நிறைந்து இருக்கும். கை சிவக்குதோ இல்லையோ அம்மாவுடைய அன்பு சிவந்து இருக்கும்.
 
எப்பவும் என் கையில் மருதாணி வச்சி இருப்பேன்.நிறைய பேரு கேட்பாங்க.என்ன இது நீங்கலாம் இதை வைக்கிறீங்க அப்படின்னு.. அவங்களுக்கு தெரியுமா இது அம்மா அன்பை கலந்து வச்சது என்று.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

13 comments:

 1. ///அவங்களுக்கு தெரியுமா இது அம்மா அன்பை கலந்து வச்சது என்று...///

  அருமை...

  பல பேர் மறந்ததை நினைவு படுத்தி
  விட்டீர்கள்... (மருதாணி அல்ல.... அம்மாவை...)

  ReplyDelete
 2. மாப்ள, உருக வச்சிடீங்களே....மலரும் நினைவுகள்

  ReplyDelete
 3. வணக்கம்..DD.Sir..உடனடி கமென்ட்...நன்றி/

  ReplyDelete
 4. கவிஞர் மாம்ஸ்...வணக்கம்....ஏன் ஒண்ணு கீழ ஒண்ணு எழுதல....இப்போ புலவரா...?

  ReplyDelete
 5. பழைய நினைவுகள் அசை போடவைத்தமைக்கு நன்றி நண்பா ! எல்லோரும் மருதாணி வைத்து கைகள் கழுவிய பின் என் கை நல்லா சிவந்திருக்கு ! உன் கை நல்ல சிவந்திருக்குன்னு ! எல்லோரும் சந்தோசத்துடன் பார்ப்போம் ! ம்ம்ம்மம்மம்ம்ம்ம் அந்த காலங்கள் அன்பு பாசம் எல்லாம் போயே போச்சு ! எல்லாம் இயந்தர தனமாய் மாறிவிட்டது இன்று !

  ReplyDelete
 6. என் பால்யகாலம் நினைவுக்கு வரவச்சிட்டீங்களே....!

  ReplyDelete
 7. //கோவை நேரம் said...
  கவிஞர் மாம்ஸ்...வணக்கம்....ஏன் ஒண்ணு கீழ ஒண்ணு எழுதல....இப்போ புலவரா...?//

  மாப்ள
  புலவரை
  எள்ளி
  நகையடுவதே
  உமக்கு
  வாடிக்கையா
  போச்சி
  புலவருக்குள்
  கருத்து
  மோதல்
  வருவது
  சகஜம்
  ஆங்

  ReplyDelete
 8. ரொம்ப சூப்பர் !! எங்கள் வீட்டிலும் ஒரு பெரிய மருதாணி செடி இருந்தது, அதில் எனக்கு அம்மா வைத்து விடுவார்கள், மறு நாள் காலையில் முகமெல்லாம் கூட மருதாணி தீற்றல்கள் இருக்கும்....அருமையான பதிவு !!

  ReplyDelete
 9. மாம்ஸ் கவிஞரே....பக்குனு பத்திகிட்டீங்க...

  ReplyDelete
 10. ஐயையோ! டிராஃப்ட்ல இருக்குற என் பதிவை இந்த சகோ சுட்டுட்டுறாங்கோ.

  ReplyDelete
 11. மருதாணி சிவந்திருச்சுங்க,,

  ReplyDelete
 12. மருதாணி - நிச்சியம் பல மலரும் நினைவுகளை கொண்டு வரும் எல்லாருக்கும். நானும் இந்தியா வந்ததுல இருந்து மருதாணி செடி தேடறேன் ஒன்னையும் காணோம். இங்க வந்தும் கோன் மருதாணி வெக்க விருப்பம் இல்லை. கோவைல கடைல விக்கறாங்களானு தெரிலங்க, விசாரிச்சு பாக்கணும்...:)

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....