Saturday, April 6, 2013

கோவை மெஸ் - நாசி லெமக் ( NASI LEMAK ), மலேசிய உணவு வகை

நாசி லெமக் ( Nasi lemak).
மலேசியாவின் ஃபேமஸான உணவு இந்த நாசி லெமக்.இதைப்பத்தி அதிகம் தெரியல.ஒரு முறை மலேசியா செல்லும் போது ஏர் ஆசியா விமானத்தில் மெனு கார்டுல இந்த உணவு வகையை பார்த்திட்டு இருந்தோம்...மதிய வேளை வேற...அப்பப்ப விமானத்தின் பணிப்பெண்கள் குறுக்கும் நெடுக்கும் நடந்து விட்டு இருந்ததில் நமக்கு பசியை உண்டு பண்ணியிருந்தனர்....பசி வயித்தைக் கிள்ளுது...பாவை அவர்களின் நடை உடை நம்ம மனசைக் கொல்லுது...அட....டி ஆர் மாதிரி வருதே....சரின்னு அம்மணிகளை வரச்சொல்லி சாப்பிட ஆர்டர் செய்தோம். (அம்மணிகள் பக்கத்துல வரவே பசி பத்தும் பறந்து போச்சு...ஹிஹிஹி...)எதுக்கு இதை ஆர்டர் பண்ணினோம்னா இந்த மெனுவில் தான் சாதம் இருந்தது.கொஞ்ச நேரம் அழகான ராட்சசிகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம் எப்போ வரும்... வருவார்கள் என்று....
ஒரு தள்ளுவண்டியில் ஒய்யாரமாக நடை நடந்து வந்து கொண்டிருந்தனர்.நம் அருகே வந்ததும் குயில் கூவ ஆரம்பித்தது...பார்த்துக்கொண்டே பக்குவமாய் உணவை வாங்கினோம்...
நம்மளை போலவே அவர்களின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து இருக்கை நபர்களின் பசியை போக்க பாவை நகர்ந்து செல்லவே.... பசியானது அதிகரிக்க ஆரம்பித்தது...உடனே பிரிக்க ஆரம்பித்தோம்....வாசனை மூக்கைத்துளைக்கிறது...
 
ஏர் ஆசியா கஃபே என்கிற பெயரில் சின்ன பாக்சில் தான் தருகிறார்கள்.மிதமான சூடு இருந்தது.உணவுகள் குறைவாக இருந்தது..தேங்காய் பாலில் வேகவைக்கப்பட்ட சாதம், அவிச்ச அரை முட்டை, சில பொறித்த மீன்கள் (நம்மூர் நெத்திலி போல ), சிக்கன் துண்டுகள் கிரேவியுடன், சம்பல் எனப்படும் சில்லி இறால் சாஸ், கொஞ்சம் பொறித்த நிலக்கடலை...
முதல் முதலாய் அயல்நாட்டு வகை உணவினை சுவைப்பதில் ஒரு ஆர்வம்.அதுவும் விமானத்தில்..மிக சுவையாக இருந்தது.அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு சுவையைத் தந்தன.சாதமும் சிக்கன் கிரேவியும் செம காம்பினேசன்.சாஸ் இன்னும் நன்றாக இருந்தது. என்ன காம்பினேசனோ தெரியவில்லை...நிலக்கடலை அவ்வளவு சுவையாக இருந்தது.
உணவுகள் சுத்தமாய் பத்தவில்லை..ஆயினும் ருசியால் பசி அடங்கியது. ஆரஞ்சு ஜூஸ் தாகத்தை தணிக்க  உணவினை காலி பண்ணினோம்....
உணவுகள் குறைவாக இருந்தாலும் விலை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.(பின்னே...10000 அடி உயரத்திற்கும் மேல சாப்பிடறோம்....ரேட்டு என்ன குறைவாகவா இருக்கும்...) ஆனால் செம டேஸ்ட்..
அதுக்கப்புறம் மலேசியா இறங்கிட்டு கெந்திங் ஹைலேண்ட்ஸில் மறுபடியும் நாசி லெமக் ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன்.முதல் முறை விமானத்தில் இருந்த சுவை மீண்டும் காணாமல் போய் இருந்தது.ஆனால் நன்றாக இருந்தது..ஆப்பாயில், வெள்ளரி, என புதிதாய் இருந்தது..



இந்த உணவு வகை பற்றி நிறைய அறியணும்னா விக்கி பீடியா போங்க..எவ்ளோ டீடெயில்ஸ்...

சமீபத்தில் தான் ஃபேஸ்புக்கில் நமது நண்பர்கள் பகிர்ந்து இருந்தனர் இந்த உணவு பற்றி.அதனால் தான் இந்த பதிவு.



நேசங்களுடன்
ஜீவானந்தம்.

17 comments:

  1. ‘நாசி லெமே’ என்றால் மலாய்க்காரன் உயிரை விட்டுறுவான்.
    எனக்கு அவ்வளவாக பிடிக்காது.

    ReplyDelete
    Replies
    1. சார்...சூப்பரா இருக்கு...

      Delete
  2. ஓ எரோப்ளேனில் கிடைத்ததா..!!! நாமே சமைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா..ஒரு நாள் உங்க வீட்டுக்கு வந்திடறேன்...

      Delete
  3. நாசி லேமக்விட எனக்கு நாசி கடோக் தான் ரொம்ப பிடிக்கும் முடிந்தால் ட்ரை பண்ணி பாருங்க..

    ReplyDelete
    Replies
    1. டிரை பண்ணலாம் நண்பரே...கடோக்னா என்ன

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. சுவை 'நாசி லெமே' லிருந்து வந்த மாதிரி தெரியலையே.. வழக்கம்போல் அம்மணிகள் புராணம் கொஞ்சம் தூக்கலா இருக்கு..

    (கீழே உள்ள போட்டோ எடுக்கறதுக்காக எதிரில் இருந்தவன் ரெண்டு நிமிஷம் சாப்பிடாம எச்சில் விட்டுகிட்டு உக்கார்ந்திருந்ததை பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லியிருக்கலாம்.. ;-))

    ReplyDelete
    Replies
    1. ஏன் மச்சி....உண்மைய சொல்லு...நீ அந்த அரை டிரவுசர் அம்மணிய தானே பார்த்துட்டு இருந்த...

      Delete
  6. Replies
    1. ஆமா தி.த...நன்றாக இருக்கும்

      Delete
  7. புதுசா தெரியலை..ஆனா ருசியா இருக்கும் போலத் தெரியுதே!

    ReplyDelete
  8. 10,000 அடி உயரத்தில் அது தான் ஸ்பெஷல் !

    ReplyDelete
  9. ஆயிரம் கேலோரிக்கு மேலிருக்கும் போலிருக்குதே! பார்த்தாலே பசி தீரும் :)

    ReplyDelete
  10. கம்மி தான்...567 கலோரி

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....