Monday, October 8, 2012

விபத்து - ஒரு பார்வை

விபத்து...
சாலை விபத்துகளை தினமும் பேப்பர்ல  பார்க்கும் போது மனம் பதபதைக்கும். இதையே நாம நேரில பார்க்கும் போது எப்படி இருக்கும்.நான் பயணிக்கிற வெவ்வேறு  ஊர்களில் விபத்துகுள்ளாகி கிடக்கிற வாகனங்களை பார்க்கும் போது மனம் அனிச்சையாக அவர்களுக்கு என்ன ஆகி இருக்குமோ..எத்தனை பேர் இறந்திருப்பார்கள், உடல் ஊனம் அடைந்து இருப்பார்களா, குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பாங்களா என எண்ண தோன்றும்.அவர்களுக்காக ஒரு நிமிடம் மனம் பிரார்த்தனை செய்யும்.இது மாதிரி நமக்கும் ஏற்பட்டிட கூடாது என எண்ணவும் தோன்றும்.
அதனால் தான் நான் கொஞ்சம் முன் எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்கிறேன் எப்போதும்.


எப்பவும் வண்டி தவறு செய்யாது, வண்டியில் ஏற்படக்கூடிய எதிர்பாராத கோளாறுகள் பஞ்சர் ஆவது, பிரேக் பிடிக்காமல் போவது போன்றவைதான்.இவைகளை கட்டுப்படுத்தி விடலாம்.
விபத்து ஏற்பட முக்கியமான காரணம் வண்டி ஓட்டுனர்கள் தான்.
அதிகாலையில் ஓட்டுனரின் தூக்க கலக்கம், ஓட்டுனருக்கு ஒய்வு இல்லாமை, மது அருந்தி விட்டு ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுவது, போக்குவரத்து விதிகளை மீறுவது, வேகமாக வண்டி ஓட்டுவது, என எல்லாம் மனித தவறுகள் தான்.இயந்திர கோளாறு என்பதே இல்லை.
குப்பனோ சுப்பனோ கார் வாங்கி பராமரிக்கும் அளவுக்கு அவர்களால்  முடிவதில்லை.கார் வைத்து இருப்பவர்கள் அனைவரும் பெரும்பாலும் வசதி படைத்தவர்களும், அதிகம் படித்தவர்களும் தான். இவர்களால் தான் அதிகம் விபத்து ஏற்படுகிறது.
அலட்சியம்..அது மட்டுமே எப்போதும் இருக்கிறது.சிக்னலில் இரண்டு நிமிடம் காத்து இருக்க முடியாது.அதே சமயம் ஹோட்டல் மற்றும் தியேட்டர்களில் மணிக்கணக்காய் காத்து இருக்க முடியும்.
அவசர உலகில் நிதானம் என்பதே இல்லாமல் போய் விட்டது.விபத்தினால் பாதிக்கப்படுவது நாமும் நமது குடும்பமும் தான் என்பதை உணர மறுக்கின்றனர்.
அதே சமயம் எங்காவது நடுரோட்டில் விபத்துக்குள்ளாகி இருப்பவர்களை காப்பாற்ற முயற்சிக்காமல் கடந்து போகும் சில பேர்   மனிதாபிமானம் அற்ற மானிடர்கள் அற்ப பதர்கள்.
ஒருவேளை உங்களுக்கு என்றாவது ஒருநாள் விபத்து ஏற்படும் போது அந்த தவிப்பின் வீரியம் நிச்சயமாய் தெரியும்.
 நான் செல்லும் வழிகளில் ஒரு சில இடங்களில்  ஏற்பட்ட விபத்துகளில் என்னால் ஆன சிறு உதவிகளை செய்து இருக்கிறேன்.எங்காவது ..எப்போதாவது... எனக்கு ஏதாவது நேரும் பட்சத்தில் உதவி செய்வார்கள் என்கிற நம்பிக்கையில்.....

(மேலே இருக்கிற புகைப்படங்கள் அனைத்தும் ஊர் ஊராய் சுத்தும் போது செல்லும் வழிகளில் எடுத்தவை..)

நேசங்களுடன்
ஜீவானந்தம்

16 comments:

 1. புகைப்படங்கள் நீங்களே எடுத்ததா? பயங்கரமா இருக்கு

  சாலையில் மிக ஜாக்கிரதையுடன் போக வேண்டும் என்பது உண்மையே. நானும் பல விபத்துகளை தினம் பார்த்து வருகிறேன் :((

  ReplyDelete
 2. ஆமாம்.மோகன் சார்...வெவ்வேறு இடங்களில் கண்டவை..

  ReplyDelete
 3. //மேலே இருக்கிற புகைப்படங்கள் அனைத்தும் ஊர் ஊராய் சுத்தும் போது செல்லும் வழிகளில் எடுத்தவை//

  எங்க ஊருக்கும் வருவீங்களா..?

  ReplyDelete
 4. // விபத்து ஏற்பட முக்கியமான காரணம் வண்டி ஓட்டுனர்கள் தான். அதிகாலையில் ஓட்டுனரின் தூக்க கலக்கம், ஓட்டுனருக்கு ஒய்வு இல்லாமை, மது அருந்தி விட்டு ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுவது, போக்குவரத்து விதிகளை மீறுவது, வேகமாக வண்டி ஓட்டுவது, என எல்லாம் மனித தவறுகள் தான்.இயந்திர கோளாறு என்பதே இல்லை. //

  சரியாகச் சொன்னீர்கள். நான்குவழிச் சாலை பயணம் என்றாலே பயமாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
 5. மனதை பதைபதைக்க வைத்துவிட்டது படங்கள்...விபத்துக்கான காரணங்களை அழகாக விவரித்து இருக்கீங்க ஜீவா.ஓட்டுநர்கள் ஜாக்கிரதை உணர்வுடன் இருந்தால் நல்லது.

  ReplyDelete
 6. விபத்தையும் அதன் வீரியத்தையும், விபரீதத்தையும் படங்களுடன் விளக்கிய உங்களின் சமூக அக்கறையை புரிந்துக் கொள்ள முடிகிறது. பாராட்டுக்கள்

  ReplyDelete
 7. உங்களது எண்ணமும், எனது எண்ணமும் ஒன்றை பற்றி சிந்திகிறது என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம். சென்ற வாரம்தான் இதை பற்றி நினைத்திருந்தேன், அதை எழுத முனையும்போது உங்களது பதிவை கண்டேன்.....அருமையான பதிவு. தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. விழிப்புணர்வு பதிவு என்றாலும்
  படங்களைப் பார்க்கும் பொழுது
  மனம் பதைபதைக்கிறது நண்பரே.

  ReplyDelete
 9. எத்தனை பேர் என்ன ஆனார்களோ என்று மனம் வருத்தப்படுகிறது...

  நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு...

  ReplyDelete
 10. விழிப்புணர்வு பதிவு

  ReplyDelete
 11. வேகம் விவேகமல்ல என்ற ஒரு விழிப்புணர்வு பதிவு...

  இப்படி ஒரு துயர சம்பவத்தில் மாண்டு போன என் தம்பியின் நினைவு கூர்ந்தது உங்கள் பதிவு.

  ReplyDelete
 12. படங்களைப் பார்க்கும்போதே பயங்கரமாக இருக்கின்றது.


  நல்ல விழிப்பு பகிர்வு.

  ReplyDelete
 13. ஒவ்வொரு பயணத்திலும் எச்சரிக்கை தேவை ! நன்றி நண்பா !

  ReplyDelete
 14. ஒரு விழிப்புணர்வு பதிவு வெளியிட்டதிற்கு நன்றி

  ReplyDelete
 15. //சிக்னலில் இரண்டு நிமிடம் காத்து இருக்க முடியாது// பல நேரங்களில் இதைப் பார்த்து வருந்தியிருக்கிறேன்..
  // நான் செல்லும் வழிகளில் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் என்னால் ஆன சிறு உதவிகளை செய்து இருக்கிறேன்.// உங்கள் மனதை வணங்குகிறேன்!
  நல்ல பதிவு!

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....