Thursday, September 5, 2013

சமையல் - அசைவம் - ஆட்டுக்கால் சூப் (SOUP)

போன வாரம் நம்ம வீட்டுல எல்லாருக்கும்  சளி இருமல்ன்னு வந்திடுச்சி அடிக்கடி கிளைமேட் மாறிப்போனதால வந்த வினையா இருக்கலாம்  .நமக்கு பகார்டில ஒரு கட்டிங் விட்டா சரியாகிடும்.ஆனா நம்ம அம்மணிக்கு, குழந்தைக்கு அப்படித்தர முடியாதே...அதனால ஆட்டுக்கால் சூப் குடிச்சா சளி இருமலுக்கு நல்லதுன்னு சூப் ரெடி பண்ண ஆரம்பித்தேன்.கடைக்கு போய் நல்லா நெருப்புல வாட்டின காலா வாங்கிட்டு வந்தேன்.(அங்கயே கட் பண்ணி வாங்கிட்டேன்.).உடம்புக்கு, எலும்பு வலிமைக்கு ஏத்த சூப் இது.


செய்முறை சொல்லிடறேன்.

வேண்டிய பொருட்கள்:
ஆட்டுக்கால் – 4
இஞ்சி பூண்டு நசுக்கியது - சிறிதளவு
மிளகு - கொஞ்சம்
சீரகம் - கொஞ்சம்
மல்லி - சிறிது
வெங்காயம் - 3
தக்காளி – 3
பச்சை மிளகாய் - 2
மல்லித்தூள்- சிறிது
மிளகாய்த்தூள்- சிறிது
மஞ்சள்தூள் - சிறிது
பட்டை கிராம்பு சோம்பு - கொஞ்சம்
உப்பு  - தேவையான அளவு
எண்ணை - தேவையான அளவு
கொத்தமல்லி தழை – தூவ







காலை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்த்தும் பட்டை கிராம்பு சோம்பு, பொடித்து வைத்திருக்கும் மிளகு சீரகம் தனியா இவைகளைப் போடவும்
வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்
கழுவிய ஆட்டுக்காலை போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.
மல்லித்தூள் மிளகாய், மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்கவும்.
உப்பு சேர்த்து தேவைக்கும் அதிகமாகவே நீர் ஊற்றி வேக வைக்கவும்.மிளகுத்தூள் சிறிதளவு சேர்த்து விடவும்.
அடுப்பு சிம்மில் இருந்தால் போதும் ஒரு அரைமணி நேரம் நன்றாக கால் வேகும் வரை வைத்து இருக்கவும்.தண்ணீரும் சிறிதளவு குறைந்து விடும்.உப்பின் சுவை அதிகமானால் நீர் சேர்த்து கொதிக்க வைத்துக்கொள்ளலாம்.பின் மல்லித்தழை தூவிவிடவும்.
சுவையான சூப் ரெடி..
கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் மிளகுத்தூளையும் தூவி சாப்பிட்டால் கண்டிப்பாய் ஒரு வித விக்கல் வரும்.அதுதான் சூப்பின் சுவைக்கு கிடைத்த வெற்றி..



எங்க கிராமத்துல விறகு அடுப்பினில் செய்யும் போது முதல் நாள் இரவே பாத்திரத்தில் ஆட்டுக்காலை எல்லா மசாலாக்களுடன் போட்டு வேக வைத்து விடுவர்.அடுத்த நாள் காலை சூப்பினை சிறிது சூடு பண்ணி சாப்பிட செம டேஸ்ட் ஆக இருக்கும்.ஒரு மாலையின் மழைப்பொழுதில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்



21 comments:

  1. ஆஹா நம்ம ஆயிட்டமாச்சே இது.....!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ....இது எல்லாருக்கும் பிடிச்ச அயிட்டம் தான்...

      Delete
  2. ஆகா.... ஆகா.... எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனபாலன்.திண்டுக்கல் வந்தா எனக்கு பிரியாணி வாங்கித்தருவீங்களா...

      Delete
  3. ம்... பாக்கும்போது வாய்ல எச்சி ஊறுதே...

    ReplyDelete
    Replies
    1. பாஸ்...இதுக்கேவா...இன்னும் நிறைய அயிட்டம் இருக்கு...

      Delete
  4. ஆட்டுகால் சூப்...அசைவம் சாப்பிடாத அம்மா உன் காலுக்கு பலம் என்று சிறுவயதில் எனக்காக செய்து கொடுத்தது ஞாபகம் வந்தது. நன்றி ஜீவா.

    ReplyDelete
  5. விளக்கமும் படங்களும் அருமை ! ஜீவா! ஆனால் நான் சைவம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா....சைவத்துல ஒரு சூப் பண்ணிடுவோம்...

      Delete
  6. ஏலக்காய் மற்றும் serai சேர்த்தால் மணம் இன்னும் தூக்கல்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா..இனி சேர்த்துடுவோம்..

      Delete
  7. காலை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.
    >>
    யார் காலை?! சமைக்குறவங்க காலையா?! இல்ல வாங்கி வந்தவங்க காலையா?! இல்ல கறிக்கடைக்காரன் காலையா?!

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேள்வி ? எனக்கும் ஒரு சந்தேகம் வந்தது அடுப்பு பத்த வெக்க சொல்லலையே. சட்டிய அப்படியே வெயில்ல வெச்சு செய்யனுமோ ?

      Delete
    2. குசும்பு....? எங்க ஊருக்கேவா...?

      Delete
  8. இன்று தீபாவளி ஸ்பெஷலாக உங்கள் சூப் செய்முறையை செய்து பார்த்தேன். சூப் சூப்பராக வந்திருக்கிறது. உங்களின் மற்ற அசைவ செய்முறைகளையும் அடுத்து செய்து பார்க்க வேண்டும். நன்றி

    ReplyDelete
  9. அருமையான விவரிப்பு. கண்டிப்பாக இன்னைக்கு பண்ணிடறேன். பால் சுறா கருவாட்டு குழம்பு வைத்தேன். சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....