Friday, September 20, 2013

கோவை மெஸ் - நெய்தல், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம், பவர்ஹவுஸ், கோவை

ஒரு மாலை நேரம்...டூ வீலர்ல பவர்ஹவுஸ் ரோட்டு பக்கம் போய்ட்டு இருக்கும் போது காத்துல அப்படியே பொரிச்ச மீன் வாசம் நம்ம நாசியைத் துளைக்கவே ஆட்டோமேடிக்காக கை பிரேக் பிடிக்க ஆரம்பித்தது.இந்த ஏரியாவுல நெய்தல் அப்படிங்கிற தமிழ்நாடு மீன் விற்பனை கூடம் மட்டும் தானே இருக்கு அங்க பச்சை மீன் மட்டும் தானே கிடைக்கும், அப்புறம் எங்க இருந்து வாசம் வருது அப்படின்னு வண்டியை ஓரம் கட்டிட்டு பார்த்தா அங்க ஒரு சில பேர் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க...இதுல அம்மணிகளும் அடக்கம் வேற..அப்புறம் தான் தெரியுது கவர்மென்டே மீன் வளர்ப்பினை ஊக்குவித்து மீன் விற்பனை பிரிவும், மீன் உணவகமும் ஆரம்பிச்சி இருக்கிறது.
இத்தனை நாள் தெரியாமப்போச்சே...அப்படின்னு வருத்தப்பட்டுக் கொண்டே....சரி... நாமும் ஒரு அட்டண்டன்ஸ் போடுவோம்னுட்டு என்ன இருக்குன்னு கேட்க 
மீன் சில்லி, ஃபிங்கர் ஃபிரை, கார்லிக் மீன் ஃபிரை லாம் இருக்குன்னு சொல்ல, ஒரு சில்லியும், கார்லிக் ஃபிரையும் சொன்னேன்.பொரிச்சு எடுக்க கொஞ்ச நேரம் ஆகுமே அதுவரைக்கும் அங்க இருக்குற அம்மணிகளை நோட்டம் விடறதுக்கு பதிலா பக்கத்துல இருக்கிற நெய்தல் விற்பனை இடத்தினை பார்ப்போம் என அங்க ஒரு எட்டு வைச்சேன்..
விற்பனைக்கூடம் மிக அலங்காரம் செய்யப்பட்ட தோற்றத்தில் நம்மை வரவேற்கிறது.பார்க்கவே பளிச்சென இருக்கிறது.உள்ளே பார்க்கையில் நிறைய மீன்கள் பிரெஷாய் குளிர்பதன பெட்டியில் வாடிக்கையாளரை வரவேற்று வழி மீது விழி வைத்து காத்துக்கொண்டிருந்தன கூடவே விற்பனையாளரும்...பாறை, கட்லா, ரோகு நெய்மீன் போன்றவை அலங்கரித்துக்கொண்டு இருந்தன குளிர்பதன பெட்டியை...
அரசே நிர்ணயித்தவிலை அதனால் விலையும் குறைவாகத்தான் இருக்கிறது. 


நம்ம பதிவுக்கு போட்டோ எடுத்துக்கொண்டிருக்கையில் பொரிச்ச மீன் ரெடியானதுக்கான அழைப்பு வரவே கால்கள் இடம் பெயர்ந்தன.



கார்லிக் மீன் துண்டு செம டேஸ்ட்.என்ன மசாலாவென தெரியவில்லை அம்புட்டு டேஸ்டாக இருக்கிறது.சாப்பிட சாப்பிட சுவை அதிகரித்துக் கொண்டேயும் மீனின் அளவு குறைந்து கொண்டேயும் இருக்கிறது.மிக சூப்பராக இருக்கிறது.அதே போல் விலையும் குறைவாக இருக்கிறது.மீன் சில்லி எப்பவும் போல ஒரே சுவை தான்.நெய்மீன் போட்டு தயாரித்து இருக்கிறார்கள்.ஓகே ரகம்..


மாலை நேரம் கொஞ்சம் மங்க ஆரம்பித்தவுடன் கூட்டம் கூட ஆரம்பிக்கிறது.காலையில் இருந்தே வியாபாரம் நடக்கிறது.அவ்வப்போது வருவதும் போவதுமாக வாடிக்கையாளர்கள் இருக்கின்றார்கள்...
பிரெஷ் மீன் வாங்கவும் கூட்டம் காலையில் அலை மோதுகிறது.மாலை வரைக்கும் விற்பனை இருக்கிறது.
மத்த இடங்களில் இருக்கும் விலைகளை விட இங்கு குறைவாக இருக்கிறது.நம்ம பங்காளிகளுக்கு ஏற்ற இடம்.
மேம்பாலத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் பவர்ஹவுஸ் ரோட்டில் இடது புறம் இருக்கிறது.
வேலை நேரம் - காலை 10.30 டூ  2.30 மாலை 4.30 டூ 9.30 

நேசங்களுடன்
ஜீவானந்தம்

20 comments:

  1. Replies
    1. சார் உங்க ஊர்ல பிரியாணி தவிர கடல் உணவுகள் கிடைக்க மாட்டிக்குது..வஞ்சிரம் மட்டும் தான்...

      Delete
  2. ஐ. நம்ம ரெகுலர் கடை.. செம்மையா இருக்குமே..

    ReplyDelete
    Replies
    1. மச்சி..இங்க வந்து இருக்கியா...அன்னிக்கு வீட்ல சாப்பிட்ட மீனும் இங்க வாங்கினது தான்...

      Delete
  3. ‘நெய்தல்’ என்ற பெயரில், விற்பது எல்லாமே ‘ஆற்று மீன்கள்தானா’!

    ReplyDelete
    Replies
    1. சாத்தனூர் டேம் மீன்கள்...

      Delete
    2. நாம அன்னிக்கு போனோமே கட்டளைக்கு, அங்க இருந்த மீன்கள் தான் ஆற்று மீன்கள்..ஜிலேபி, மீசைகெளுத்தி, விராள் போன்றவை..
      மீண்டும் போகலாம் சார்...

      Delete
  4. கொடுத்து வைச்ச ஊருய்யா ,,, இங்கும் தான் இருக்கே ...

    ReplyDelete
    Replies
    1. வாய்யா...ஒரு நாளைக்கு...சாப்பிடலாம்....சென்னைல பீச் ஓரமா உட்கார்ந்து மீன் சாப்பிட எவ்ளோ டேஸ்டா இருக்கும் தெரியுமா...

      Delete
  5. Jeeava which area you are from

    ReplyDelete
    Replies
    1. நான் கோயம்புத்தூர்க்காரனுங்க...

      Delete
  6. சரியான சாப்பாட்டு ராமன் போல... ஹஹ

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லிட முடியாது..ஆனா சாப்பிடுவேன்..நான்வெஜ்...

      Delete
    2. சாப்பிடுவேன்..நான்வெஜ்.

      கொழப்பா இருக்கே நீங்க வெஜ்ஆ ?
      நான் வெஜ் ஆ?

      Delete
  7. இப்படில்லாம் போட்டு, மத்தவங்க வயித்தெரிச்சல இழப்பகூடாது...

    ReplyDelete
    Replies
    1. ஏங்க.....ஏன்....? நீங்களாம் பார்த்து இங்க வரணும்னு தான்...

      Delete
  8. ருசி கூடுகிறது மீன் துண்டின் அளவு குறைகிறது.. ஷப்ப்பா கவிதையாய் இருக்கிறது மீன் மணம்

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா...வருகைக்கு நன்றி....

      Delete
  9. படங்கள் அனைத்தும் மணம் வீசின!

    ReplyDelete
  10. எங்க ஊருலயும் இப்படி ஒரு கடை இருக்கு. ஆனா, ருசி எப்படி இருக்குன்னுதான் தெரியலை

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....