Thursday, December 5, 2013

கோவை மெஸ் - ஒரிஜினல் ராவுத்தர் பிரியாணி, திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இருந்த போது அந்த ஊர் முழுக்க ஒரு பிரியாணி கடைக்காக ஒரே விளம்பரம்...எங்க பார்த்தாலும் ஒரிஜினல் ராவுத்தர் பிரியாணி கடை , ஒரிஜினல் ராவுத்தர் பிரியாணி கடை அப்படின்னு திண்டுக்கல்லில் திரும்புன பக்கம்லாம் போஸ்டர் அடிச்சி ஒட்டியிருக்காங்க.இதைப்பார்த்தவுடன் சரி அவரு எப்படித்தான் இருப்பாரு அவரையும் ஒரு கை பார்த்துடலாமே அப்படின்னு அந்தப்பக்கம் போனது ஒரு மாலை வேளை...


புது ஹோட்டலுக்கு உண்டான அமளி துமளி என்றெல்லாம் இல்லை.மிக அமைதியாக இருக்கிறது.கொஞ்சம் பிரமாண்டமான போர்டில் குல்லா போட்ட பெரியவர் சீரியல் செட் வெளிச்சத்தில் மின்னுவதற்கு இன்னும் குறைவான நேரமே இருந்தது.
ஹோட்டலுக்குள் நுழைந்ததுமே இண்டீரியர் அமைப்பு மிக அருமையாக இருக்கிறது.முதலில் பெரிய ஹால் இருக்கிறது.அதனை ஒட்டி தனியாக ஏசி ரூம் வேறு இருக்கிறது.ஏசி ரூமினுள் அமர்ந்தவுடன் பசும் வாழை இலை நம்முன்னே ஆக்ரமித்தது.என்னவென கேட்க உடனடியாக ஒருவர் நோட்டும் பேனாவுமாய் நிற்க, மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தோம்.

                                                                             (ஃபிளாஷ் அடித்த போட்டோ ) 

மட்டன் பிரியாணி அடுத்த நிமிடத்தில் சூடாய் அந்த பசும் வாழை இலையில் வழுக்கிக்கொண்டு விழுந்தது இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்களின் பசிக்கு இரையாகப்போவது தெரியாமலே.சூடான ஆவி பறக்க, பிரியாணி மணம் நாசியைத்துளைக்க, கை தன்னிச்சையாக பிரியாணியின் ஒரு விள்ளல் எடுத்து வாய்க்கு கொண்டுபோக சுவைத்ததில் செம டேஸ்ட்...ஆஹா என்ன சுவை...இந்த ஹோட்டல் பிரியாணி சுவை வேறு மாதிரியாக இருக்கிறது.திண்டுக்கல்லில் இருக்கிற மற்ற பிரபல பிரியாணி கடைகளில் இருக்கிற டேஸ்ட் வேறு மாதிரி.இது ஒருவகையான டேஸ்டில் மிக நன்றாக இருக்கிறது.சீக்கிரம் காலியானது கூட தெரியவில்லை.மீண்டும் இன்னொரு கால் பிளேட் கொண்டுவரச்சொல்லி அதையும் காலி பண்ணினோம்.சைடு டிஷ் வேறு என்ன இருக்கிறது என்று கேட்டு சிக்கன் லாலிபாப் ஆர்டர் பண்ணினோம்.அதுவும் சும்மா கொழுகொழுவென, சிவந்த நிறத்தில் மணத்தோடு நம்முன்னே வர, சுவைத்ததில் சீக்கிரம் இளைத்துப்போனது.மட்டன் கோலா உருண்டை மட்டும் அப்படி ஒன்றும் டேஸ்ட் இல்லை.  

நல்ல சுவை, விலை திண்டுக்கல்லில் இருக்கிற அத்தனை பிரியாணி கடைகளிலும் இருக்கிற ஒரே ரேட் தான்.பிரியாணி நன்றாக இருக்கிறது.அந்தப்பக்கம் போனிங்கன்னா சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு பிடிக்கும்.அப்புறம் கோவைக்கு நம் வீட்டம்மணிக்கு தேவையான பிரியாணி பார்சல் வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.
இந்த ஹோட்டல் நகராட்சி ஆபிஸ்க்கு பின்புறம் இருக்கிறது.இதன் அடுத்த தெருவில்தான் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியும் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

update :
இதன் அருகிலே தலப்பாக்கட்டி பிரியாணி வந்துவிட்டதால் இதன் கடை மூடுவிழா கண்டுவிட்டது வெகு விரைவிலே....
  

21 comments:

 1. ரவுண்ட் கட்டி அடிங்க ஜீவா.... தொடரட்டும் உங்கள் சுவையான உணவுத் தேடல்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே////

   Delete
 2. கோவை வருகையில்
  ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான்
  படங்களுடன் பகிர்வு அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரமணி சார்...திண்டுக்கல்ல இருக்கு இராவுத்தர் கடை.

   Delete
  2. ஓகே...அப்போ அவரை திண்டுக்கல் கூட்டிட்டு போயிட வேண்டியதுதான்...

   Delete
 3. சாப்பிடும் போது கூட இவ்வளவு ரசனை தெரியவில்லை... யம்மாடி எழுத்தில் சுவை கொப்பளிக்கிறது... ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன்...நீங்க சாப்பிடும் போது உங்க சுவை உணர்வை அறிந்தேன்

   Delete
 4. உங்க கூட சாப்பிட்ட இரண்டு பிரபல பதிவர்களை கண்டு கொள்ளாமல் விட்ட குற்றத்திற்கு தக்க தண்டனையாக ‘இரண்டாம் உலகம்’ கூட்டி செல்லப்போகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே நீங்களும் தனபாலனும் பிரபலம்...இன்னும் ஏன் பிரபலப்படுத்திக்கிட்டு./////
   அந்தப்படமா....வேணாம்...அதுக்கு பேசாம இன்னொரு பிரியாணி கடைக்கு கூட்டிட்டு போங்க..

   Delete
 5. ஆஹா.... பார்க்கையிலேயே எச்சில் ஊருது, படித்து பார்த்தவுடன் இப்போவே சாப்பிடனும் அப்படின்னு தோணுது ! ஜீவா, கலக்கறீங்க போங்க !

  ReplyDelete
  Replies
  1. வாங்க பாஸ்....இதுக்கே இப்படியா....

   Delete
 6. ஜீவா, பிரியாணிய சாப்பிட்ட நல்லா இருக்கும்னு தெரியும், படிச்சா கூட நல்ல இருக்கும்னு இன்னைக்குதான் தெரிஞ்சிகிட்டேன், பட்டய கிளப்புறீங்க....

  ReplyDelete
 7. படிக்கவே நாவில்.............ஒரு பார்சல் அனுப்பிக் கொடுத்து உதவ முடியுமா?(கெட்டுப் போனாலும் பரவாயில்லை!)

  ReplyDelete
  Replies
  1. ஒரு நாள் நேரில வாங்க...சாப்பிட போலாம்...

   Delete
 8. வணக்கம்
  அருமையான பகிர்வு... உங்கள் பக்கம் வந்து பதிவை பார்த்த பின் பசி எடுத்து விட்டது...... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரூபன்....வருகைக்கு நன்றி,...

   Delete
 9. appdi onnum perusa illenga andhaa kadaila summmmma.......................

  ReplyDelete
  Replies
  1. சும்மா இல்லைங்க..செம டேஸ்ட்ங்க....இந்தக்கடை சுவை வித்தியாசம் தான்....

   Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....