Thursday, December 12, 2013

கரம் - 12 (12.12.13)

புத்தககண்காட்சி 
கடந்த வாரம் கோவையில் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது.மிகக்குறைந்த அளவே ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன.புத்தகவிற்பனை மிக மந்தமாக இருந்தது என்று சொல்லலாம்.வரவேற்பின்றி தூங்கி வழிந்தன ஸ்டால்களும் கூடவே விற்பனையாளர்களும்.ஸ்டால் போட்ட காசுக்காவது புத்தகம்லாம் வித்திருக்குமா என்பது சந்தேகமே.நான் மூணு மணி வாக்குல உள்ளே நுழைந்தேன்.உலக சினிமா ரசிகன் கூட வந்ததினால் தள்ளுபடி விலையில சுஜாதா புக், ஜெயமோகன் புக் வாங்கிட்டு வந்தேன்.உள்ளே ஒரு சுத்து சுத்திட்டு வந்ததால் சூடா டீ சாப்பிடலாமே அப்படின்னு வெளியே இருக்கிற கேண்டீன்ல டீ சாப்பிட்டா அதுவும் ஆறிக்கிடக்குது...புத்தக கண்காட்சி போலவே....


******************************
ஒரு ஸ்டால்ல சுஜாதா எழுதின புக் பார்த்தேன்.புத்தக அட்டைப்படத் தலைப்பே ரொம்பத் தப்பா இருந்துச்சு.எப்படி இவ்ளோ பெரிய மிஸ்டேக் பண்ணி இருப்பாங்க அப்படின்னு யோசிச்சுகிட்டே ஒரு கிளிக் கிளிக்கிட்டேன்.
புத்தகத்தோட பேரு ஒரு பிராயாணம், ஒரு கொலை, 
ஆனா உள்பக்கம் சரியா பிரிண்ட் பண்ணி இருக்காங்க ஒரு பிரயாணம் ஒரு கொலை அப்படின்னு...கூடவே சுஜாதா எழுதின முதல் நாடகம்னு சின்ன குறிப்பு வேற.எப்படி அட்டைப்படத்தினை கோட்டை விட்டாங்க பதிப்பகத்தார்?


*************************************
கரூர்ல சிக்கன் வாங்க ஒரு கடைக்கு சென்றிருந்தபோது கடையில ஒரு கிரைண்டர் மாதிரி இருந்துச்சு.எவ்ளோ கறி வேணும்னு கடைக்காரர் கேட்க, ஒரு கிலோ ன்னு சொல்ல, உடனே உயிரோட இருந்த பிராய்லர் கோழி ஒண்ணை பிடிச்சி கழுத்த முறிச்சி சுடுதண்ணியில் போட்டு கொஞ்ச நேரம் அப்படி இப்படி திருப்பி அதை எடுத்து கிரைண்டர்ல போட்டு ஆன் பண்ணவும், பயந்தே போயிட்டேன்..கோழியை அரைச்சு மாவா கொடுத்திருவாரோ அப்படின்னு.... ஆனா கொஞ்ச நேரத்துல வெளிய எடுத்து பார்த்தா கோழி டிரஸ் இல்லாம இருக்கு.......ஆச்சரியப்பட்டு கிரைண்டருக்குள்ள எட்டிப்பார்த்தா கல்லுக்குப்பதிலா நீட்ட நீட்டமா ரப்பர் புஷ் நிறைய இருக்கு.கோழி இறகை பிடுங்கறதுக்காக பண்ணின மெசினாம்...ரெண்டு நிமிசத்துல சீக்கிரம் வேலையாகுது.மணிக்கணக்கா உட்கார்ந்து பிடுங்க தேவையில்ல.இப்படி பண்றது தோலோட கறி வாங்குறவங்களுக்கு மட்டும் தானாம்.அதுக்கப்புறம் மிச்சமிருக்கிற கொஞ்ச நஞ்ச முடிகளை லைட்டா பொசுக்கி மஞ்சள் போட்டு தேய்ச்சு கழுவி வெட்டி கொடுத்தாங்க...அப்புறமென்ன....அடுத்து சமையல் தான்...



*******************************
சிங்கப்பூர் கலவரம்
சிங்கப்பூரில் கலவரம் என்று நண்பன் அங்கிருந்து சொல்லும் போது கொஞ்சம் அதிசயமும் ஆச்சர்யமும் பட்டேன்.கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கிற ஊரில் எப்படி இப்படி நேர்ந்தது என்பதை நினைக்கும் போது தான் ஆச்சர்யமாகிறது.


டேக்கா என்று சொல்லப்படும் லிட்டில் இந்தியாவில் கடந்த முறை சென்ற போது கலவரம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள பொது மைதானத்தில் அமர்ந்து பேசி இருக்கிறோம்.சனி ஞாயிறு மட்டும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அந்த மைதானத்தில்  ஆங்காங்கே கூடி மது குடிப்பது வழக்கம்.அங்கு குவியும் தமிழர்கள் அனைவரும் கடின உழைப்பு தொழிலாளிகள். நண்பர்களோடு சேர்ந்து அரட்டை மற்றும் மது குடிப்பது வழக்கம்.இது எப்பவும் இருப்பதுதான்.தன் கண்முன்னே சக தொழிலாளி ஒருவர் இறந்ததைப் பார்த்தவுடன், போதையில் இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு செஞ்ச கண்மூடித்தனமாக செயல் தான் இது.40 வருடமாக எந்த கலவரமும் இல்லாத சிங்கப்பூரில் இந்நிகழ்வு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம்.இது நாள் வரை அனுபவித்து வந்த சலுகைகள் இனி குறையலாம்.இந்த கலவரம் ஏற்பட்டதால் இனி சனி ஞாயிறு அந்த பகுதிகளில் மது விற்பனை கிடையாதாம்.கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவருக்கும் 10ஆண்டு சிறைத்தண்டனை 8 கேன் ( சவுக்கடி ) நிச்சயமாம்.
நாடு விட்டு நாடு பொழைக்கபோன இடத்துல நாமதான் சூதானமா நடந்துக்கனும்.அதை விட்டுட்டு வம்பு வழக்குன்னு போயிட்டா நம்மள நம்பி இருக்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்றது.

**********************************
12.12.1950
இந்த நாளை யாராலும் மறக்க முடியாது.ஏன்னா சூப்பர் ஸ்டாரோட பிறந்தநாள்.சிறுவயதில் இருந்து பார்த்து ரசித்து இன்னமும் அவரின் ரசிகனாக இருப்பதில் கொஞ்சம் பெருமிதம் தான்.பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா...நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.



நேசங்களுடன்
ஜீவானந்தம்

13 comments:

  1. //கலவரம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள பொது மைதானத்தில் அமர்ந்து பேசி இருக்கிறோம்.//

    பேச மட்டுமா செஞ்சோம்??? ;-)

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு.சிங்கப்பூர்..................வருத்தம் தான்,என்ன செய்ய?உணர்ச்சி வசப்படல்,பிழைப்பில் மண் அள்ளிப் போட்டு விடுமே?நம் நாடு என்றால் பரவாயில்லை.பஞ்சம் பிழைக்கப் போய்..................///சூப்பர் ஸ்டாருக்கு என்னோட வாழ்த்துக்களும்,உங்கள் தளமூடே.வாழ்த்துக்கள்,ரஜனி அண்ணா!

    ReplyDelete
  3. இன்று சில பெருநகரங்கள் தவிர வேறு எங்கும்
    புத்தகக் கண்காட்சியில் மக்கள் கூட்டம் இருப்பதில்லை என்பது
    வேதனைக்குரிய செய்திதான் நண்பரே.
    ==
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    பதிவு.. அருமை.. உண்மையில் நீங்கள் சொல்வது போல சிங்கப்பூரில் சட்டதிட்டம் கடுமையானது....

    ரஜினிகாந் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    எனது புதிய வலைப்பூவின் வழி கருத்து இடுகிறேன்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன் கம் என அழைக்கிறார் போய் பார்க்க வேண்டும்

      Delete
  5. புத்தகத்தின் அட்டை...கவர்ச்சியா இருக்கட்டுமேன்னு விட்டு இருப்பாங்க பிரா'யாணம், ha..haa

    ReplyDelete
  6. எதையும் விடுவதாக இல்லை போல... படம் எடுப்பதை - கோழி கிரைண்டர் படத்தைச் சொன்னேன்...!

    ReplyDelete
  7. நெய்வேலி புத்தக கண்காட்சிக்கு அவ்வளவு கூட்டம் வரும்.ஆனா ஏன் இப்ப எல்லாம் கூட்டம் வருவதில்லை,

    ReplyDelete
  8. கதம்ப பகிர்வு அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தலைப்புல ஏதாவது குறியீடு கிறியீடு இருக்கப்போகுது

    ReplyDelete
  10. அந்த சிக்கன் கிரைண்டரை நானும் பார்த்தேன். பாவம் கோழிகள்.

    ReplyDelete
  11. சிக்கன் கிரைண்டர் - என்னமா யோசிக்கறாங்க!

    சிங்கப்பூர்... ம்..

    கரம் - ரசித்தேன்.

    ReplyDelete
  12. naanum kovaiyul thaan ullaen.புத்தககண்காட்சி nadandhadhe theriyavillai.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....