அம்மா....அந்த அம்மா இல்லை...என் சொந்த அம்மா... நான் பிறந்த கிராமத்துல ஒரு நாள் எதேச்சையா என்னோட அம்மாகிட்ட பேசிட்டு இருக்கும் போது அவங்க பிறந்த நாளைப்பத்தி சொன்னாங்க.அப்போதான் உரைச்சது நமக்கு.இதுவரைக்கும் ஏன் மறந்து போனோம் என்று மனம் வலித்தது.நாம மட்டும் வருசம் வருசம் தவறாம கொண்டாடுறோம்.அதே மாதிரி மனைவியோட பிறந்த நாள், அவங்க காதலியா இருக்கிற போதும் கொண்டாடி இருக்கிறோம்.இப்போ குழந்தைகள் ஆன பின்னாடி அவங்க பிறந்த நாளை கொண்டாடிட்டு இருக்கோம்.நம்ம கூட இருக்கிற நண்பர்களோட பிறந்த நாளை மறக்காம ஞாபகம் வச்சி கொண்டாடுகிறோம்.போன்லயோ, நேரிலோ இல்லேனா மெயில் ஃபேஸ்புக் இப்படி என்னென்ன வழிகள் இருக்கோ அத்தனைலயும் வாழ்த்துக்கள் சொல்லிடறோம்.ஆனா நம்மை பெற்ற தாய் பிறந்த நாளை கொண்டாடுகிறோமா இல்லேனா ஒரு வாழ்த்தாவது சொல்லி இருப்போமா என்று அன்னிக்குத்தான் மிக அதிகமாக வருத்தப்பட்டேன்.இப்போ சமீபத்துல அவங்க பிறந்த நாள் வர்றது தெரிஞ்சவுடன் கிராமத்துல இருக்குற அம்மாவிற்கு ஆனந்த அதிர்ச்சியினை அளிக்கலாம் என்று சொல்லாமலே கிளம்பினோம் வீட்டிற்கு.
கரூர் சென்று சின்னதாய் அவர் பெயர் பொறித்த கேக் மற்றும் இன்ன பிற ஸ்வீட் வாங்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தோம்.என்னடா திடீர்னு சொல்லாம கொள்ளாம வர்றீங்க என சந்தோசத்தில் திக்கு முக்காடின அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு கேக் வெட்ட சொன்னோம்.
தன் வாழ்நாளில் முதன் முறையாக பிறந்த நாள் கேக் வெட்டும் அம்மாவை பார்த்த போது அவர்கள் இனி மேல் எதுக்குடா இதெல்லாம் என்று கேட்டாலும் சந்தோசத்தில் திக்குமுக்காடிய அவர்களின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரவே இல்லை ஆனால் அவர் கண்களில் வெளியேறின கண்ணீர் மட்டும் மிகப்பெரும் ஆனந்தத்தை, அளப்பரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது..வெட்டிய கேக் துண்டுகளை அவருக்கு ஊட்டிய போது ஏற்பட்ட மகிழ்ச்சியினை விவரிக்க வார்த்தைகளே இல்லை.என் மகள் ஹேப்பி பர்த்டே வாழ்த்து பாடியபடியே அவருக்கு கேக் ஊட்ட இன்னும் மெலிதாகிப்போனது மனது.இந்த தருணம் என் வாழ்வில் மிக அரிதானதாகும்.இவ்வளவு நாள் எப்படித்தொலைத்தோம் என்கிற கேள்வி மட்டும் மனதை நெருடியது.
இத்தனை வருடம் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் என்று தோணலாம்.கிராமங்களில் இது போன்ற பிறந்த நாள் நிகழ்வுகள் அரிதானவை.அதுமட்டுமல்ல…சினிமாவி ல் மட்டுமே பார்த்து ரசித்த பிறந்தநாள் விழாக்கள் ஆடம்பரமாக தெரிந்தனவே தவிர அதில் இருந்த அன்பு தெரியாமல் போய்விட்டது.வீட்டிற்கே தொலைக்காட்சி வந்தவுடன் தான் இந்த மாதிரி நிகழ்வுகள் தெரிய ஆரம்பித்தன.பணம் காசு புரள ஆரம்பித்தவுடன் தான் நடுத்தர வர்க்கத்தினரும் கொண்டாடினர்.எதுவும் இல்லாத ஏழை பாழைகள் என்ன செய்வார்கள். என்னைப்பொறுத்த வரை எனக்கு எட்டாக்கனியாக இருந்தது பணம், காசு.. கல்லூரி காலத்தில் என் பிறந்த நாளை நானே கொண்டாடினது இல்லை.யாரும் வாழ்த்தியதும் இல்லை.காதல் உண்டான பின்னாடிதான் வாழ்த்து அட்டைகளை பெற ஆரம்பித்தேன்.போனிலே வாழ்த்துச் செய்திகளை கேட்கவும், அவசர கால தந்தி செய்தியினை என் பிறந்த நாளில் வருடம் தவறாது பெறவும் ஆரம்பித்தேன்.அதுமட்டுமல்லாமல் படிக்கிற காலத்தில் நமக்கே காசு கிடைக்காது.அப்புறம் எங்கே கேக் வாங்குவது.எப்படி கொண்டாடுவது..என்னுடைய காலேஜ் வாழ்க்கைக்குப் பிறகு பெறும் போராட்டம்.நிலையான வேலை இல்லாமை, தொடர்ந்த காதல், வீட்டில் எதிர்ப்பு இப்படி நிறைய… அப்படிப்பட்ட சூழ்நிலையில் உழன்று கொண்டிருந்த எனக்கு எப்படி கொண்டாட முடியும்.?
அப்புறம் சொந்த காலில் நின்று பெற்றோர் ஆசி இல்லாமல் காதல் திருமணம் செய்து இன்று ஏதோ ஒரு வகையில் முன்னேறி, அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டோம்.
அதற்கப்புறம் மாதம் ஒரு முறை வீட்டிற்கு செல்வது வாடிக்கையாகிப் போனது.தினமும் அம்மாவுடன் போனில் உரையாடி வசந்த காலத்தினை மீட்டெடுத்து கொண்டிருக்கிறோம்.இனி எங்களின் வருகை எப்போதும் அவர்களுக்கு ஆனந்தமே.அப்படி போன போது தான் அவர்களது பிறந்த நாள் தெரிந்து வருத்தப்பட்டேன்.ஆனால் இன்று கொண்டாடியதில் அனைத்தும் நிறைவேறிவிட்டது. இது போன்ற தருணங்கள் வாழ்வில் மிக அரிதானவை.ஒவ்வொரு வருடமும் எப்பவும் மீட்டெடுக்க முடியாத வசந்த நினைவுகள்.மிக சந்தோசமாக இருக்கிறது.வாழ்க அம்மா...என்றென்றும்...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
பல பழைய நினைவுகளுடன் அம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி ஸ்கூல் பையன்...
Deleteஉங்கள் வாழ்வில் மிகச்சிறந்த தருணம் இதுவே.தாய்க்கும்...தனயனுக்கும்...வாழ்த்துக்கள்.
ReplyDeleteரொம்ப நன்றி சார்...
Deleteநீ இதுபோன்ற விஷயங்கள் செய்யும் போது பெருமையாக இருக்கிறது.. அம்மாவுக்கு என் வாழ்த்துகளையும் பகிரவும்..
ReplyDeleteரொம்ப நன்றி மச்சி,...
Deleteவாழ்த்துகிறேன்.
ReplyDeleteரொம்ப நன்றி சார்...
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteரொம்ப நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்...
Deleteநெகிழ்ச்சியான பதிவு.
ReplyDeleteஅம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.
ரொம்ப நன்றீங்க...
Deleteஅம்மாவை கொண்டாடும் மகன் மட்டுமே வாழ்வில் முழுமையடைவான் வாழ்த்துக்கள் ஜீவா அம்மாவிற்கும்
ReplyDeleteரொம்ப நன்றி சரளா...
Deleteஉங்களை மகனாய் அடைய ரொம்ப பாக்கியம் செய்த தனபாக்கியம் அம்மா !
ReplyDeleteநன்றி ஜோக்காளி,,,உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியே...
Deleteநெகிழ்ச்சியான தருணம் ஜீவா! மனசு முழுக்க உங்க அம்மாவை போலவே எனக்கும் இதை படிக்கும்போது மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை அம்மாவுக்கு வருடம் தவறாமல் கொடுங்க.
ReplyDeleteகண்டிப்பா அக்கா..இதுவரைக்கும் அவங்க என்னென்ன ஆசைப்பட்டாங்களோ அதெல்லாம் நடத்திடுவேன்,,,
Delete2 வருடங்களுக்கு முன்பு அப்பா தன் பிறந்த நாளுக்கு என் வீட்டில் இருந்த பொழுது இதே போல் நாங்களும் செய்தோம். என் மகள்கள் இருவரும் புதுத்துணி, கேக் என்று அவரை அமர்க்களப் படுத்தி நெகிழச் செய்து விட்டார்கள். எனக்கு விபரம் தெரிந்து என் அப்பா கொண்டாடிய முதல் பிறந்தநாள் அது தான்...!!
ReplyDeleteதங்களைப்போலவே எனக்கு நினைவு தெரிந்து கேக் வெட்டி கொண்டாடியது அன்று மட்டும் தான்..மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டேன்...நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteஇது போன்ற நெகிழ்ச்சியான சம்பவங்கள் வாய்ப்பது மிகவும் குறைவுதான்.குறிப்பாக பெற்றோர்களிடத்தில்அதிகளவு அன்பு இருப்பினும் அதை நாம் அதிகளவில் வெளிக்காட்டுவதே இல்லை. அத்தி பூத்தாற் போல நாம் வெளிப்படுத்துகையில் நாம் இதுவரையில் பார்த்திராத ஒரு குழந்தைத்தனமான அம்மாவையோ/அப்பாவையோ பார்க்கலாம்.நிரம்ப மகிழ்ச்சி. மனதுக்கு மிக நெருக்கமாக உணர்கிறேன் ஜீவா. அவ்வப்போது இது போல எதாவது செய்து கொண்டிருங்கள்.
ReplyDeleteவணக்கம் ராப்ர்ட்...நன்றி வருகைக்கும்,,
Deleteஅம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteரொம்ப நன்றீ சார்..
Deleteநம்ம அம்மா தான என்று யாரும் இப்படி அவர்களுக்கான பிறந்த நாள் திருமண நாள் என்று எதையும கொண்டாட மாட்டோம்.. நீங்க அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிங்க.. உங்களுக்கு நன்றிங்க.
ReplyDeleteநாங்க எல்லாம் இனி நினைத்தாலும் அம்மாவிற்கு எதுவும் செய்ய இயலாத பாவிகள்.. அம்மாவையும் அப்பாவையும் இழந்த பாவிகள்.
நன்றீங்க,,,கவலைப்படாதீர்கள்...அவர்கள் வயதுடைய பெரியவர்களுக்கு சேவை செய்யுங்கள்..அவர்கள் மேலிருந்து சந்தோசப்படுவார்கள்...
Deleteஉண்மைதான் பெற்றவர்களுக்கு சில சமயம் இப்படி நாம் ஏதாவது செய்யும் போது அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே அலாதிதான்! நல்ல செயலை செய்து அதுபோல பலரையும் செய்யத்தூண்டும் வகையில் இருக்கிறது தங்கள் பதிவு! வாழ்த்துக்கள்! பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்து பேசியது மிக்க மகிழ்ச்சியளித்தது நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஸ்...தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியே...
Deleteசென்ற ஆண்டு என் அம்மாவுக்கு 94 வயது நிறைந்த போது வாழ்வில் முதல் முறையாகக் கேக் வெட்டிக் கொண்டாடிய மகிழ்ச்சியான தருணம் நினைவுக்கு வந்தது. மகன்,மகள்,பேரன்,பேத்தி,கொள்ளுப்பேரன்,கொள்ளுப் பேத்தி என வீடு நிறைந்த கூட்டம்!
ReplyDeleteதாயின் மகிழ்ச்சியே நம் மகிழ்ச்சி!
அருமை ஜீவா!
ஆம்..அருமையான தருணம்...தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியே...
Deleteஅன்பு அம்மாவுக்கு அருமைப் பிள்ளையின் கொண்டாட்டப் பதிவே இனிமை..
ReplyDeleteமனம் நிறைந்த இனிய வாழ்த்துகள் தங்கள் அம்மாவுக்கும் உங்களுக்கும்.
வருகைக்கு நன்றிங்க...
DeleteTouching.
ReplyDeleteநன்றி சார்...
DeleteHey...yesterday too was my 64 th birthday.....many happy returns 4 ur mamma.....may GOd bless her.....
ReplyDeleteநன்றி அனானி அவர்களே...அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
Deleteஅன்பின் ஜீவா - பெற்றோருக்குப் பிறந்த நாள் - இது வரை கொண்டாடியதே இல்லை - உடன் பிறப்புகளுக்குப் பிறந்த நாளன்று வாழ்த்துகள் கூறியதோடு சரி - இப்பொழுது தான் பேரன் பேத்திகளுக்கு எல்லாம் வீட்டில் இருந்தாலோ - அல்லது நாங்கள் வசிக்கும் ஊரில் இருந்தாலோ மட்டுமே கேக் வெட்டிக் கொண்டாடுகிறோம். இப்பதிவினைப் படிக்கும் போது தான் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பதே என்ன வென்று தெரியாமலேயே பல ஆண்டுகள் கழித்து விட்டோமே என வருந்துகிறோம். அம்மாவின் பிறந்த நாளன்று விழாவாகக் கொண்டாடியது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteI m very happy to c this type of incident.Any way I too met and spend 1day with u without knowing about.,such a great person.nice to meet u.thnk u
ReplyDelete