நம்ம மருதமலை முருகன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் செய்து இருப்பதால் ஒரு விசிட்
போலாம்ன்னு கும்பாபிஷேகம் முடிஞ்ச மூணாவது நாள் போனேன்...
நல்லா சுத்தமா வைத்து
இருக்காங்க.பார்க்கவே பளிச்சுனு இருக்கு.எல்லா கோவில் கோபுரமும், படிகளும் வர்ணம் பூசப்பட்டு நல்லா
வச்சிருக்காங்க...பார்த்தவுடன் தெய்வீக களை ஏற்படுகிறது.விழா முடிந்தும் கூட்டம்
குறையல இன்னமும்...நிரம்பி வழிகின்றது மலை அடிவாரமும், கோவில் அடிவாரமும்....
இந்த மார்ச் மாசம் தான்
புதிதாக கட்டின ஏழு நிலை ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் பண்ணியிருக்கிறார்கள்...முருகனின் கருவறைக்கு
எதிரில் இருக்கும் படியாக ராஜகோபுரமும், தனித்தனி மண்டபங்களும் இருக்கின்றன.கீழிருந்து முருகன் சன்னதிக்கு வர கிரானைட் படிகளும்
அமைத்து உள்ளனர்.கோபுர நுழைவாயிலில் பிரம்மாண்ட வெண்கல கதவு ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.சன்னதிக்கு வரும் வழியில் ஒரு மண்டபம் வேறு அமைத்து இருக்கின்றனர்.அதில் ஏகப்பட்ட தூண்கள்
மற்றும் வண்ண வண்ண சாமி சிலைகள் இருக்கின்றன..
கோவில் பிரகாரம்
முழுவதும் கூட்டம் நிறைந்து இருக்கிறது.அரசமரத்து பிள்ளையார் ரொம்ப வசதிகளோடு மாறி இருக்கிறார்.முருகன் சன்னதிக்கு எதிரில் இருக்கும் கொடிமரத்துக்கு அருகில் பொலிவின்றி இருந்த இரண்டு யானை சிலைகள் கூட தற்போது வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.பக்தி மார்க்கமாக அனைவரும் அலைந்து
கொண்டிருந்தனர்.முடிந்து போன யாக சாலையில் ஒரு கூட்டமே கும்பிட்டுக்கொண்டிருந்தது...ஒவ்வொரு
கடவுளுக்கும் ஒரு யாக குண்டம்...கிட்டததட்ட முப்பதுக்கும் மேற்பட்ட அக்னி குண்டங்கள்....
மேலே பஞ்சாமிர்த கடை
வேறு வைத்து இருக்கிறார்கள்.முருகனின் அருள் பரப்பும் புத்தக, மற்றும் டிவிடி கடைகள், மேலும் தற்காலிக பந்தலில் பிரசாத கடை இருக்கிறது.அதில்
புளியோதரையும் பொங்கலும் பத்து ரூபாய்க்கு ஒரு சிறிய தொன்னையில்
தருகின்றனர்....
யானை பசிக்கு சோளப் பொரி போல...
ஆயினும் பசி
அடங்கியது...பாவைகளை பார்த்ததும்...
நாங்க போன அன்னிக்கு
நல்ல வெயில் வேற....காலையிலயே பின்னி எடுக்குது...ஆனா குளிர்ச்சியா
இருந்தது..காரணம் அம்மணிகள்..எம்புட்டு பேரு...
எப்படியோ முருகனை
தரிசனம் பண்ணிட்டு கீழிறங்கினோம்.எப்பவும் போல
தள்ளுவண்டி கடைகள்..அதில் பொரி, எலந்தைபழம், மாங்காய் என சில்லறை வணிகம்...
விழாக்கோலம் பூண்டிருக்கிறது இன்னும் இந்த மருதமலை முருகன் கோவில்.கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த ராஜ கோபுர கட்டுமான பணி ஒருவகையில் முடிந்து தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது.(கீழிருக்கும் புகைப்படங்கள் முன்பு எடுத்தவை )
முருகனுக்கு அரோகரா.....கந்தனுக்கு அரோகரா...
போனவருசம் போனது - மருதமலை
கிசுகிசு : கோவிலுக்கு போற மலைப்பாதையில் அதிகமா காலேஜ் அம்மணிகளையும் கள்ள அம்மணிகளையும் காண முடியல.ஒருவேளை இந்த விசேஷம் முடிஞ்சதும் அடுத்ததா அவங்க விசேஷத்திற்கு வருவாங்களோ என்னமோ...... ஹி ஹி ஹி ....
போனவருசம் போனது - மருதமலை
கிசுகிசு : கோவிலுக்கு போற மலைப்பாதையில் அதிகமா காலேஜ் அம்மணிகளையும் கள்ள அம்மணிகளையும் காண முடியல.ஒருவேளை இந்த விசேஷம் முடிஞ்சதும் அடுத்ததா அவங்க விசேஷத்திற்கு வருவாங்களோ என்னமோ...... ஹி ஹி ஹி ....
நேசங்களுடன்
ஜீவானந்தம்.
இருமுறை சென்றதுண்டு... படங்களில் இன்னும் மிளிர்கிறது...
ReplyDeleteவாங்க நண்பரே....எப்பவும் ஆன்லைனில் இருப்பீர்கள் போல...உற்சாகமளிக்கிறது உங்களின் உடனடி வருகை...
Deletefalls missing..
ReplyDeleteஅங்க போகல பாஸ்
Deleteமருதமலை முருகனுக்கு அரோகரா..
ReplyDeleteம்ம்..அரோகரா
Deleteதெய்வீகம்!முருகன் அருள் கிட்டட்டும்!
ReplyDeleteகிட்டும் குட்டன் வந்தீங்கன்னா...
Deleteமுருகா!முருகா!
ReplyDeleteஏன் ....ஏன்...முருகா...
Deleteடிசம்பர் மாதக் கடைசியில் இங்கே சென்றபோது கட்டிட வேலைகள் முடியும் தருவாயில் இருந்தது.....
ReplyDeleteமுடிந்த பின் சுட்ட படங்கள் பார்த்து மகிழ்ச்சி!
ஓ..வந்து இருக்கீங்களா....
Deleteபடங்கள் அருமை .......இனிமேல்தான் முருகனை பார்க்க போகணும்
ReplyDeleteநன்றி....கண்டிப்பா போங்க...
Deleteஅருமையான படங்கள்..பாராட்டுக்கள்..
ReplyDeleteநன்றி..ரா.ரா
Deleteமருத மலை முருகன் கோவில் யாருக்கும் பிடிக்ககூடிய மிக அருமையான ஆலயம்.
ReplyDeleteமண்டல பூஜைக்கு முன் தரிசனம் செய்வது மிக்க நன்மை தரும்.
கூடுதல் தகவல் நண்பரே...
Deleteமருதமலை ஒருதடவை சென்றிருக்கின்றேன். கும்பாபிஷேகத்தின் பின் காணக்கிடைத்தது மகிழ்ச்சி.
ReplyDeleteஓ...நன்றி...
Delete