Monday, April 8, 2013

திருநங்கை சங்கீதாஏப்ரல் - 15, திருநங்கைகள் தினம்: 

                ரோட்டில் நாம் நடந்து செல்லும் போது கடந்து செல்லும் அரவாணிகளை கண்டால் அசூயை அடைவது உண்டு.காரணம் அவர்களை நாம் ஒரு மனித பிறப்பாக ஏற்றுக் கொள்வதில்லை.அவர்களின் நடை, பேச்சு, உடை செயல் என அனைத்தையும் கேலி செய்து அவர்களை காட்சிப் பொருள் ஆக்குகின்றோம்அப்படி புறக்கணிக்கப் பட்டதின் விளைவாகத்தான் அவர்கள் பாலியல் தொழில், பிச்சை எடுப்பது என தடம் மாறி விடுகின்றனர்.

சமூகம் புறக்கணிக்கப்பட்டதின் விளைவாக தற்கொலை செய்து கொண்ட அரவாணிகள் எத்தனையோ பேர். அப்படிப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு தைரியமிக்க திருநங்கைதான் இந்த சங்கீதா.மூன்றாவது பாலினமாக இருக்கிற இந்த அரவாணிகளின் வாழ்வில் ஒளியேற்ற கோவை மாவட்டத்தில் பிறந்தவர் தான் இந்த சங்கீதா.
 

கடைகளில் கைதட்டி பிச்சை எடுக்கும் பல்வேறு அரவாணிகளுக்கு மத்தியில் சொந்தமாய் சமையல் வேலை செய்து இந்த சமூகத்தில் தனக்கென ஒரு மதிப்பையும் மரியாதையும் கொண்டு இருக்கிறார்.
                   இவர் கோவை மாவட்ட தாய் விழுதுகள் அமைப்பின் அரவாணிகள் சங்க தலைவராக கடந்த வருடம் வரை இருந்தார்.இப்போது உறவுகள் என்னும் அமைப்பினை தோற்றுவித்து அரவாணிகள் மட்டுமன்றி பொதுமக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேசன் கார்டு பெற்று தருவது, உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் அரவாணிகளுக்கு மருத்துவ சிகிச்சை ஏற்பாடு செய்வதும், அரசின் மக்கள் நலத்திட்ட உதவிகளை தகுதியான நபர்களிடம் கொண்டு சேர்ப்பதுஎன பல்வேறு சமூக உதவிகளையும் தன்னால் முடிந்த அளவிற்கு செய்து வருகிறார்.
                          எத்தனையோ அரவாணிகளுக்கு மத்தியில் இவர் ஒரு சாதனை மிக்க பெண்மணி என்பது ஆச்சரியமே..திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக தன்னலம் கருதாது சேவை செய்து வரும் சங்கீதா அவர்கள்  கோவையில் மார்ச் மாதம் மகளிர் தின விழாவில் சிறந்த சமூக சேவகி விருதினை பெற்று இருக்கிறார்.

              தற்போது சங்கீதா கேட்டரிங் சர்வீஸ் என ஆரம்பித்து வெற்றி நடை போட்டு வருகிறார்.இவரின் கைகளில் நள மகராஜனே குடி கொண்டுள்ளார்.இவர் செய்யும் பிரியாணியை சாப்பிட்டவர்கள் நிச்சயம் இவரை மறக்கமாட்டார்கள்..அந்த அளவுக்கு மிகுந்த சுவையுடன் செய்து தருவார்.அசைவத்தில் இவர் அனைத்து வகைகளும் மிக சிறப்பாய் செய்வார்.அதுபோலவே சைவத்திலும் மிக அற்புதமாக சமைக்கிறார்..
                               இவரின் கைமணம் உங்களின் வீட்டு விசேசத்தில்  இடம்பெற வேண்டுமா…அல்லது இவரை பாராட்டி வாழ்த்தணுமா…. அழையுங்கள்…. 
20 பேர் முதல் 2000 பேர் வரை சாப்பிடும் அளவிற்கு திறம்பட சமையல் பணி புரிவார். (மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் )
(மாண்புமிகு அமைச்சர் அவர்களுடன் )
 (மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் )
                                     திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15 அன்று இவர்களை வாழ்த்தி சமூகத்தில் இவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பினை உண்டாக்குவோம் என்று நாமும் உறுதி மொழி ஏற்க வேண்டும். சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இனமான திருநங்கைகளுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்வோம்
                            இவர் கிட்டத்தட்ட எனக்கு அறிமுகம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது.எனது எல்லா குடும்ப நிகழ்வுகளிலும் இவரின் கைப்பக்குவம் இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள், வீட்டு விசேசங்கள், கிடாவெட்டு என எல்லா நிகழ்வுகளிலும் இவரே தான் சமையல் செய்து வருகிறார்.
இவரின் தொடர்பு எண் - 98947 71132
சங்கீதா கேட்டரிங் சர்வீஸ், சாய்பாபா கோவில், கோவை

நேசங்களுடன்
ஜீவானந்தம்28 comments:

 1. ம்
  தகவலுக்கு நன்றி மாப்ள

  ReplyDelete
 2. முதமுதல்ல ரொம்ப நல்ல செய்தி கோவை நேரத்தில... தொடருங்கள்....

  ReplyDelete
  Replies
  1. என்னாது....முத முதல்லயா.///அப்போ இதுவரைக்கும் போட்டது எல்லாம் வேஸ்டா

   Delete
  2. அப்பாடா, எழில் மேடம், உண்மைய பட்டுன்னு போட்டு உடைச்சுடீங்க ;-)

   Delete
  3. என்னப்பா..ஆளாளுக்கு சொல்றீங்க...

   Delete
 3. சங்கீதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... தகவல்களுக்கு நன்றி...

  நல்ல செய்திகள் தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நீங்களுமா தனபாலன்....நல்ல செய்தி தொடர்கிறேன் இனி....

   Delete
  2. நமக்கு சந்தோசம் என்பதை பகிர்ந்து கொள்வதால் மேலும் நமக்கு சந்தோசம் தானே...?

   தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... அம்மணி என்கிற சொல்லே இந்தப் பதிவில் இல்லை... ஹிஹி...

   ஆனால் சிறப்பான பெண்மணியைப் பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... ஒரே ஒரு சந்தேகம்... சமையலைப் பற்றிய வரிகள் மட்டும் ஏன் சிறிதாக உள்ளன...? அதைப்பற்றிய சிறப்பு பகிர்வு வருமோ உங்கள் பாணியில்...?

   Delete
 4. மாப்ளே, ரெண்டு மூணு தடவை நானே சாப்பிட்டிருக்கேன்.. பிரியாணி சூப்பர்.. மாப்ஸ், உண்மையிலேயே அருமையான பதிவு..

  ReplyDelete
 5. http://kmurugaboopathy.blogspot.in/
  வணக்கம். நான் தங்களின் நீண்ட நாள் வாசகன். ஆனால் கருத்திடுவது இதுவே முதல் முறை. அதிகமான சிரத்தையுடன் ஆவணங்களை திரட்டி செழுமையாக பதிவு வடிவமைக்கப் பட்டுள்ளது. எனது ஒவ்வோரு இரயில் பயணத்தின் போதும் தவறாது திருநங்கை அன்பர்களைக் காண்கிறேன். நலம் விசாரிக்கும் அளவுக்கு நட்பு வளர்ந்துள்ளது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்பரே...ரொம்ப நன்றீ..

   Delete
 6. உங்கள் வீட்டில் சாப்பிட்ட ‘சங்கீதாவின் பிரியாணி’ பற்றி நண்பர்களிடம் கூறி வருகிறேன்.

  அவரது கை பக்குவத்தில் கிடா வெட்டு விருந்து சாப்பிடக்காத்திருக்கிறேன்.

  அவரது சேவையை பதிவுலகம் அறிய வைத்தமைக்கு நன்றி ஜீவா.

  ReplyDelete
  Replies
  1. சார் வணக்கம்...என்னது கிடாவெட்டு விருந்து சாப்பிடவா...?
   வாங்க நாம எல்லோரும் சேர்ந்து ஒரு நாள் செலிபரேட் செய்வோம்.

   Delete
 7. நல்ல செய்தி..! கேட்டரிங் அவசியம் வரும்போது தொடர்பு கொள்வோம் !

  ReplyDelete
 8. மிகச்சிறந்த மனிதரை மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 9. மிகச்சிறந்த மனிதரை மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
 10. மிகச்சிறந்த நபர்களை அறிமுகம் செய்து வைப்பதன் மூலம் கோவை நேரம் அடுத்தகட்டமாக சிறந்த வலைப்பதிவு வரிசையில் (கடைசியில் ) இடம் பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேடம்...எதுக்கு கடைசியில்...

   Delete
 11. கோவை வரும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பிரியாணியை சுவைக்காமல் திரும்பமாட்டேன்.

  ReplyDelete
 12. வலைச்சர வழிகாட்டுதலில் வந்தேன். சங்கீதா அவர்களின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்!... அவர்களைப் பற்றி அளித்த தகவல்களுக்கு நன்றி...

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....