Wednesday, March 12, 2014

பயணம் - தலச்சேரி கோட்டை (Thalassery Fort ), கண்ணூர், கேரளா

ரொம்ப நாள் முன்னாடி கேரளாவின் தலச்சேரிக்கு போயிருந்த போது பக்கத்துல சுத்திப்பார்க்க என்ன இருக்குன்னு கேரள சேட்டன்கிட்டே ச்சோதிக்கவும், கொறச்ச தூரத்துல ஃபோர்ட் ஒண்ணு உண்டு என்று பறைய, உடனடியாக ஆட்டோ தேடி ஏறி அமர்ந்தோம்..ஐந்து நிமிட பயணத்தில் கோட்டையை வந்தடைந்தோம்.


வரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்டமான கோட்டை மிக அமைதியாக ஆளரவமற்று இருக்கிறது.அந்த காலை நேரத்தில் சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்கள் கூட பலமின்றி இருக்க, அந்த பலம் வாய்ந்த பிரம்மாண்டமான கோட்டைக்குள் காலடி எடுத்து வைத்தோம்.மிக விசாலமான இடத்தில் கோட்டை அமைந்திருக்கிறது.இருபுறம் கொண்ட மாடிப்படிகள் மூலம் ஏறி கோட்டையின் சிறிய நுழைவாயில் அடைந்தோம்.உள் நுழைந்த்தும் மிக விசாலமான இடத்தில் பரந்து விரிந்து இருக்கிறது.நாற்புரமும் கோட்டையின் அரண் போன்ற சுவர்கள் பாதுகாப்பாய் பிரம்மாண்டமாய் உயர்ந்து நிற்கிறது.கேரளாவின் இயற்கை செங்கற்களான பாறைக்கல்லில் கோட்டையின் அனைத்து சுவர்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன.கோட்டையின் சுற்றுச்சுவரில் கண்காணிப்பு கோபுரங்கள், பீரங்கி வைக்கும் இடங்கள் என மிக பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.சிறைச்சாலைகள் கூட இருக்கின்றன.ஒரு சுரங்கப்பாதையும் கோட்டையின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது.      கோட்டையின் மீது ஏறிப்பார்க்கும் போதுதான் இக்கோட்டை அரபிக்கடலின் ஓரத்தில் கட்டப்பட்டிருப்பது தெரிகிறது.அங்கிருந்து பார்க்கும் போது அரபிக்கடலின் அழகான தோற்றம் நம்மை வியக்கவைக்கிறது.
இந்த கோட்டையினுள் வரலாறு, புகைப்படங்கள் மற்றும் அரிய பொருட்கள் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.இந்த கோட்டை தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்று.
         இந்தக்கோட்டையானது 1708ல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டு இருக்கிறது.இதைப்பத்தி இன்னும் விரிவா தெரிஞ்சிக்கனும்னா விக்கிபீடியா பார்த்துங்க...

கண்ணூர் தலச்சேரி பக்கம் போனீங்கன்னா ஒரு எட்டு பார்த்துட்டு வந்திருங்க...
காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரைக்கும் திறந்திருக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்12 comments:

 1. கோட்டை படங்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு... எதோ ஒன்று... ஒரே ஒரு வார்த்தை... அழகான அரபிக்கடலின் தோற்றம் வேறே... ஒரு ஒரு சொல் 'மிஸ்' ஆகுதே... ஹிஹி...

  நீங்கள் நடித்த "திரைப்படம்" எப்போது ரீலீஸ்...? வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. எப்பவும் போல முதல் வருகை...தாங்கள்தான்....
   ஹிஹிஹி....கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்கேன்....
   நான் நடிக்கலாம் இல்ல ....சும்மா வந்து போறதுதான்....

   Delete
 2. கோட்டை படங்கள் வெகு அழகு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி..சுரேஷ்

   Delete
 3. போடோஸ் அழகு. ஆனா உங்க favourite, சாப்பாடும் அம்மணிகளும் மிஸ்ஸிங்......................

  ReplyDelete
  Replies
  1. நான் போன நேரம் பார்த்து ஒரு சேச்சிகளை கூட கானோம்...வறட்சியா இருந்துச்சு....ஆனா அடுத்த நாள் தியேட்டருக்கு போனபோது திரிஷ்யம் படத்துக்கு செம சேச்சிகள்....

   Delete
 4. Photos r nice.....if God wills,I want to go there.......

  ReplyDelete
  Replies
  1. நன்றி....கண்டிப்பா போங்க...பக்கத்துலயே பீச்லாம் இருக்கு...

   Delete
 5. அருமையான கோட்டை..... படங்களும் அழகு....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றீ சார்..

   Delete
 6. தெள்ளிச்சேரி கோட்டை பல திரைப்படங்களில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது, கோட்டை மட்டுமல்ல கண்ணூர் மாவட்டத்தின் அழகும் இயற்கையும் மக்களும் உணவும் உள்ளம் கொள்ளையடிப்பவை, அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய இடமாகும்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் அழகான ஊர்...கண்ணூர் மற்றும் அதன் சுற்றுபுறங்கள்....மறுபடியும் போகவேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன.

   Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....