Tuesday, December 24, 2013

மலரும் நினைவுகள் - எனது கடிதம்

                 புத்தாண்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப வீட்டினுள் இருந்த பழைய பைகள், பெட்டிகளை ஆராய்ந்த போது கிடைத்த ஒரு கடிதம் தான் இது.வேலை தேடிக்கொண்டு இருந்தபோது என்னவளுக்கு எழுதின கடிதம்.இப்போது இதை இணைந்து இருவரும் படித்த போது ஏற்பட்ட மாற்றங்கள் எண்ணிலடங்காதவை.மேலும் எனக்கே ஆச்சர்யம்.. அட...இப்படியெல்லாம் எழுதி இருக்கிறோமா என்று...இது ஒரு மலரும் நினைவுகளே....
                  இந்தக்கடிதம் என்னையும் என் நம்பிக்கையும் சுமந்து கொண்டு உன் மடியில் வந்து விழுகிறது.நம் இருட்டின் முதல் நட்சத்திரம் இன்று முளைத்துவிட்டிருக்கிறது.எந்தத்துறையில் எனக்கு முன்னேற முடியும் என்று நம்பிக்கையிருக்கிறதோ, எந்த்த்துறை நமது லட்சியத்தினை வெகுவிரைவில் ஈடேற்றும் என்று நான் கருதுகிறேனோ அந்தத்துறையில் இன்று காலடி எடுத்து வைத்திருக்கிறேன்.

நான் இன்று முளைக்கத் துடிப்பது உனக்காகத்தான்...
கிளை விரிப்பதும், விழுதிறக்கவும் நான் தவிப்பது உனக்காகத்தான்..
நான் விஸ்வரூபம் எடுக்கத்துடிப்பது என் விலாசம் சொல்ல அல்ல
அந்தஸ்து பேதத்தால் தூரமாக்கப்பட்டுவிட்ட உன்னை தொடுவதற்குரிய நீளம் என் கைகளுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான்....

             உனக்காக என்னென்னவோ செய்யத் துடிக்கிறேன்..எனக்காக நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...உன்னால் எத்தனை எத்தனை காரணங்கள் சொல்லமுடியுமோ அத்தனை காரணங்களையும் சொல்லி காலத்தை நீட்டித்து விடு...இப்போதைய காத்திருப்பின் ஒவ்வொரு நிமிடமும் நமது பொற்காலத்திற்கான அஸ்திவார நிமிடங்கள்...


                  எந்த அந்தஸ்து பேதம் நம் காதலின் கண்களில் இப்போது விரலால் குத்துகிறதோ, அந்த விரல்களே நம் நாளைய மணமாலைகளுக்குப் பூத்தொடுக்கும் என்பது சத்தியமே.

               உன்னைப்பிரிந்து வந்துவிட்ட நான் தான் இப்போது ஆறுதலில்லாத பிரதேசங்களில் அலைந்து கொண்டிருக்கிறேன்..ஆனால் உனக்கு அப்படியில்லை...நீயும் நானும் நடந்து போன நமது தடம் பதிந்த பாதைகள் இன்னும் உன் பாதங்களுக்கு அருகிலேயே இருக்கின்றன...நீயும் நானும் ஒன்றாய்ப் பார்த்த வானமும் இன்னும் உன் தலைக்கு மேல்தான் இருக்கிறது.நீயும் நானும் ஆற்றங்கரை மணல் மேட்டில் ஒருவர் பெயரை ஒருவர் எழுதிப்பார்த்தபோது அவற்றை மனப்பாடம் செய்துகொண்ட நதி இன்னும் நம் பெயரை உச்சரித்துக்கொண்டேதான் ஓடிக்கொண்டிருக்கிறது.


அன்புக்குரியவளே...
              நம் சுவடுகள் உன் அருகில்.....இப்போது கூட நீ தனிமையில் இல்லை..நம் தடயங்களோடுதான் இருக்கிறாய்....
இங்கேயோ உன் நினைவுகளைத்தவிர எதுவும் பக்கத்தில் இல்லை....
               என் ஒவ்வோர் அடியையும் இங்கு அளந்து வைத்துக் கொண்டிருக்கின்றேன்.என் உழைப்பும், என் முயற்சியும், என் முயற்சியிலிருக்கிற தூய்மையும் வெற்றி என்கிற வார்த்தையை மட்டுமே என்னை உச்சரிக்க வைக்கும்.....கூடவே காதலோடு...

                  நான் எந்த மண்ணில் கனவு கண்டேனோ அந்த மண்ணிலேயே நிறைவேறும் நம் காதலின் அடுத்த படி...
நம்பிக்கையோடிரு....நீ ஒன்றும் அசோக வனத்து சீதையல்ல...மிதிலையின் சீதைதான்...வில்லொடிக்க வருவேன் விரைவில்...

ஆனாலும் காதலி....
             உன் ஞாபகங்களின் நெருப்பில் எனது கால்வாசி மேனி கருகிவிட்டது.லட்சியத்திற்காக எந்த ரணத்தையும் ஏற்றுச் சுமக்க நான் சித்தமாயிருக்கிறேன்...உன் கண்கள் எனக்கருகிலேயே இருந்து என்னைக் கவனித்துக் கொள்வதாய் ஒரு பிரமை எப்போதும் எனக்கிருக்கிறது.உன் பார்வைகளின் குளிர்ச்சி என் அடி நெஞ்சில் கிடந்து சில்லிடுகிறது.அந்த ஈர அனுபவத்திலேயே என் வலிகளும் வேதனைகளும் மறந்துவிட்டிருக்கிறது.
நாளைய வெளிச்சத்தினை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன் காதலின் துணையோடு....
            நான் நடக்க நடக்க உனக்கும் எனக்குமான இடைவெளி குறைந்துவிடும்...பிறகு அது மறைந்து விடும்...
அன்பே!
            இந்த காகிதத்தை உன் காதோடு வைத்துக்கேள்...என் மார்புத்துடிப்பு கேட்குமடி உனக்கு.....

கிசு கிசு :எப்படிலாம் எழுதி நம்ம அம்மணியை கரக்ட் பண்ணியிருக்கேன்......1997 ல ஆரம்பிச்ச லவ் 2004ல என்னை பெரும் சோகத்துல ஆழ்த்திடுச்சு....ஆமா...ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டோம்....ஹிஹிஹிஹி

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்
 நேசங்களுடன்
ஜீவானந்தம்20 comments:

 1. வணக்கம்
  மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்

   Delete
 2. வணக்கம்
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. அற்புதமான மலரும் நினைவுகள், வாழ்த்துக்கள்....

  எங்க வீட்டம்மிணி கல்யாணம் முடிஞ்ச அடுத்தநாளே எல்லா லவ் லட்டரையும் எங்கேயோ ஒளிச்சு வச்சிட்டாயிங்க, மும்பை பெரு வெள்ளத்தோடு அந்த கடிதங்களும் மறைந்து போயிற்று.

  இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கு நன்றி மனோ..
   அடடா...வரலாறு போச்சே.///

   Delete
 4. இனிய மலரும் நினைவுகள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்....
   தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

   Delete
 5. காதல் ரசம் சொட்டுது ஜீவா உன் கடிதத்துல!

  ReplyDelete
  Replies
  1. அதானே,,,,இது காதல் கடிதம்.. ஆச்சே....

   Delete
 6. மலரும் நினைவுகள் என்றும் இனிமை தான்...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. ஆம்....அது எப்போது சுகமான சுமைகள்....இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

   Delete
 7. Nice Post Wish you all the best By http://wintvindia.com/

  ReplyDelete
  Replies
  1. நன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்....

   Delete
 8. ஹி........ஹி.....ஹீ................லவ் லெட்டர்!எப்புடீல்லாம் கரைஞ்சிருக்காரு,மாப்புள!!கங்கிராட்ஸ்,அன்று போல்,இன்று போல் என்றென்றும் வாழ்க!இனிய நத்தார் வாழ்த்துக்களும்,புத்தாண்டு வாழ்த்துக்களும்!!!

  ReplyDelete
 9. நீங்க அப்பவே அப்படின்னு தெரியுது...ஆமா கவிதைகளை இப்பெல்லாம் காணோம்... திரும்ப ஆரம்பிச்சு கலக்குங்க தல...

  ReplyDelete
 10. காதல் வந்துவிட்டாலே எழுத்து நடை மெருகேறுகிறது.... சூப்பரா இருக்கு நண்பா....

  ReplyDelete
 11. நல்ல கடிதம்.....

  நினைவுகள் என்றுமே இனிமை தான் :) இன்று போல் என்றும் இனிதாக வாழ வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. மலரும் நினைவு சூப்பர் ஐயா!

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....