Friday, September 13, 2013

கோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை

                 ஒரு மதிய வேளை நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும் போது பிரியாணி பத்தி பேச்சு வந்தது.நல்லா டேஸ்டா சாப்பிடனும் எல்லா பக்கமும் சாப்பிட்டாச்சு நம்மூர்ல வேற இருக்கா எங்காவது போலாமா அப்படின்னு கேட்டதற்கு வெயிட் பண்ணு இரவு 7 மணிக்கு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் அப்படின்னு சொல்ல மதிய சாப்பாட்டினை கொஞ்சம் லைட்டாக எடுத்துக்கொண்டு இரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.சாயந்திரம் ஆகவும் நண்பருக்கு போன் போட அவர் நமக்கு முன்னே காத்துக் கொண்டிருந்தார்.காந்திபுரத்தில் அவரை பிக்கப் பண்ணிக்கொண்டு டவுன்ஹால் நோக்கி சிங்கம் சீறிக் கொண்டிருக்க அப்பொழுதுதான் இந்த பிரியாணி பத்தி பேசினார்.
 
இது ஒரு தள்ளுவண்டிக்கடை.கடை போட்டிருக்கும் பையன் முஸ்லிம் அன்பர்.இவரு பல வருசமா நம்ம நண்பரோட சித்தப்பா கடையில் வேலை செஞ்சிட்டு இருக்காராம்.இப்போ சொந்தமா பிரியாணி கடை போட்டு இருக்கார் என்றும், முக்கிய விசேசங்களுக்கு பிரியாணி செய்து தருபவராகவும். பகல் நேரங்களில் ஆட்டோ  ஓட்டுவதும், அவ்வப்போது சித்தப்பா கடையில் வேலை செய்வதும் என பல முகங்களை கொண்டிருக்கிறார்.சித்தப்பா வீட்டு விழாக்களில் இவரின் கைமணத்தின் சுவையான பிரியாணி சப்ளை செய்யப்படுமாம்.அப்போ சாப்பிட்டு இருக்கேன்.இப்போ புதுசா கடை திறந்திருக்காப்ல.
பிரியாணி கடை ஆரம்பித்து ஒரு மாதம் தான் ஆகுது சீக்கிரமாய் விற்றுத் தீர்ந்து விடுகிறது என்றும் சொல்லவும் கலக்கத்தில் நண்பரை பார்க்க அவரோ ஒரு போன் போட்டு நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம் 6 பிரியாணி எடுத்துவைக்கவும் என சொல்லிவிட நமக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.சிங்கமும் சீரா போக ஆரம்பிச்சது.மேலும் பிரியாணி செம டேஸ்டா இருக்கு அதனால நானும் வாரங்களில் மூன்று தினங்கள் வந்து விடுகிறேன் காந்திபுரத்தில் இருந்து பஸ் பிடித்து என சொல்லவும் நம்ம சிங்கம் வெரைட்டி ஹால் ரோடு வரவும் சரியாக இருந்தது.
காரினை பார்க் செய்து விட்டு நடக்க ஆரம்பிக்கையில் மெலிதான தூறல் இட மிக ரம்மியமான இரவுப்பொழுதாக இருந்தது.V.H ரோட்டில் ஒரு கட்சி பேனருக்கு அடியில் விளக்கொளியில் தள்ளுவண்டி மின்னிக்கொண்டிருந்தது.AKF  என்கிற பெயர் பொறித்த கடையின் பிரியாணி வாசம் அந்த இடத்தினையே துவம்சம் செய்து கொண்டிருந்தது.தள்ளுவண்டி கடையினை சுற்றி கூட்டம் இருக்கவே, வாசம் நோக்கி முன்னேறிச்சென்ற எங்களைப்பார்த்ததும் புன்முறுவலோட வரவேற்ற நம் முஸ்லிம் அன்பரின் தந்தையும் தங்கையும் பிரியாணியை ஒரு பிளேட்டில் போட்டுத்தர இளம் சூட்டுடன் பிரியாணி மணம் மூக்கைத்துளைக்க கையில் வாங்கி ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட ஆஹா என்ன டேஸ்ட்...
மிக பக்குவமான சமையல்...மிக  நன்றாக இருக்கிறது.பிரியாணி அரிசி மிக சுவையுடன் நன்றாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அருமையாக இருக்கிறது.
மெல்லிய தூறலில் இளம் சூட்டில் மிதமான காரத்துடன் சாப்பிட என்ன ஒரு ரம்மியம்.ஒரு பிளேட் பிரியாணி நம் மனசையும் வயிறையும் நிறைத்து விடுகிறது.சில்லி சிக்கன் இதற்கு செம காம்பினேசனாக இருக்கிறது.அதுவும் செம டேஸ்ட் உடன் இருக்கிறது.விலை குறைவுதான்.சிக்கன் பிரியாணி ரூ 50 தான்.நல்ல பெரிய சிக்கன் பீஸ் உடன்.
இவர் பிரியாணி தரும் போது பிரியாணியும் தனியாக வறுவல் செய்த கோழியும் பிளேட்டில் இட்டு தருகிறார்.காரணம் கேட்ட போது முழு பீஸ் கிடைக்காது உடைந்து விடும் என்றும் தனியாக தந்தால் உடையாது என்றும் சொல்லி பிரியாணி வெறும் குஸ்கா இல்லை அதிலும் இறைச்சியினை கொஞ்சம் கலந்து விட்டுத்தான் செய்வேன் என்று ரகசியத்தினை உடைத்தார்.
இவர் இப்போ வச்சி நடத்துறது தள்ளுவண்டிக்கடைதான்.உட்கார்ந்து சாப்பிட இடம் இருக்காது.நின்னுகிட்டே தான் சாப்பிடனும்.அதுமட்டுமல்ல சிக்கன் பிரியாணி தான் இப்போ செஞ்சிட்டு இருக்காரு.ஆர்டரின் பேரில் மட்டன் பிரியாணி செஞ்சு தருவார்.கூடிய சீக்கிரம் கடைக்கு மாற்றல் ஆயிடுவார்னு நினைக்கிறேன்..நல்ல கூட்டம்..வாழ்த்துகிறேன்..சீக்கிரம் இடம் பெயர...நல்லா சாப்பிட்டு விட்டு வரும்போது வீட்டுக்கு பார்சல் வாங்கிட்டு வந்தேன்.வீட்ல நம்ம அம்மணி சொன்னது பிரியாணி சூப்பருங்கோ...

பிரியாணி மிக நன்றாக இருக்கிறது.ஆர்டர் வேண்டுமென்பவர்கள் வீட்டிற்கோ விசேசத்திற்கோ இவரிடம் முன்னே சொல்லிவிட்டால் சரியான நேரத்திற்கு தந்து விடுவார்.
ஆர்டர் எடுக்க - Shaffi - 99945 19550

நேசங்களுடன்
ஜீவானந்தம்


16 comments:

  1. அடடா... ரகசியம் தெரிஞ்சி போச்...!

    ReplyDelete
  2. பிரியாணியை சுவைக்கும் தகுதி எனக்கில்லை! என்றாலும் உங்கள் பதிவை சுவைக்கும் தகுதி எனக்குண்டு! அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா...உங்களுக்காக சைவம் ரெடி பண்ணிட்டு இருக்கேன்.

      Delete
  3. நீங்க பதிவுல வசியம் வைத்து எழுதும் ரகசியம் என்ன? நண்பரே, பிரியாணி சாப்பிடாத புலவர் அய்யாவிற்கும் பிடித்து போனது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கே.கே..
      என்ன...கொஞ்சம் பட்டை கிராம்பு சேர்த்து தான்

      Delete
  4. இதுப்போன்ற சின்ன சின்ன ஹோட்டல்களில் காலை டிஃபன் மட்டும்தான் சுவையா கிடைக்கும்ன்னு நினைச்சுட்டு . ஆனா, அசைவ உணவு கூட சுவையா இருக்கும்ன்னு இன்னிக்குதான் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி..
      நிறைய கைஏந்திபவன்களில் சுவை நன்றாக இருக்கும்..ஆனால் சுற்றுபுறங்களில் சுகாதாரம் இருக்காது.
      கூடிய சீக்கிரம் இந்த கைஏந்திபவனும் ஒரு கடைக்கு குடியேறும்.அப்போது மீண்டும்....

      Delete
  5. காக்கா பிரியாணி இல்லைதானே

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா காக்கா பிரியாணி இல்ல..இது ஒன்றும் 5 ரூவாய் இல்லையே...

      Delete
  6. What time the briyani sales starts and exactly which place in VH road? any landmark nearer? (Like angannan hotel etc.,)

    ReplyDelete
    Replies
    1. மாலை 7 மணி முதல்...அளவாக அவர் பிரியாணி செய்து கொண்டு வந்து விற்கிறார்.சீக்கிரமே தீர்ந்து போக வாய்ப்புண்டு..போக விருப்பப்பட்டால் அவரின் எண்ணினை தொடர்பு கொண்டு புக் பண்ணவும்.
      அங்கண்ணன் , போலிஸ் ஸ்டேசன் தாண்டி எதிர்புறத்தில் ஒரு ரோடு பிரியும்.அதில் முன்பாகவே ஒரு அரசியல் கட்சி பேனர் அடியில் வண்டி நிற்கும்..

      Delete
  7. ஜீவா, பிரியாணியைப் படம் எடுத்தது மட்டுமல்லாமல் அதை சிலாகித்து சொல்லியிருப்பது எனக்கு மனதில் கிளர்ச்சியையும் வயிற்றில் பசியையும் கிளப்பியுள்ளது.... ம்ம்ம்... ஒரு பிடி பிடிச்சிர வேண்டியது தான்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்கூல் பையன்...
      ஒரு நாள் கொண்டு வரச்சொல்றேன்...சாப்பிடலாம்.

      Delete
  8. அன்பின் கோவை நேரம் - பிரையாணியை இரசிச்சுச் சாப்பிடர மாதிரியே பதிவைனையும் இரசிச்சு எழுதி இருக்கீங்க - பதிவு நன்று - படங்கள் சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ( நான் பிறவிச் சைவம் )

    ReplyDelete
  9. பார்த்து காக்கை பிரயாணி யா இருக்கபோகிறது !!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....