நேற்று சண்டே வேற..எப்பவும் போல வீட்ல விசேசந்தான்....என்ன மெனு பண்ணலாம்
இன்னிக்கு அப்படின்னு பெக்கிட்டுகிட்டே யோசித்துக் கொண்டிருக்கையில் வீட்டுக்கு
வெளியே மீனு...மீனு....மீனு ...மீனோய்.... ன்னு ஆபந்தாபாந்தவனாய் மீன்காரர்
சத்தம்....சரி...இன்னிக்கு பொரிச்சிட வேண்டியதுதான்.....
கொஞ்ச நேரம் முன்னாடிதான் உக்கடம் மீன் மார்க்கெட்டிலிருந்து கூடை ஏறி நம் வாசலுக்கு
வந்துவிட்டிருந்த மீன்கள் ரொம்ப ஃப்ரெஷ்ஷாய் சில்லென இருக்க, கட்லா, நெய்மீன்,
மத்தி, ஜிலேபி என மீன்வகைகள் தங்களை எடுத்துச் செல்லும்படி ஏக்கமாய்
பார்த்துக்கொண்டிருக்க, கட்லாவும் மத்தியும் என் விருப்பப்பட்டு படுசுத்தமாய் வீடேறின.கட்லா
மீன் குழம்புக்கும், மத்தி மீன் பொரிப்பதற்காகவும் பிரிக்கப்பட்டு, ரெடிமேட் மசாலாவில்
கொஞ்ச நேரம் நீந்திய மத்தி மீன் மீண்டும் எண்ணையில் நீந்துவதற்காக போடப்பட்டு,
பின் பொரிக்கப்பட்டு சுவையாய எங்களின் வயிற்றுக்குள் நீந்த ஆரம்பித்தது.
மத்திமீன் பொரிக்கிறது எப்படின்னு பார்ப்போம்..
இப்போலாம் ரெடிமேட் மசாலா வந்திருக்கிறதால் வேளை கொஞ்சம் ஈஸியாவே
முடிஞ்சிடுது.இல்லேனா, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், கார்ன் மாவு, கொஞ்சம்
உப்பு இதெல்லாம் சேர்த்து பிரட்டனும்.கொஞ்ச நேரம் ஊறவச்சி எண்ணையில்
பொரிச்சா...ஆஹா அம்புட்டு டேஸ்ட்....
நான் JB என்கிற மீன் வறுவல் மசாலாவை எடுத்துகிட்டேன்.கொஞ்சம் சாந்து
போல கரைச்சிகிட்டு, அதை மீன்ல தடவி, அரைமணி நேரம் ஊறவச்சிட்டேன்..(மசாலாவிலே உப்பு
உரைப்பு எல்லாம் சரியா இருக்கிறதால் எதுவும் கூடுதலா சேர்க்க தேவையில்லை)
அப்புறம் எண்ணையினை காயவச்சி அதில் மீனை பொரிச்சு எடுத்தா அப்படியே வாசனை ஊரைக்கூட்டும்..நல்லா மொறு மொறுன்னு எடுத்தா.....சுவையான மத்தி மீன் வறுவல் ரெடி..ஆகா....என்னா டேஸ்ட்..என்னா டேஸ்ட்...
மத்தி மீன்ல முள் இருக்கும்.ஆனா அதை அப்படியே மீனோட சேர்த்து சாப்பிட்டா செம
டேஸ்டா இருக்கும்.இந்த மீன் கேரளாவுல ரொம்ப பேமஸ்.விலை குறைந்த மீன்
இதுதான்..உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமான மீன் கூட....கேரளா கள்ளுக்கடையில் இந்த மீனும் கப்பாவும் கள்ளுக்கு செம காம்பினேசன்.....
மீன்குழம்பு வைக்க
நேசங்களுடன்
ஜீவானந்தம்
எச்சி ஊறுது
ReplyDeleteவாங்க சாப்பிட்டுவிட்டு போலாம்,....
Deleteஅழகான (மீன்) போட்டோக்கள்!தங்கை ராஜி சொன்னது போல் போட்டோ பார்த்தே எச்சி ஊறியது!மத்திமீன்=SARDINE.
ReplyDeleteஉங்களுக்கு அதே பதில் தான்..வாங்க சாப்பிட்டுவிட்டு போலாம்...
Deleteஎனக்கு இப்போவே மீன் சாப்பிடனும் போல இருக்கு.
ReplyDeleteஇன்னைக்கு சாயங்காலம் மீன் குழம்பு தான்...
வாங்க பாஸ்..வாங்க...
Deleteமீன் வளையில் சிக்கியிருக்கின்றபோது கூட செத்திருக்காது. அதை வெட்டி கழுவி சுத்தம் செய்திருக்கின்ற சாயலைக் காண்கையில், அது அப்போதுதான் துடிதுடித்துச் செத்திருக்கும் போலிருக்கு.. என்னமாய்.. சூப்பர் பொரியல்..
ReplyDeleteஅங்கே நீந்துது, இங்கே நீந்துதுன்னு கவிதையாய் உதிக்கின்ற வரிகள் வேறு.. செம.. :))))
மீன் செம டேஸ்ட்..அதான் கவிதை கொட்டுது..
Deleteஅடடா... ம்... அசத்துங்க...!@
ReplyDeleteநன்றி தன்பாலன்...
Deleteகேரளாவில் இருந்தபோது சாப்பிட்டிருக்கிறேன்... இங்கே சென்னையில் எந்த ஹோட்டலிலும் நன்றாக இல்லை...
ReplyDeleteகேரளாவில் எப்பவும் ஸ்பெசல்தான்...கோவையில் கடைகளில் கொடுக்க மாட்டிகிறார்கள்...தள்ளுவண்டிகளில் மட்டுமே கிடைக்கிறது...
Deleteபொறிக்கிரத்துக்கு பதில் தோசைக்கல்லில் வறுத்து பாருங்க...டேஸ்டு சூப்பர்... ஒவ்வொரு முறையும் இந்த மீனைத்தான் வாங்குவீங்க..
ReplyDeleteஇந்த மீனுல மருத்துவ குணாதிசயம் அதிகம் (ஒமேகா 3 எண்ணை)
குறிப்பு: ஒரு வேலைக்கு நாலு அஞ்சு மீனுக்கு மேல் .திங்காதீங்க.... அப்புறம் பாத்ரூம் போகவேண்டி வரும்.
தோசைக்கல்லுல போட்டா இன்னும் செம டேஸ்ட்தான்...அது ஏற்கனவே செஞ்சு சாப்பிட்டாச்சு....அன்னிக்கு மட்டும் 1 கிலோ மீனை காலி பண்ணினேன்....ஒன்னுமே ஆகலையே...
Delete