Friday, November 22, 2013

பயணம் – சிறுமலை, திண்டுக்கல் மாவட்டம் ( SIRUMALAI, DINDIGUL )

      திண்டுக்கல்லில் இருந்த போது சிறுமலை என்கிற கோடைவாசஸ்தலத்தினை பற்றி கேட்டறிந்தபோது என்றாவது ஒரு நாள் அங்கு போகவேண்டுமென எண்ணிக்கொண்டேன்.திண்டுக்கல்லில் இருந்து 25 கிமீ தொலைவில் இருக்கிற ஒரு மலைகிராமம் தான் சிறுமலை. அதிகளவு சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாத ஒரு கோடை வாசஸ்தலம்.மூலிகைக்கும், முக்கனிகளுள் முக்கியத்துவம் பெற்ற பலா, வாழை இவைகள் அதிகம் விளையக்கூடிய இடம்.ஆனால் மூலிகைகளின் பயன்பாடு பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாத ஊர்.காட்டெருமை மற்றும் பலவித உயிரினங்கள் வாழ்கின்ற ஒரு காடு.ஆரம்பத்தில் இலங்கையில் இருந்து வந்த விடுதலைப்புலிகள் இங்கு ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட இடம் என்றும் கேள்விப்பட்டதினால் சிறுமலை மீது மோகம் வந்தது.சென்றுதான் பார்ப்போமே என்று........ அப்படித்தான் அந்த திருநாள் வந்தது.திண்டுக்கல்லில் அடித்த வெயில் காரணமாக ஒரு பகல் வேளை சிங்கம் சீறிப்பாய்ந்தது சிறுமலை ரோட்டில்...

        வனத்துறை செக்போஸ்ட் தாண்டி சிறிது தூரம் செல்கையில் மலைப்பாதை ஆரம்பிக்கின்றன.வளைந்து வளைந்து செல்லும் பாதை, இருபுறமும் இயற்கை பச்சைப்பசேலென்று...மொத்தம் பதினெட்டு ஹேர்பின் பெண்டுகள் இருக்கின்றன.ஒவ்வொன்றையும் கடக்கும் போது கொஞ்சம் திகிலிடுகிறது.சற்றே குறுகலான ஒரு வழிப்பாதை.எதிரில் வண்டிகள் வந்துவிட்டால் கொஞ்சம் சிரமம் தான்.ஆனாலும் அதிக வாகன நெருக்கடி இல்லாமல் மலைப்பாதை கொஞ்சம் ஃபிரியாகத்தான் இருக்கிறது.






           பதினெட்டு ஹேர்பின் வளைவுகளை கடந்தபின் சிறுமலை என்கிற சிற்றூர் நம்மை வரவேற்கிறது.பசுமையும் கொஞ்சம் இதமான குளிரும் நம்மைப்பரவுகிறது.இங்கே சுற்றிப்பார்க்க எதுவும் இல்லை என்பதே இதன் சிறப்பம்சம்.ஒரே ஒரு போட் ஹவுஸ் இருக்கிறது.அதுவும் ஆள் அரவமின்றி படகுகள் தரையிலே நீந்திக்கொண்டிருக்கின்றன.
பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கிறது படகுகள்..ஒருவேளை கோடை விடுமுறையில் செயல்படுமோ என்று தெரியவில்லை.


             கொஞ்ச  நேரம் அங்கும் இங்கும் உலாவியதில் கண்டுகொண்ட விஷயம் என்னவெனில் அருகே உள்ள தோட்டத்தில் வாழைமரங்களும் பலா மரங்களும் அதிகமாய் இருக்கின்றன.சுற்றியதில் ஏற்பட்ட களைப்பை நீக்க டீ சாப்பிட சென்றோம்.ஒரே ஒரு நீண்ட தெரு இருக்கிறது.இருபுறமும் கிராமத்திற்கே உண்டான வகையில் கடைகள்.மொத்தம் இரண்டோ அல்லது மூன்று ஓட்டல்கள் மட்டுமே இருக்கின்றன.இரவு உணவு வேண்டும் என்றால் முன்பே சொல்லிவைத்தால் தான் ஏற்பாடு செய்வார்கள்.இல்லையேல் 7.30 மணிக்குள் இழுத்து பூட்டிவிடுவார்கள்.விவரங்களை கேட்டப்படியே சூடாய் டீ குடிக்க குளிருக்கு இதமாய் இருந்தது.

           சிறுமலையில் மிகப்பிரசித்தம் சிறுமலைப்பழம் எனப்படும் வாழை.அந்த பழம் மிக டேஸ்டாக இருக்கும் என்பதினால் அந்த பழம் வாங்கி சாப்பிட்டோம்.ஒரு தார் போட இரண்டு வருடம் எடுக்குமாம்.அதனால்தான் இந்த டேஸ்ட் என்றனர் வியாபாரிகள்.அதுபோலவே ஒரு பழத்தின் விலையும் அதிகமாகவே இருக்கிறது.
           தங்க விடுதிகள் என்பது சுத்தமாக இல்லை.பெரும் பெரும் முதலாளிகள் இங்கே தங்குவதற்காக தன் சொந்த இடத்தில் கெஸ்ட் ஹவுஸ் கட்டி வைத்திருக்கின்றனர்.தெரிந்தவர்கள் என்றால் அவர்களிடம் சொல்லி முன்கூட்டியே அனுமதி வாங்கி அவர்களின் விடுதிகளில் தங்கலாம்.அங்கே சென்றபின் தங்க இடம் தேடினால் கிடைப்பது குதிரைக்கொம்பே.அப்படியும் இருக்கிற ஓரிரு கெஸ்ட் ஹவுஸில் தங்க இடம் கிடைத்தால் பாக்கியமே.
              ஐந்து மணி நேரம் அங்கு செலவிட்டபின் மலைப்பாதையில் திரும்பி வரும் போது ஏகப்பட்ட காட்டெருமைகள், குடியிருப்புக்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.ஒரு வளைவினுள் திரும்பிய போது ஒரு பெரிய காட்டெருமை பள்ளத்தில் இருந்து ரோட்டிற்கு வர கொஞ்சம் பயந்தே போனோம்..ஆனால் அது அழகாய் என் கேமராவுக்கு போஸ் கொடுத்துவிட்டு தன் வேலையைப்பார்க்க ஆரம்பித்தது.

சுற்றுலாப்பயணிகள் வருகை இல்லாததால் சோர்ந்து இருக்கிறது இந்த சிறுமலை. இயற்கையை ரசிப்பவர்கள் கண்டிப்பாய் விரும்புவர்.ஒரு நாள் பயணத்திற்கு ஏற்றது.
திண்டுக்கல்லில் இருந்து மினிபஸ் செல்கிறது.சிறுமலைப்பழம் வாங்க வேண்டுமெனில் திண்டுக்கல்லில் தனி மார்க்கெட்டே இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்




18 comments:

  1. சிறுமலையில் வேறென்ன ஸ்பெஷல்ன்னு சொல்லவே இல்லையே.. சாமி சரணம்!

    ReplyDelete
  2. அடுத்த முறை மலை உச்சிக்கு கூடிச் செல்கிறேன்...!

    ReplyDelete
  3. அங்கே உள்ள பழக்கடைகளைப் பார்த்து வியந்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே போயிருக்கீங்களா...

      Delete
  4. சிறுமலையில் வாழைப்பழம் மிகவும் இனிமையானது ! படங்கள் அருமை! உயரம் எவ்வளவு! தெரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப கம்மிதான் உயரம்...

      Delete
  5. வணக்கம்
    திண்டுக்கல் பூட்டுக்கு பிரபலியம் என்றாலும் இயற்கையிலும் பிரபலியம் என்பதை தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்
    வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. சிறுமலை..... செல்ல ஆசை தான்.... பார்க்கலாம்!

    ReplyDelete
  7. சிறு மலை பற்றிய பதிவு அருமை...

    ReplyDelete
  8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  9. I AM S K SUSEENTHRAR FROM SIRUMALAI.
    SIRUMALAI HAS HEIGHT .., IN BETWEEN 1200 TO 1500 MTR..,VARIATION.
    IN THIS PAGE MR.DHANAPALAN HAS WRITTEN WELL ., AS LIKE AS IN SIRUMALAI.

    ReplyDelete
  10. in sirumalai if you need any help call me 8870370777 & 8489037576

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....