Wednesday, April 24, 2013

பயணம் - பிளாக் தண்டர், மேட்டுப்பாளையம்

கடந்த ஒரு வாரமாவே நம்ம ஊருல செம வெயில்.எங்காவது தண்ணி இருக்கிற இடத்துக்கு போலாம்னு (சத்தியமா நம்ம கடைக்கு இல்ல...) பிளான் பண்ணி ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே மேட்டுப்பாளையம் பிளாக் தண்டருக்கு கிளம்பினோம்.
அங்க போனா ஊர்ப்பட்ட பேரு...யம்மாடி.....இம்புட்டு பேரா..வாய் பிளந்தபடி வந்திருந்த அம்மணிகளை நோக்க.....குமட்டில குத்தி டிக்கட் எடுக்க சொன்னான் நண்பன்...ஞாயிறு வேற.. கூட்டம் மொய்க்கிறது...வகைவகையாய் அம்மணிகள்..காலேஜ் பஸ், வேன், கார் என குடும்பம் குடும்பமாய், தோழிகள் சகிதமாய், வகை வகையாய் வந்திறங்கிய அம்மணிகள்...கோடை விடுமுறையை கழிக்க வந்திருக்கும் கூட்டம் என கிட்டத்தட்ட 4000 க்கும் மேல இருக்கும்..இதுல பாதிக்கு பாதி அம்மணிகள்...ஹிஹிஹி....அப்புறம் குழந்தைகளோடு அம்மணிகளையும் சேர்த்து  பாதுகாக்கிற காவலனாய் நம்ம இனம்...


 
 டிக்கட் வாங்கிட்டு உள்ளே போனது தான் தெரியும்..ஜன நெரிசலில் சிக்கி தவிக்கிற மாதிரி ஆயிடுச்சு.ஆனாலும் சுகமாய் இருந்தது...ஹிஹிஹி...
லாக்கர் வாங்க ரொம்ப நேரம் கியுல நின்னாலும்  கொஞ்சம் கூட போரடிக்கவே இல்ல..ஏன்னா இந்த பக்கம் அந்த பக்கம் என எல்லாப்பக்கமும் அம்மணிகள்...ஹிஹிஹி..நின்னது லேடிஸ் கவுண்டர்ல...
தனித்தனி கவுண்டர் இருந்தாலும் லாக்கர் வேண்டி இங்கயும் அங்கயும் மாறி மாறி நிக்கிறார்கள்.
எப்படியோ லாக்கர் வாங்கி (என்னமோ பேங்க லாக்கர் வாங்குற மாதிரி...) போட்டு இருந்த ட்ரஸ், கொண்டு போன பேக், செப்பல், செல்போன், கேமரா இதெல்லாம் உள்ள வச்சி பூட்டிட்டு அரை டிராயரும் பனியனும் போட்டு கிளம்பினோம்.மணி 10.30 ஆகிவிட்டது...வெயில் முதுகை பதம் பார்க்கவே எங்காவது உடலை நனைப்போம் என்று உள்ளே நுழைந்தால்....லேடிஸ், கிட்ஸ் என்று இருக்கிற எல்லா குளங்களிலும் போர்டு தொங்கவிட்டு இருக்கின்றனர்.கிட்டதட்ட நிறைய நீச்சல்குளங்களில் இப்படியே தொங்க விட்டுருந்தனர்.நமக்கு தன்ணீர் ஆழமா இருக்கனும்...நல்லா நீச்சல் அடிக்கணும் அதுதான் ஆசை...ஆனா அங்க இருக்கிறது எல்லாமே வாட்டர் ரைடு....அதுல போய் மேலிருந்து கீழே வந்தா ஒரு வித பயம்...அதனாலேயே அந்தப்பக்கம் எட்டிக்கூட பார்க்கல.....சரி என்று வேவ் எனப்படும் செயற்கை  அலை வரும் குளத்திற்கு போனால் தண்ணீரை விட மனித தலைகளே அதிகம் இருக்கிறது..அலை வரும் நேரம் ஒரு போர்டில் குறிக்கப்பட்டு இருந்தது.சரி அதற்குள் எங்காவது போய் பாடியை நனைப்போம் என்று எண்ணி ஒரு குளத்திற்குள் குதித்தேன்...பார்த்தா அதுலயும் மேல இருந்து சறுக்கிட்டே வந்து நம்ம பக்கத்துல குதிக்கிறாங்க...விட்டா நம்மள முடிச்சிருவாங்க  அப்படின்னு ஒரு ஓரமா நீச்சல் அடிச்சிகிட்டு இருக்க...
கொஞ்ச நேரத்துல சங்கு ஊத..அலை வரும் முன்னெச்சரிக்கையாம்......உடனே அங்க கிளம்ப...
இன்னும் கூட்டம் கூடியது...சரின்னு  நாமளும் ஜலக்கிரீடை செய்வோம் அப்படின்னு  செயற்கை அலை குளத்தில் நீராடினேன்....ஒரு மணி நேரம் அதுக்குள்ளேயே கிடந்தேன்..
பசிக்க ஆரம்பித்தது.....பக்கத்தில் ஒரு சாரல் என பெயர் பொறித்த ஹோட்டல்...
பாடாவதி உணவு...விலை மிக அதிகம்...சுவை கேவலம்...ஆனாலும் கூட்டம்.....ரொம்ப நேரம் தண்ணீரில் ஆடி களைத்துவிட்டு வரும் நபர்கள் சுவையை பார்ப்பதில்லை போல...
ஒரு புரோட்டா 25, தயிர்சாதம் 50, வெஜ் பிரியாணி 70...இப்படி விலை இருக்கிறது...நானும் இரண்டு காஞ்சு போன புரோட்டாவையும் ஒரு பிரியாணியையும் வெட்டி விட்டு மீண்டும் குளத்தில் போய் படுத்துக்கொண்டேன்....அடிக்கிற வெயிலிலும் தண்ணீரில் இருப்பது சுகத்தினை தருகிறது...பக்கத்திலேயே பல்வேறு அம்மணிகள்...சொல்லவா வேணும்....
4 மணி ஆனது.....வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானோம்...உடை மாற்றும் அறைக்கு வந்து குளித்துவிட்டு லாக்கரில் இருந்த உடைகளை போட்டுக்கொண்டு வெளியேறினோம்... மொபைலை எடுத்து போட்டோ எடுக்க ஆரம்பித்தேன்...முதலில் அக்வேரியம்.மீன் தொட்டிகள்..நிறைய வகை வகையாய்...எதுவும் ஈர்க்கவில்லை.
காலையில் இருந்த கூட்டம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் வடிய ஆரம்பித்தது...பார்த்தபடியே நுழைவு வாயில் அருகில் ஒரு வீடியோ கேம்ஸ் இல் உள் நுழைந்தோம்...ஒரு சில கேம்ஸ்களை விளையாடிவிட்டு ஹாண்ட்டு ஹாஸ்பிடல் என்கிற போர்டு பார்த்து உள் நுழைந்தோம்...இருட்டு அறையில் பிணங்கள் போன்ற செட்டப்புகள்...கொஞ்சம் திகிலை வரவழைத்தது...பயந்தபடி வெளியேறினோம்.அதுபோலவே ஜூராசிக் ஜங்கிள்...ஆனால் டைனோசர் ஒன்று கூட நம்மை மிரட்டவில்லை.ஒரு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு மறக்க முடியா நினைவுகளோடு பிளாக் தண்டர் அனுபவமும் சேர்ந்து கொண்டது..
டிக்கெட் விலை 500 ரூபாய்..உங்கள் அனைத்து பொருட்களையும் லாக்கரில் வைத்து விடுங்கள்.வீட்டில் இருந்தே டிராயர்/ பெர்முடா கொண்டு செல்லுங்கள்.அங்கு விலை அதிகம்.முதலில் டிரை கேம்ஸ் அனைத்தும் விளையாடி விடுங்கள்.பின் குளத்திற்கு செல்லுங்கள்.திரும்பி வருகையில் கண்டிப்பாக நல்ல தண்ணீரில் குளித்து விடுங்கள்.இல்லை எனில் அலர்ஜி தான்.பயங்கர குளோரின் கலப்பார்கள் போல...ஒரே குளோரின் வாசம்..
எங்கு என்னென்ன இருக்கிறது என்று கைடு பண்ண ஆள் இல்லை.தண்ணீர் சறுக்கல் விளையாட அந்த ரப்பர் ட்யூப்களை நாமே தான் மேலே கொண்டு செல்ல வேண்டும்.இந்த ரப்பர் ட்யூப்களை வாங்க முண்டியடிக்கிறது கூட்டம்.குளங்களில் மண் சேர்ந்து கிடக்கிறது.உடைந்த வளையல், பின், என நிறைய கிடக்கிறது.ஆனாலும் மக்கள் ரசிக்கிறார்கள்.விளையாடுகிறார்கள்..காரணம்  பொழுது போக்கு அம்சமாக இது ஒன்று மட்டுமே இருப்பதால்...
கண்டிப்பாக போக வேண்டிய அனுபவங்களை உணர வேண்டிய இடம்.மனமும் உடலும் நிச்சயமாய் இளைப்பாறும்.

 கிசுகிசு : எங்கடா அம்மணிகள் போட்டோ என்று யாரும் கேட்டு விடாதீர்கள்.அதற்கு பதிலாக எனது போட்டோ...( பேக்ரவுண்டில்....நல்லா ஜூம் பண்ணுங்க....ஹிஹிஹி... )அடிக்கிற வெயிலில் பிளாஷ் அடிச்சு தான் போட்டோ எடுத்தார் ஆனாலும் கருப்பாவே தெரிகிறேனே.....

உள்ளே புகைப்படக்காரர்கள் சுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.50,100,500 என பல்வேறு விலைகளில் பிரிண்ட் தருகிறார்கள்.(எனக்கு மெயில் அனுப்பமுடியுமான்னு கேட்டேன்...பயபுள்ள ஒரு பார்வை பார்த்துச்சு...அப்படியே பம்மிட்டேன்...ஹிஹிஹி)

நேசங்களுடன்
ஜீவானந்தம்

18 comments:

 1. இந்த முறை சொல்ல வேண்டும் என்று நினைத்த இடம்... முக்கியமான தகவல்களுக்கு நன்றி...

  முடிவில் நல்ல படம்...! சரண்ராஜின் தம்பி போல இருப்பதால் திரைப்படத்தில் நடிக்க கண்டிப்பாக வாய்ப்புண்டு... ஹிஹி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. //சரண்ராஜின் தம்பி போல இருப்பதால் //

   DD, அவ்வளவு மோசமாவா இருக்கு??

   Delete
 2. வணக்கம் தனபாலன் சார்...உங்க வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி...

  ReplyDelete
 3. மச்சி, கொஞ்சம் வழிசல் கூடிப் போச்சு.. :-)

  //பிளாஷ் அடிச்சு தான் போட்டோ எடுத்தார் ஆனாலும் கருப்பாவே தெரிகிறேனே.....//

  அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கேன்னு சென்னையில கேக்குறாங்க மாப்ளே..!

  ReplyDelete
  Replies
  1. ஆமா மச்சி...அம்புட்டு பேரு...

   Delete
 4. 2006 ஆம் வருடம் சென்றோதுடு சரி அதுக்கு பிறகு போகவே இல்லை சூப்பரா இருந்துச்சு இத படிக்கவும் மறுபடி போகணும் என்ற ஆவலை தூண்டுகிறது

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக போகலாம்...உடலும் மனதும் ரிலாக்ஸ் ஆகும்.

   Delete
 5. கோடை விடுமுறையை கழிக்க வந்திருக்கும் கூட்டம்/////////
  கோடை விடுமுறையை கழிச்சுன்னா ஆய் போகவா..?
  நண்பரே களித்து என்று திருத்தவும்..!

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனானி...உங்க ஊருல இப்படித்தான் கோடை விடுமுறையை கழிப்பீங்களா...சாரி...களிப்பீங்களா...?

   Delete
 6. சுற்றிப்பார்த்ததை விளக்கியதைவிட பின்னால் சொல்லியிருக்கும் ஆலோசனைகள் அருமை... தொடருங்கள்...

  ReplyDelete
 7. பிளாக் தண்டர்.... சில முறை பிளாக் தண்டர் வழியாகச் சென்றதுண்டு. உள்ளே செல்லும் ஆர்வத்தினை தூண்டி விட்டது உங்கள் பகிர்வு.....

  ReplyDelete
 8. Very soon this website will be famous among all blogging users, due to it's fastidious posts

  Look into my site: landing page design

  ReplyDelete
 9. பிளாக் தண்டரில் குளித்த எபக்ட் கிடைத்தது... இன்னும் கொஞ்சம் படம் போட்டுருக்கலாம்... !!

  ReplyDelete
  Replies
  1. உள்ளே கேமரா எடுத்துட்டு போகல..குளிக்கும் போது அதை வேறு கவனமாக பார்த்துக்கொண்டிருக்கனும்...

   Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....