Showing posts with label இருட்டுக்கடை. Show all posts
Showing posts with label இருட்டுக்கடை. Show all posts

Wednesday, February 13, 2013

கோவை மெஸ் - கடலை மிட்டாய் - கோவில்பட்டி

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...
 இந்த பதிவை கொஞ்சம் இனிப்பா ஆரம்பிப்போம்...போன மாதம் அம்பாசமுத்திரம் போனபோது போற வழியில் இருக்கிற எல்லா ஊர்களிலும் ரொம்ப பேமசா இருக்கிற தின்பண்டங்களை வாங்கினேன்...முதலில் போனது கோவில்பட்டி...இங்க கடலை மிட்டாய் ரொம்ப ஃபேமஸ்.கோவில் பட்டியில் ஜன நெருக்கடி மிகுந்த சாலையான மார்க்கெட் ரோட்டில் உள்ளே நுழைந்தவுடன் ஏகப்பட்ட கடைகள்...எல்லா கடைகளிலும் கடலைமிட்டாய் விற்பனை போர்டுகள் தொங்கிகொண்டு இருக்கின்றன.VVR மற்றும் MNR என்கிற இரண்டு கடைகளில் தான் டேஸ்ட் மிக நன்றாக இருக்கும் என்பதால் அங்கு சென்றேன்.கடைகளின் முகப்பில் ஒரே கூட்டம்..கும்பலாய் வாங்கி குவித்துகொண்டிருந்தனர்.நானும் அப்படியே கொஞ்சம் ஓரமாய் நிற்க சாம்பிளாய் சுட சுட ரெடியாகிக்கொண்டிருந்த கடலை மிட்டாயை இளம் சூட்டில் தந்தனர்.சாப்பிட சுவையாக இருக்கிறது.நம்ம பங்குக்கு கொஞ்சம் வாங்கினேன்..கால் கிலோ 26 ரூபாய் என்பது குறைவான விலை..ஆனால் டேஸ்ட் மிக நன்றாக இருக்கிறது.
 
 
 
 இரண்டு கடைகளிலும் கொஞ்சம் வாங்கிகொண்டு இருக்கையில் பக்கத்து தெருவில் சீனி மிட்டாய் மற்றும் சேவு மிக நன்றாக இருக்கும் என்று நம்ம நண்பர் காதை கடிக்க , அங்கும் ஒரு அட்டனன்ஸ் போடுவோம் என்றெண்ணி சுப்பையா தேவர் மிட்டாய்கடை இருக்கிற  அடுத்த தெருவுக்கு சென்றேன்..
சீனி மிட்டாயில் சர்க்கரை மற்றும் மண்டை வெல்லத்தில் செய்த இரண்டு வகைகள் இருக்கின்றன.சும்மா சுத்தி சுத்தி வைத்து இருக்கின்றனர் ஒரு ஐந்து அடி உயரத்திற்கு....மிட்டாயை சுத்தி பேப்பர் வைத்து இருக்கின்றனர்...
நம்ம முகத்தினை பார்த்தவுடனே வெளியூர்காரன் என்று தெரிந்து விடும் போல...வாங்க வாங்க என்று சொல்லி சாம்பிள் பார்க்க ஒரு பிடி கொடுக்க நன்றாகத்தான் இருக்கிறது..வெளியே கொஞ்சம் கெட்டியாக இருந்தாலும் உள்ளே இனிப்பு பதம் சுவையாய் இருக்கிறது..நம்மூர் தேன்மிட்டாய் போல உள்ளே தேன் போன்ற சர்க்கரை பாகு இருக்கிறது.சுவையாய் இருக்கிறது.

 
சேவு சொல்லவே வேணாம்..அம்புட்டு சாஃப்ட்...மொறு மொறுன்னு இருக்கு..சைட் டிஷ்க்கு சரியான டிஷ்...எதுக்கும் நமக்கு போற வழியில் யூஸ் ஆகுமே அப்படின்னு அதிலயும் கொஞ்சம் வாங்கிகிட்டேன்...எல்லா பலகாரமும் விலை குறைவாகத்தான் இருக்கு..ஆனா சுவை ரொம்ப சூப்பராக இருக்கு...

இதெல்லாம் வாங்கிகிட்டு அடுத்து போனது நம்ம இருட்டுகடை இருக்கிற திருநெல்வெலிக்கு...நெல்லையப்பர் கோவில் கூட தரிசனம் பண்ண போகல..கோவிலில் இருக்கிற கூட்டத்தினை விட எதிரில் இருக்கிற இருட்டுக்கடையில் தான் அதிகமா இருக்காங்க...சாயந்திர நேரம் மங்கலான வெளிச்சத்தில் வியாபாரம் கன ஜோராய் நடந்து கொண்டு இருக்கிறது.அங்கேயே சாப்பிட கொஞ்சம் வாங்க இளம் சூட்டில் வாழையில் வைத்து தருகின்றனர்.மிக நன்றாய் இருக்கிறது..தாமிரபரணி தண்ணீர் சுவையில் அல்வா செம டேஸ்ட்...வழுக்கி கொண்டு செல்கிறது இலையிலும் ....போட்டவுடன் வாயிலிலும்...
 வந்ததுக்கு கொஞ்சம் வரலாறு வேணும் என்பதால் இரண்டு கிலோ அல்வா பார்சல் கோவைக்கு..தெரிந்தவர்களுக்கு அல்வா கொடுக்கலாம் என்பதால்.....
கிலோ 140 ரூபாய்....அப்புறம் .சாந்தி அல்வா பெயரில் ஏகப்பட்ட அல்வா கடைகள் இருக்கு... அதே போல்....ஏகப்பட்ட போலிகளும் இருக்கு.பார்த்து வாங்கணும்...

இன்னும் இருக்கு..இப்போதைக்கு கொஞ்சம் இடைவெளி...

நேசங்களுடன்
ஜீவானந்தம்...


இன்னும் கொஞ்சம்...

Monday, August 15, 2011

கோவை மெஸ் : இருட்டுக்கடை அல்வா, திருநெல்வேலி


திருநெல்வேலி புகழ் இருட்டுக்கடை அல்வா அமைந்திருக்கும் இடம்.
சாயந்திரம் சும்மா கூட்டம் அள்ளும்...சீக்கிரமாகவே அனைத்தும் காலியாகி விடும் ...அப்புறம் அங்கு ஒரே ஒரு லைட் மட்டும் தான் அங்கு எரிந்து கொண்டிருக்கும்.இருட்டுவதற்கு முன்னாடியே எல்லாம் விற்று தீர்ந்துவிடுமாம்..


திருநெல்வேலி போனால் அல்வா சுவைக்க மறந்து விடாதீர்கள். நெல்லை அப்பர் கோவில் அருகே உள்ள கடை மட்டும்தான் ஒரிஜினல்.நிறைய போலிகள் வேற இருக்கின்றன .. ஏமாந்து விடாதீர்கள்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, August 13, 2011

நெல்லைஅப்பர் கோவில் திருநெல்வேலி

திருநெல்வேலி அப்படின்னாலே ஞாபகத்திற்கு வருவது இருட்டுக்கடை அல்வா தான் .அதையும் மீறி வருவது நெல்லைஅப்பர் கோவில் அப்புறம் தாமிரபரணி.....அப்புறம் எலேய் மக்கா..என்னல பண்றிய ....இப்படியான வட்டார நெல்லை தமிழ்.....கேட்கவும் பழகவும் இனிமையா இருக்கும் .என்ன வெயில் கொஞ்சம் சுள்ளுன்னு அடிக்கும் .

எனது பார்வையில் நெல்லைஅப்பர் கோவில் படங்கள்






அப்புறம் இன்னொன்னு ரொம்ப பேமஸ்.....இப்போ ரொம்ப களை கட்டி இருக்கிற பாளையங்கோட்டை சிறை ...

இது எப்படி இருக்கு .....


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...