Saturday, October 20, 2012

கோவை மெஸ் : ஸ்ரீ ராயப்பாஸ் செட்டிநாடு ரெஸ்டாரண்ட், காந்திபுரம், கோவை

ராயப்பாஸ்..
கோவையில் இருக்கிற கொஞ்சம் ஃபேமஸான ஹோட்டல்.ஒரு நாள் எதேச்சையா காந்திபுரம் கிராஸ்கட்ல இருக்கிற சிங்கப்பூர் பிளாசா போய் இருந்த போது சரி இங்க எதாவது சாப்பிடுவோம் அப்படின்னு  அந்த பில்டிங் ல இருக்கிற ராயப்பாஸ் க்கு போனேன்.கிராஸ்கட் ரோட்டுல எப்பவும் அம்மணிகள் கூட்டம் அதிகமா இருக்கும்.அப்படி என்னதான் சந்தோசமோ தெரியல இந்த அம்மணிகளுக்கு வீட்டுக்காரரோட பர்ஸ் ஐ காலிபண்றதுல... அதே மாதிரி கடலை போடுற அம்மணிகளும் அதிகமா சுத்தற இடம் இந்த கிராஸ் கட் ரோடுதான்.காந்திபுரம் சிக்னல்ல இருந்து வடகோவை பாலம் வரைக்கும் இருக்கிற எல்லா கடைகளிலும் எப்பவும் அம்மணிகள் கூட்டம் தான்.ஃபுல்லா பர்ச்சேஸ் பண்ணிட்டு கடைசியா இருக்கிற கடைவரைக்கும் நடந்து வந்த களைப்பில் இந்த ஹோட்டலில்தான்  இளைப்பாறுவாங்க...... அப்படிதான் அன்னிக்கு எனக்கு முன்னாடி போன அம்மணிகளை பார்த்துட்டே நானும் உள்ளே நுழைந்தேன்.
 
நல்ல இண்ட்ரியர் அமைப்பில் ஏசி வசதி உடன் இருக்கிறது.பழைய கால செட்டிநாடுஅமைப்பில் தான் இருக்கிறது .அகப்பை, கரண்டி என பலவித சமையல் சாமான்கள் உள்ளே சுவற்றில் அழகுக்காக வைத்து இருக்கின்றனர்.அதேமாதிரி குழந்தைகள் விளையாட ஒரு சின்ன இடமும் இருக்கிறது.உள்ளேயே மேசனைன் ப்ளோர் (mezzanine floor) இருக்கிறது.அதிலும் சாப்பிட இடம் ஒதுக்கி இருகின்றனர்.ஜோடியா வர அம்மணிகள் அதிகமா இங்கதான் கூடுறாங்க.சரி விசயத்திற்கு வருவோம்...
(கடையில யாருமே இல்லைன்னு சொல்லிடாதீங்க...இது 12 மணிக்கு எடுத்த போட்டோ.நான் எப்பவும் கூட்டம் இல்லாத போது தான் போவேன்.அப்போதானே போட்டோ எடுக்க முடியும்)

போய் லைட்டா ஆர்டர் பண்ணினேன்.நான் வெஜ் சாப்பாடு, வஞ்சிரம் மீன், சிக்கன் மோனிகா என.(அப்பப்ப நிறைய ஸ்பெசல் அயிட்டம் போடுவாங்க..அப்போ அதை சாப்பிடனும்.)
கொஞ்ச நேரத்தில் ஒவ்வொன்றாய் எல்லாம் வர, முதலில் சாப்பாடு... பேருக்கு தான் நான் வெஜ் மீல்ஸ் அதில் ஒரு பீஸ் கூட இல்லை.வெறும் குழம்பு மட்டுமே .மீன், சிக்கன், மட்டன் என எல்லாம் நான் வெஜ் சுவையில் இருக்கிறது.அதிகம் சுவை இல்லாமல் இருக்கிறது அனைத்தும்.இப்போ கொஞ்சம் சுவை குறைவாக தான் இருக்கிறது.ஆனாலும் கூட்டம் பிச்சிகிறது.(அதான் முன்னமே சொல்லிட்டேனே )
சிக்கன் மோனிகா....
பெயரில்தான் கவர்ச்சி இருக்கிறது..ஆனால் சுவையில் இல்லை.அதிக காரம்.வெறும் மிளகாய் துண்டுகள் தான் அதிகம் இருக்கின்றன.செம காரம்.
மோனிகாவை தொடாம சாப்பிட குச்சி குத்தி தருகின்றனர்.கவர்ச்சியாய் இருந்தாலும் ஈர்க்கவில்லை அதன் சுவை..( பங்காளி களுக்கு ஓகே...)
வஞ்சிரம் மீன் சுவை தான்..ஆனால் கொஞ்சம் பழைய மீன் தான்.ஃப்ரீசர்ல வச்சி இருப்பாங்க போல.சாப்பிடும் போது சுவை தெரிகிறது.ஃபிரஷ் மீனுக்கும் அங்க கொடுத்த மீனுக்கும்....(அடிக்கடி கரண்ட் வேற போகுது....அதனால் இருக்குமோ )
அப்புறம் ஒரு காலத்துல இங்க பிரியாணி ரொம்ப சுவையா இருக்கும்.இப்போ இல்லை.இருந்தாலும் இங்க எப்பவும் கூட்டம் பிச்சுக்கும்.ஏன்னா கிராஸ்கட்ல இருக்கிற ஏசி நான் வெஜ் ஹோட்டல் இதுதான்... கொஞ்சம் டீசண்டா இருக்கும்..அதே சமயம் அம்மணிகளும் அதிகமா இருக்கும்...
எல்லாம் இருக்கு...ஆனா சுவையை தவிர...
கார் பார்க்கிங் வசதி சுத்தமா இல்லை...எங்காவது நிறுத்திவிட்டு தான் வரணும்..ஞாயிறு அன்னிக்கு இந்த ரோட்டுல ஆகுற டிராபிக் இருக்கே...அது ரொம்ப ஓவர்...அப்புறம் விலை அதிகம்..கோவைக்கே உண்டான விலை...எப்ப ஏத்துறாங்கன்னு தெரியல...எப்பவும் சாப்பிட முடியாது..எப்பவாவது போனால் சாப்பிட்டு பார்க்கலாம் ..
இவங்களோட இன்னொரு பிராஞ்ச் பாரதியார் ரோட்டில இருக்கு.அங்கயும் சாப்பிட்டு இருக்கேன்.அப்படி ஒண்ணும் ஈர்க்கல.அங்கயும் பார்க்கிங் கிடையாது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்.

5 comments:

 1. பலமுறை சென்றதுண்டு...(கோவை செல்லும் போது)
  ஏன் என்றால் உறவினர்களின் ஹோட்டல்...

  நன்றி...

  ReplyDelete
 2. ம் ம் சுவைத்து இருக்கேன்

  ReplyDelete
 3. சரக்கோட போனா, முறுக்கும் சுவைக்கும்...

  -வெளங்காதவன்...

  #ஆமாய்யா, நீனு வெளியூரு போயிருக்கைன்னு கேள்விப் பட்டேன்...
  சிபி மேரி ஆள் வச்சு எழுதிரியா?

  ReplyDelete
 4. யோவ் வெளங்காதவன்...நீர் இப்ப உள்ளே.... யா, வெளிய... யா

  ReplyDelete
 5. லைட்டா பசிக்கிற மாதிரி இருக்குல்லா?

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....