Wednesday, February 13, 2013

கோவை மெஸ் - கடலை மிட்டாய் - கோவில்பட்டி

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...
 இந்த பதிவை கொஞ்சம் இனிப்பா ஆரம்பிப்போம்...போன மாதம் அம்பாசமுத்திரம் போனபோது போற வழியில் இருக்கிற எல்லா ஊர்களிலும் ரொம்ப பேமசா இருக்கிற தின்பண்டங்களை வாங்கினேன்...முதலில் போனது கோவில்பட்டி...இங்க கடலை மிட்டாய் ரொம்ப ஃபேமஸ்.கோவில் பட்டியில் ஜன நெருக்கடி மிகுந்த சாலையான மார்க்கெட் ரோட்டில் உள்ளே நுழைந்தவுடன் ஏகப்பட்ட கடைகள்...எல்லா கடைகளிலும் கடலைமிட்டாய் விற்பனை போர்டுகள் தொங்கிகொண்டு இருக்கின்றன.VVR மற்றும் MNR என்கிற இரண்டு கடைகளில் தான் டேஸ்ட் மிக நன்றாக இருக்கும் என்பதால் அங்கு சென்றேன்.கடைகளின் முகப்பில் ஒரே கூட்டம்..கும்பலாய் வாங்கி குவித்துகொண்டிருந்தனர்.நானும் அப்படியே கொஞ்சம் ஓரமாய் நிற்க சாம்பிளாய் சுட சுட ரெடியாகிக்கொண்டிருந்த கடலை மிட்டாயை இளம் சூட்டில் தந்தனர்.சாப்பிட சுவையாக இருக்கிறது.நம்ம பங்குக்கு கொஞ்சம் வாங்கினேன்..கால் கிலோ 26 ரூபாய் என்பது குறைவான விலை..ஆனால் டேஸ்ட் மிக நன்றாக இருக்கிறது.
 
 
 
 இரண்டு கடைகளிலும் கொஞ்சம் வாங்கிகொண்டு இருக்கையில் பக்கத்து தெருவில் சீனி மிட்டாய் மற்றும் சேவு மிக நன்றாக இருக்கும் என்று நம்ம நண்பர் காதை கடிக்க , அங்கும் ஒரு அட்டனன்ஸ் போடுவோம் என்றெண்ணி சுப்பையா தேவர் மிட்டாய்கடை இருக்கிற  அடுத்த தெருவுக்கு சென்றேன்..
சீனி மிட்டாயில் சர்க்கரை மற்றும் மண்டை வெல்லத்தில் செய்த இரண்டு வகைகள் இருக்கின்றன.சும்மா சுத்தி சுத்தி வைத்து இருக்கின்றனர் ஒரு ஐந்து அடி உயரத்திற்கு....மிட்டாயை சுத்தி பேப்பர் வைத்து இருக்கின்றனர்...
நம்ம முகத்தினை பார்த்தவுடனே வெளியூர்காரன் என்று தெரிந்து விடும் போல...வாங்க வாங்க என்று சொல்லி சாம்பிள் பார்க்க ஒரு பிடி கொடுக்க நன்றாகத்தான் இருக்கிறது..வெளியே கொஞ்சம் கெட்டியாக இருந்தாலும் உள்ளே இனிப்பு பதம் சுவையாய் இருக்கிறது..நம்மூர் தேன்மிட்டாய் போல உள்ளே தேன் போன்ற சர்க்கரை பாகு இருக்கிறது.சுவையாய் இருக்கிறது.

 
சேவு சொல்லவே வேணாம்..அம்புட்டு சாஃப்ட்...மொறு மொறுன்னு இருக்கு..சைட் டிஷ்க்கு சரியான டிஷ்...எதுக்கும் நமக்கு போற வழியில் யூஸ் ஆகுமே அப்படின்னு அதிலயும் கொஞ்சம் வாங்கிகிட்டேன்...எல்லா பலகாரமும் விலை குறைவாகத்தான் இருக்கு..ஆனா சுவை ரொம்ப சூப்பராக இருக்கு...

இதெல்லாம் வாங்கிகிட்டு அடுத்து போனது நம்ம இருட்டுகடை இருக்கிற திருநெல்வெலிக்கு...நெல்லையப்பர் கோவில் கூட தரிசனம் பண்ண போகல..கோவிலில் இருக்கிற கூட்டத்தினை விட எதிரில் இருக்கிற இருட்டுக்கடையில் தான் அதிகமா இருக்காங்க...சாயந்திர நேரம் மங்கலான வெளிச்சத்தில் வியாபாரம் கன ஜோராய் நடந்து கொண்டு இருக்கிறது.அங்கேயே சாப்பிட கொஞ்சம் வாங்க இளம் சூட்டில் வாழையில் வைத்து தருகின்றனர்.மிக நன்றாய் இருக்கிறது..தாமிரபரணி தண்ணீர் சுவையில் அல்வா செம டேஸ்ட்...வழுக்கி கொண்டு செல்கிறது இலையிலும் ....போட்டவுடன் வாயிலிலும்...
 வந்ததுக்கு கொஞ்சம் வரலாறு வேணும் என்பதால் இரண்டு கிலோ அல்வா பார்சல் கோவைக்கு..தெரிந்தவர்களுக்கு அல்வா கொடுக்கலாம் என்பதால்.....
கிலோ 140 ரூபாய்....அப்புறம் .சாந்தி அல்வா பெயரில் ஏகப்பட்ட அல்வா கடைகள் இருக்கு... அதே போல்....ஏகப்பட்ட போலிகளும் இருக்கு.பார்த்து வாங்கணும்...

இன்னும் இருக்கு..இப்போதைக்கு கொஞ்சம் இடைவெளி...

நேசங்களுடன்
ஜீவானந்தம்...


18 comments:

  1. எச்சில் ஊற வச்சுட்டீங்களே!!!!!!!!!

    இருட்டுக்கடை அல்வா மட்டும்தான் இதுவரை ருசிபார்க்கக் கிடைச்சது.

    கடலை மிட்டாய் ஏற்றுமதி உண்டா?

    ReplyDelete
  2. பதிவு நன்று! ஆமா... கடலைக்கும் காதலுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிற மாதிரி தெரியுது...!!

    ReplyDelete
  3. மதுரை அழகு////
    கடலை போட்டாத்தானே காதல்....

    ReplyDelete
  4. துளசி///
    வேனுமின்னா சொல்லுங்க...உங்க ஊருக்கு அனுப்பறேன்...

    ReplyDelete
  5. இன்று நானும் கடலைப் போட்டுள்ளேன் ,நீங்களும் போட்டு உள்ளீர்கள் !என் கடலையெயும் கீழே கிளிக்கி பாருங்களேன் !
    http://jokkaali.blogspot.in/2013/02/100.html

    ReplyDelete
  6. இனிப்பான பதிவு பார்சல் அனுப்பி வைக்கவும்

    ReplyDelete
  7. கோவை மு சரளா //
    விரைவில் அனுப்பறேன்...

    ReplyDelete
  8. ஆஹா..எங்க ஊரான கோவில்பட்டிக்கே போய்வந்த அனுபவத்தைத் தருகிறது உங்கள் பதிவு.

    கடலைமிட்டாய் போன்றே 'அமுதா ஸ்வீட்ஸ்' ஸ்டாலில் கிடைக்கும் அல்வா மிக மிக சுவையானது. என்னைப் பொறுத்தவரை திருநெல்வேலி அல்வாவை விடவும் அதிக டேஸ்ட்!

    ReplyDelete
  9. நானும் வி.வி.ஆர் கடையில் கடலை மிட்டாய் சாப்பிட்டு உள்ளேன்.
    ஏலக்காய் மணம் வீசும் கடலை மிட்டாய்
    அங்குதான் சுடச்சுட சாப்பிட்டேன்.

    செங்கோவி சொன்ன அமுதா ஸ்வீட்ஸ்
    அடுத்த முறை போகணும்.
    நாக்கு இப்பவே ஏங்குது.

    ReplyDelete
  10. //துளசி வேனுமின்னா சொல்லுங்க...உங்க ஊருக்கு அனுப்பறேன்... //

    நீங்க சொன்னதே முட்டாய் தின்ன திருப்தி தந்துருச்சு.

    நன்றிங்க.

    அடுத்த முறை இந்தியப்பயணத்தில் கிடைக்குமான்னு பார்க்கலாம். கிடைக்கணும் என்பது கிடைக்காமப் போகாதுதானே:-))))


    ReplyDelete
  11. என்ன ஜீவா இப்படி படங்களைப்போட்டு உடனே சாப்பிட வேண்டும் அப்படீன்னு நினைக்க வைச்சுட்டீங்களே?

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  12. இருட்டு கடைன்னு சொன்னீங்க..ஒரு லைட் எரிஞ்சுகிட்டு இருக்கு. நமக்கும் கடலை மிட்டாய் பார்சல் ரெடியா இருக்கு இல்ல !! ??

    ReplyDelete
  13. சுவையான பதிவு நண்பரே பகிர்ந்தமைக்கு நன்றி


    வருகை தாருங்கள்
    சிவாவின் கற்றதும் பெற்றதும்

    ReplyDelete
  14. ரசித்து ருசிக்க வைத்த பதிவு! நன்றி!

    ReplyDelete
  15. இப்படி படங்களை போட்டு நீங்க மட்டும் சாப்பிட்டு வந்துட்டா எப்படி..? எங்களுக்கும் ஒரு பார்சல் ...!

    ReplyDelete
  16. மச்சி, படங்களும் பகிர்வுகளும் அருமை, அல்வா கொடுத்த மேட்டர் சொல்லவே இல்ல..

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....