Monday, December 16, 2013

கோவை மெஸ் - நியூ சென்ட்ரல் சிக்கன் பிரியாணி ஹோட்டல், திருப்பூர்

நியூ சென்ட்ரல் சிக்கன் பிரியாணி ஹோட்டல், திருப்பூர்
            நேற்று நண்பனின் வீட்டு விசேசத்திற்காக திருப்பூர் சென்றிருந்தபோது மதிய உணவிற்காக ஒரு ஹோட்டலில் ஸ்பெசலாய் பிரியாணி ஆர்டர் கொடுத்து இருந்தார்கள்.அதை வாங்கும் பொறுப்பு என்னைச் சேர்ந்ததால் நண்பர்கள் அனைவரும் புடை சூழ அந்த ஹோட்டலுக்கு சென்றிருந்தோம்.காங்கேயம் ரோட்டில் செல்லும் போதே திரும்பின பக்கமெல்லாம் பிரியாணி கடைகள்.காரணம் கேட்ட்தற்கு அங்கு முஸ்லீம் பெருமக்கள் அதிகம் வசிக்கிறார்கள் அதனால் பிரியாணி கடைகள் அதிகம் என்று சொன்னதை கேட்டபடியே வந்ததில் ஒரு கடையின் பெயர் என்னை ஈர்த்தது.பிரியாணி குடோன்.... திருப்பூரில் நூல்களுக்குதான் குடோன் இருக்கும் ஆனால் இங்கு பிரியாணிக்கே குடோன் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்..
       அந்தக்கடையைத் தாண்டி அருகில் இருக்கிறது சென்ட்ரல் பிரியாணி...சின்ன கடைதான்...பாழடைந்த பில்டிங் போல இருக்கிறது.ஆனால் உள்ளே பரந்து விரிந்து இருக்கிறது.

          காரை விட்டு இறங்கியபோது நம்மை வரவேற்கும் விதமாக பிரியாணி அண்டாவை கரண்டியால் தட்டியபடி மாஸ்டர் புன்னகைத்தார்.அண்டாவில் நிரம்பி இருந்த சிக்கன் பிரியாணியின் மனம் மூக்கைத்துளைத்தது.வாசமே நம்மை நேசம் கொள்கிறதே என்று எண்ணுகையில் அது நமக்கானது இல்லை என்று சொல்லி தனியாக ஆர்டர் செய்த மட்டன் பிரியாணி இதோ இங்கிருக்கிறது என்று ஒரு பிளேட்டில் சாம்பிளாக சிறிது வைத்தார் கடை உரிமையாளர்...
மணம் நாசியைத்துளைக்க, கை அனிச்சையாக தட்டு நோக்கி பரபரத்தது.கொஞ்சம் எடுத்து வாயில் இட ஆகா...என்ன சுவை.....ப்ரியாணி மணமும் சுவையும் ஒரு சேர இறங்க மிகவும் சுவையாயிருந்தது.இன்னும் சாப்பிட ஆசைதான்.... வீட்டில் பந்தியில் வைத்தபின் நிறைய சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று மனதை தேத்தியபடி கைகளை கழுவிக்கொண்டோம்...


          அந்நேரத்திலும் சுவை நரம்புகளை மீட்டியபடி சிக்கன் லெக் பீஸ் கொதிக்கும் எண்ணையில் நீந்திக்கொண்டிருக்க, வெந்த நிறம் அடைந்தவுடன், எடுத்து தட்டில் போட உடனடியாக உள்ளே ஒரு கஸ்டமருக்கு ஓடிப்போனது.அதைப்பார்த்தபடியே ஜொள்ளிட்டு நிற்க, வண்டியில் ஏற்றியாச்சு பிரியாணி என குரல் வரவே கிளம்பினோம்....
                வண்டியில் இருக்கும் பிரியாணி அவ்வப்போது நானும் இருக்கிறேன் என்று தட்டினை திறந்து திறந்து தன் வாசத்தினை வெளியேற்றிக்கொண்டிருந்தது திருப்பூரின் சாலைவசதிகளால்....பிரியாணி மணம் மூக்கினைத் துளைத்தபடியே இருந்ததால் கவனம் சிதறும் வாய்ப்பு அதிகமிருப்பதாகவே தோன்றவே மெதுவாய் வண்டியினை ஓட்டியபடியே வந்து சேர்ந்தோம் நண்பரின் வீட்டிற்கு....முதல் வேளையாக இறக்கி வைத்ததும் பந்தியில் இடம் தேடி அமர்ந்தோம்...பிரியாணியின் வருகைக்காக வேண்டி...


            சுடச்சுடச் இலையில் வந்த பிரியாணியினை ரசித்து ருசித்து சாப்பிட சீக்கிரம் காலியாகிப்போக, மீண்டும் நிரம்பியது நண்பனின் உபயத்தால்...
பிரியாணி உதிரி உதிரியாக இருக்கிறது.சீரக சம்பாதான்.ஒவ்வொரு அரிசியிலும் சுவை ஏறியிருக்கிறது.மட்டன் நன்றாக வெந்து பஞ்சு போல் இருக்கிறது.சாப்பிட சுவையாக இருக்கிறது..போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதைப்போல நிறைய சாப்பிட்டுவிட்டோமே என்ற திருப்தி வந்ததால் கை கழுவ ஆரம்பித்தோம்...சுவையோ சுவை.... இன்னமும் பிரியாணியின் வாசனை கோவை வரும் வரையில் இருக்கிறது...


                சென்ட்ரல் பிரியாணிக்கடை...சின்ன கடை போல் தான் தோற்றமளிக்கிறது.முதலிலேயே பிரியாணி வாசனை நம்மை வரவேற்கிறது.விலை குறைவாக இருக்கிறது.அனைத்தும்...பிரியாணி சாப்பிட்டு பார்த்ததில் சுவை நன்று..

நேசங்களுடன்
ஜீவானந்தம்


14 comments:

 1. பார்க்க பார்க்க நாக்கில் நிர் ஊறுது கொடுத்து வைத்தவா் நிங்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க வருகைக்கு நன்றி....

   Delete
 2. மார்கழி மாசப்பொறப்பு அதுமா பிரியாணியை பார்த்து ஜொள்ளு விட வச்சுட்டியே ஜீவா!?

  ReplyDelete
  Replies
  1. ஓ....இப்போ மார்கழி மாசமா...அப்போ சாப்பிடக்கூடாதா...

   Delete
 3. அந்த சுவை எல்லாம் இருக்கட்டும்... முடிந்தால் நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன் : -

  தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

  விளக்கம் :

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

  ReplyDelete
  Replies
  1. என்னாது போட்டியா....பார்ப்போம்...

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. படிக்கப்,படிக்க .......ஸ்...................ஜலம் ஊறியது,நாவில்!கொடுத்து வைத்தவர்கள்(!)நீங்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார்....சாப்பிடுவதில் என்ன இருக்கு....

   Delete
 6. பிரியாணி, பார்க்க, படிக்க, சுவையாக இருந்தது. நல்ல பிரியாணி சாப்பிட்ட திருப்தி. அருமை தலைவரே....

  ReplyDelete
  Replies
  1. அப்படியா...உங்க ஊர்ல இன்னும் சுவையா இருக்குமே....

   Delete
  2. டெல்லில சொல்றீங்களா, இல்லை தூத்துக்குடில சொல்றீங்களா, நான் சாப்பிட்ட மோசமான பிரியாணி டெல்லில தாங்க.

   தூத்துக்குடி புரோட்டாக்கு பேமஸ், நீங்க ஒரு நாள் ஆழ்வார் நைட் கிளப்ல சாப்பிட்டு பாக்கணும். நான் ஊருக்கு போறப்போ கால் பண்றேன், வாய்ப்பு இருந்தா வாங்க....

   Delete
 7. ரசித்து ருசித்து எழுதிய பதிவு. சூப்பர்...

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....