Thursday, February 20, 2014

கோவை மெஸ் - LFC சிக்கன், டவுன்ஹால், கோவை

நேற்று சாயந்திரமா டவுன்ஹால் பக்கம் போய்ட்டு ஒரு சில பர்ச்சேஸ்களை முடிச்சிட்டு, அப்படியே போற வர்ற அம்மணிகளை பார்த்துட்டு பொடி நடையா வந்திட்டு இருக்கும் போது பளிச்சின்னு சிகப்பு கலர்ல ஒரு போர்டு கண்ல பட்டது, கூடவே விதவிதமா சிக்கன் படங்களை போட்டு....மொறுகலான கலர்புல் சிக்கனைப் பார்த்தாலே நமக்கு கேஎஃப்சி தான் ஞாபகத்திற்கு வரும்.ஆனா இங்க அதே மாதிரியே இருக்க, ஏதோ புதுசா இருக்கும் போல, அப்படின்னு நினைச்சிகிட்டே கடைக்குள்ள போனோம்...

கடை பூரா ஏகப்பட்ட மெனுக்களுடன், வெரைட்டியான சிக்கன் படங்களுடன் கண்ணுக்கு கவர்ச்சியா இருக்க, நம் பசியின் ஆர்வத்தினை தூண்டியது.ஏற்கனவே கேஎஃப்சி சாப்பிட்டு இருப்பதால், அதே மாதிரி சுவை இங்கு இருக்குமா என்று ஒரு வித சந்தேகத்துடன் தான் உள்ளே சென்றோம்.கேஎஃப்சி என்னென்ன மெனுக்கள் இருக்குமோ அத்தனையும் இருக்கிறது.அதே சமயம் விலை மிகக்குறைவாக இருக்கிறது. டேஸ்ட்க்காக ஒரு சிக்கன் போன்ஷாட் ஆர்டர் செய்தோம்..இரண்டு நிமிடத்தில் ஆர்டர் ரெடி என்கவும் ஆச்சர்யத்துடன் வாங்கிக்கொண்டு அமர்ந்தோம்.


இளம் சூட்டில் மிகவும் பொன்னிறமாக மொறு மொறுவென்று இருந்தது.எடுத்து கொஞ்சம் சாப்பிடவே அதே சுவை...மிகவும் அருமையாக இருக்கிறது.ஜாஸ் உடன் தொட்டு கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட செம டேஸ்ட்.கேஎஃப்சியில் இருக்கிற அதே சுவை இங்கேயும் இருக்கிறது.சாப்பிட்டு பார்த்துவிட்டு மீண்டும் அதே ஆர்டர் செய்து சாப்பிட்டோம்.சிக்கன் பாப் ஷாட் ஒன்றும் ஆர்டர் செய்து சாப்பிட்டோம்...இரண்டும் செம டேஸ்ட்.
அப்புறம் ஒரு ஐஸ்கிரீம்....அதுவும் நல்லாத்தான் இருக்கு.... 


கடையோட செட்டப், கலர் காம்பினேசன், எல்லாம் அசப்புல பார்த்தா கேஎஃப்சி மாதிரியே எல்லாம் இருக்கு.கேஎஃப்சியில் உள்ள உருவப்படத்தில் கண்ணாடி போட்டு குறுந்தாடி வச்சி இருப்பார்....இதுல கண்ணாடியை கழட்டிவிட்டு குல்லா போட்டு, முழுத்தாடி வச்சி இருக்கார்...யாரு எது வச்சி இருக்காங்கன்னு முக்கியமில்ல..ஆனா டேஸ்ட் எப்டி இருக்குன்னுதான் பார்க்கணும்.இங்க டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு.விலையும் குறைவா இருக்கு.நடுத்தர மக்களை குறி வச்சி இது ஆரம்பிச்சு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.ஏசி இல்லை.பகட்டான வார்த்தைகள் இல்லை.ரொம்ப சுகாதாரமாக இருக்கிறது.சர்வீஸ் நன்றாக இருக்கிறது.உடனுக்குடன் கிளீன் செய்து விடுகின்றனர்.


கடையில் இருந்தவரிடம் கேட்டபோது இது கோவையில் தான் தயாரிக்கப்படுகிறது என்றும், ஒரு சில கிளைகள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன என்றார்.
சுவை எப்படி இருக்கும் என்ற அச்சத்திலேயே கடைக்கு போனது, சாப்பிட்டு பார்த்ததில் மீண்டும் செல்லக்கூடிய ஆர்வத்தினை உண்டாக்கி இருக்கிறது.கண்டிப்பா இன்னொரு முறை போகவேண்டும்.

டவுன்ஹால், ஜிபி சிக்னல் அருகில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.பார்க்கிங் எங்கயும் இருக்காது.

நேசங்களுடன் 
ஜீவானந்தம்

13 comments:

  1. Don't promote such a copied restaurant. If any illiterate will see first time they would think this is KFC. They are just use KFC fame for their business.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாஸ்...பன்னாட்டு கடைகளில் ரேட் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு....அதனால தான் அதே மாதிரி சில கடைகள் வருது...டேஸ்ட் நல்லா இருக்கு...இல்லேனா அவங்களே கடையை மூடிடுவாங்க...

      Delete
  2. கே.எஃப்.சி சிக்கன் சாப்பிடக்கூடாதுன்னு ஒரு பக்கம் அட்வைஸ். அதேப்பாணியில் மற்றொரு கடையா!?

    ReplyDelete
    Replies
    1. சிக்கனை எப்படி கொடுத்தாலும் சாப்பிட ஒரு கூட்டமே இருக்கு...அதனால மவுசு இருக்கத்தான் செய்யும்...

      Delete
  3. சுவை எல்லாம் நல்லாத்தான் இருக்கும்... ஆனால் உடம்பு...?

    ReplyDelete
    Replies
    1. எப்பவாது ஒருமுறை சாப்பிட்டால் ஒன்றுமில்லை...தினமும் சிக்கன் பர்கர், ரொட்டி என சாப்பிட்டால் கேடுதான்....

      Delete
  4. சுதேசி கே.எஃப்.சி. நல்லாத்தான் இருக்கு...... நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாஸ்...சுதேசி நல்லாருக்கே....

      Delete
  5. Replies
    1. சாப்பிட்டா நல்லாவே இருக்கு.....அதே டேஸ்ட்...

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. வணக்கம் சார் நான் கூட கோவை தான் நீங்கள் பார்த்த LFC ஐ நானும் முதலில் KFC என்று தான் நினைத்தேன் ஆனல் K -விற்கு பதில் L மாறியுள்ளதை பார்தேன் மேலும் இடமும் சிறியதாக இருந்தது வியபாரநோக்கத்திற்காக KFC ஐ போல மாற்றி இருப்பதால் உணவின் தரமும் சுவையும் நிச்சியமாக KFC யின் தரத்தில் இருக்காது என நினைத்தேன் ஆனால் நீங்கள் சொல்வதை பார்த்தால் LFC யில் சாப்பிட்டுப்பார்கலாம் என நினைக்கிறேன்

    ReplyDelete
  8. இது போல உள்ளூர் நிறுவனங்களை ஊக்க படுத்த வேண்டும்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....