சமீபத்தில் கோழிக்கோடு கேரளா போயிருந்த போது அங்கிருந்து நிறைய படங்கள் வாங்கிவந்தேன்.எல்லாம் பார்த்தபின் அதில் ரொம்ப பிடிச்ச படம் மெமரிஸ்.ப்ருத்விராஜ் நடிச்ச சூப்பரான திரில்லர் மூவி.படம் பார்க்க பார்க்க செம இண்ட்ரஸ்ட்டிங்காக இருக்கு.
குற்றவாளிகளை பிடிக்கப்போய் அதில் தன் குடும்பத்தினை இழந்து அவர்கள் ஞாபகமாகவே எப்பவும் குடிபோதையிலேயே இருக்கிற ஒரு போலீஸ் அதிகாரி.வேலைக்கு போகாம லீவ் போட்டுட்டு குடிக்கிற ஆசாமி.அந்த ஊர்ல ரெண்டு கொலை ஒரே மாதிரியா நடக்குது.காவல் துறையால் அதைக்கண்டுபிடிக்கமுடியல.அதனால இந்தப்பொறுப்பு கள்ளுகுடியன் என்று செல்லமா அழைக்கப்படும் ப்ருத்விக்கு வருது.அதுக்குள்ள தொடர்ச்சியா இன்னொரு கொலை நடக்குது.இப்படி எல்லா கொலைகளும் ஒருத்தரால் மட்டுமே செய்யப்படுகிறது என்பதை அவர் எப்படி ட்ரிங்க்ஸ் அடித்துக்கொண்டே கொலையாளியை கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதை.
ப்ருத்வி எப்பவும் ரொம்ப ஹேண்ட்ஸம்மா இருப்பாரு.போலீஸ்னா கொஞ்சம் மிடுக்கு இருக்கும்.ஆனா இந்தப்படத்துல லேசா டிரிம் பண்ணின முகத்தோட படம் புல்லா குடிகார வேடத்துல வருவாரு.அவர் கொலைக்கான காரணங்களை கண்டுபிடிக்கிற ஸ்டைலே ரொம்ப வித்தியாசமா இருக்கும்.எப்பவும் மப்போடு பேசுகிற மேனரிசம் செமயா இருக்கு.நாலு கொலைகளுக்குண்டான காரணத்தினை கண்டுபிடிச்சி அடுத்து தன் தம்பிதான் அடுத்த டார்கெட் என தெரிந்து குற்றவாளியை நெருங்கிய பின்னர் கொலைகாரன்கிட்ட எப்படி தம்பியை காப்பாத்தறார், அதே சமயம் தன் மனைவி குழந்தைக்கு ஏற்பட்ட கதி தன் தம்பிக்கும் ஏற்பட கூடாதுன்னு பழைய ஞாபகத்தினை நினைச்சி கொலைகாரனை டேலண்டா கொல்றதுதான் படத்தோட முடிவு.
படம் ரொம்ப நல்லா விறுவிறுப்பாக இருக்கு.யார் கொலையாளி என்பதை கிளைமாக்ஸ் வரை கண்டுபிடிக்கும் காட்சிகள் நன்றாக இருக்கு.ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும்தான்.கெளரவ வேடத்தில் மேக்னா ராஜ் நடித்து இருக்கிறார்.
நடிப்பு :
ப்ருத்விராஜ்
விஜயராகவன்
மேக்னாராஜ்
சுரேஷ் கிருஷ்ணா
இயக்கம் :
ஜீத் ஜோசப்
பார்க்கவேண்டிய படம்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
கதைய ஓடச்சுட்டியே மாப்ளே.. நியாயமா?
ReplyDeleteஅப்படியா....சொல்றதுக்கும் திரையில பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு மச்சி....
Deleteதமிழ்ல கிடைக்குமா? கடைசியா நான் பார்த்த மளையால படம் ஷோலே. . .!!!!!
ReplyDeleteஎன்னாது ஷோலே வா......அது கன்னடா ஆச்சே....!!!!!!
Deleteகன்னட படமா?? இது கூட தெரியாத பச்ச புள்ளையா இருக்கேனே!!!
ReplyDeleteகோழிக்கோடு கேரளா போயிருந்த போது ... சொல்லவே இல்லை... ம்... விமர்சனம் நன்று...
ReplyDeleteபடம் பார்த்துர வேண்டியது தான் ....
ReplyDeleteநிறைய சிடின்னு சொன்னீங்க லிஸ்ட் போடலையே தல ....
download panniravendiyathu thaan
ReplyDeleteநல்ல விமர்சனம் நண்பரே...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஎப்படி நலமா?..
அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்
தைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி மேலும் தகவல் .இங்கே-http://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல விமர்சனம்.
ReplyDeleteதேடுகிறேன்....
நல்ல படமா இருக்கே...நெட்ல கிடைக்கான்னு பார்ப்போம்.
ReplyDelete//கொலைகாரன்கிட்ட எப்படி தம்பியை காப்பாத்தறார்//
ReplyDeleteInime padam paaththu no use :(
vanakkam nanba. Memories Movie Tamil Version Vanthachu (Arul Nithi Nadipil- Aravathu Sinam- Directed by. Arivazhagan (director of Eeram, Vallinam Movies) nan unga valai Poovai padikka 3 varusam ayiduche nanba.. valthukal.appuram Director Jeethu Joseph Movies Drishyam, 3 language hit (ithu ungalukku theriyume)
ReplyDeleteMemories Movie la
best Song. Thirayum Theeravum
Singer: Vijay Jesudas
Lyrics: ONV Kurup
Music : Jeyachandran