Friday, April 12, 2013

கோவை மெஸ் - அப்பளம், கல்லிடைக்குறிச்சி, நெல்லை

அம்பா சமுத்திரம் போய்ட்டு திரும்பி வரும்போது கல்லிடைக்குறிச்சி என்கிற ஊர் தான் அப்பளத்திற்கு பேமஸ் என்ற ஞாபகம் வந்தவுடன் அந்த ஊரிலே கொஞ்சம் இளைப்பாறிவிட்டு போலாம் என்று நம்ம சிங்கத்தை ஓரங்கட்டினோம்.அருகில் இருந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரிக்க எங்கு அப்பளம் தயாரிக்கிறார்கள், எங்கு சுவையாக கிடைக்கும் என்று கேட்க அவர் ஒரு அக்ரஹார வீதியை காட்டினார்.சன்னதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா அப்பளக்கடைதான் மிக சுவையாக இருக்கும் என்றும் வழி மொழிந்தார்.

நன்றி சொல்லிவிட்டு நடையைக்கட்டினோம்.இருபுறமும் ஒழுங்கே அமையப்பெற்ற வீடுகள்.ஒவ்வொரு வீட்டிலும் பழமை மாறாத திண்ணை அமைப்புகள்..மரத்திலான தூண்கள் கொண்ட வீடுகள் என மிக நேர்த்தியாக இருந்தன.மார்கழி மாசத்தில் இந்த வீதி வழியே சென்றால் மிக ரம்மியமாக இருக்கும் என நினைக்கிறேன்...அம்மணிகள் இருமருங்கிலும் கோலம் போட்டுக்கொண்டு இருப்பர். 

வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா....வச்சிப்புட்டா...
நேசத்திலே எம்மனசை தைச்சிப்புட்டா... தைச்சிப்புட்டா

 இப்படி பாடிக்கிட்டே அம்மணிகளை பார்த்துவிடலாம் என நினைக்கிறேன்,

அம்மணிகள் என்றவுடன் தான் இந்த ஊரைப்பற்றின விசேசம் ஞாபகத்திற்கு வருது.கல்லிடைக்குறிச்சியில் தான் ரொம்ப்ப ...ரொம்ப்ப...அழகான அம்மணிகள் இருப்பாங்களாம்..அம்பாசமுத்திரத்தில் இருந்து சைக்கிளில் வந்து சைட் அடிச்சிட்டு போவாங்களாம் அப்படின்னு ஒரு புண்ணியவான் சொன்னாரு..ஆனா இப்போ ரொம்ப வறண்டு கிடக்காம்...
இங்க அதிகமா சினிமா சூட்டிங் நடக்குமாம்.நம்ம பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்  தன்னோட எல்லா படத்திலயும் இங்கதான் ஒரு சில காட்சிகளை படப்பிடிப்பு செய்வாராம்....சரி...நம்ம விசயத்துக்கு வருவோம்...
கடைக்குள் நுழையும் போதே உளுந்தின் வாசனை நம்மை வரவேற்கிறது.இரண்டு பெண்மணிகள் அப்பளம் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.இதன் அருகிலேயே இன்னொரு ஆஞ்சனேயா கடை.பங்காளி போட்டி போல..இரண்டு கடைகளிலும் அப்பளத்தில் ஏகப்பட்ட வகைகள் வைத்து இருக்கின்றனர்.உளுந்து அப்பளம்,அரிசிஅப்பளம், கிழங்கு அப்பளம் என ஏகப்பட்ட...அப்புறம் முறுக்கு வகைகள் கூட தயாரிக்கிறார்கள்.உள்ளூர் மக்கள் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கு வாங்கிச்செல்வோருக்கும் இருக்கிறார்கள்.நான் நிறைய அப்பளக்கட்டுக்கள் (ஒன்று 40 ரூபாய் அடக்கத்தில்) வாங்கினேன். இன்னும் அதிக விலையுள்ள அப்பளங்கள் இருக்கின்றன.(நமக்கு சைடு டிஷ் மட்டை ஊறுகாயே போதும்...)


வீட்டிற்கு வந்தவுடன் அப்பளத்தினை பொறித்து டேஸ்ட் பார்க்க மிக சுவையாக இருந்தது.இப்போதெல்லாம் அதிகம் இடம் பெறுகிறது என் வீட்டு சமையலில் இந்த அப்பளம்.நல்ல சுவை..தாமிரபரணி தண்ணீரில் தயாரிப்பதால் இந்த அப்பளத்தின் சுவை கூடுகிறது போல..
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அப்பளம் தயாரிக்கின்றனர்.ஆனால் இந்த தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கிற கல்லிடைக்குறிச்சி அப்பளத்தின் சுவைக்கு ஈடாகுமா என்று தெரியவில்லை.
என்னதான் இருந்தாலும் கல்யாண விருந்திலே ஜவ்வரிசி பாயசத்துல அப்பளத்தை நொறுக்கிப்போட்டு சாப்பிடற சுவையே  சுவைதான்....அதை அடிச்சுக்க முடியாது. ம்ஹூம்...இப்போலாம் டம்ளர் ல வச்சிடறாங்க...டீசண்டாயிட்டாங்களாம்.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


14 comments:

 1. வணக்கம்
  அப்பளமா.......பகிர்வு அருமை

  ReplyDelete

 2. ஷங்கரின் ஜென்டில்மேன் ஷூட்டிங் இங்கு நடந்திருக்கும் என நினைக்கிறேன்.

  டிக்கிலோனா ஆடாம வந்துட்டீங்களே....

  ReplyDelete
  Replies
  1. ஆமா..முதல்வன் கூட அங்க தான் எடுத்தாங்க...

   Delete
 3. உணவு சார்ந்த பதிவுகளில் முக்கியமான ஒன்று.

  ReplyDelete
 4. அந்த புண்ணியவான் மட்டும் கையில் கிடைத்தால் அப்பளம் தான்...

  சுவையான அப்பள பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அந்த புண்ணியவான் வேணுமா...?

   Delete
 5. அப்பளமும் சூப்பர்...அம்மணியும் சூப்பரா!

  ReplyDelete
  Replies
  1. அப்பளம் தான் சார்..அம்மணி \லாம் இல்ல

   Delete
 6. ஒவ்வொரு விசயத்தையும்விசாரிச்சு தேடி ப் போய் வாங்குவது சிறப்பு....

  ReplyDelete
  Replies
  1. ஆமா...ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ஸ்பெசல்..

   Delete
 7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5204.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அப்படியா...யாருப்பா அந்த மகராசன்...வாழ்க வளமுடன்

   Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....