Friday, March 28, 2014

சமையல் - சைவம் - வெண்டைக்காய் ஃப்ரை ( Lady Finger Fry )

வெண்டைக்காய் ஃப்ரை
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு வெஜ் மெனு...வெண்டைக்காய் ன்னாலே நம்ம வீட்டுல அலர்ஜி...எப்பவாது மட்டுமே புளிக்குழம்புல வெண்டைக்காய் இடம்பிடிக்கும்.அதே மாதிரித்தான் பொரியலும்..... தீபாவளி பொங்கல் மாதிரிதான் எப்பவாவது.....அதிகமா செய்யமாட்டாங்க.....ஏன்னா அதுல இருக்குற வழவழப்புதான்.....ஒரு நாள் பக்கத்து வீட்டு அம்மணி நம்ம வாண்டுக்கு வெண்டைக்காய் ஃப்ரை கொடுத்துவிட்டாங்க.சைக்கிள் கேப்ல நானும் சாப்பிட்டுப்பார்த்தேன்...செம டேஸ்டா இருந்துச்சு...உடனே எப்படி செய்யறதுன்னு கேட்டு அடுத்த நாளே அதே மாதிரி பண்ணிப் பார்த்ததில் இன்னும் செம டேஸ்ட்.அடிக்கடி  ஃப்ரை செஞ்சு கொடுக்கிறதால் நம்ம வீட்டு வாண்டுக்கு ரொம்ப பிடித்த மெனு ஆகிப்போச்சு........வாரத்துல மூணு தடவை இது மாதிரி பண்ணித் தந்திடனும்.

எப்படி செய்வது ?
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் – 10
மிளகுத்தூள் - கொஞ்சம்
உப்பு – கொஞ்சம்
எண்ணெய் – சிறிதளவு

செய்முறை
வெண்டைக்காயை கழுவி துணியில் துடைத்துக்கொள்ள வேண்டும்.பின் அதில் காம்புப்பகுதியை வெட்டிவிடவேண்டும்.வெண்டைக்காயின் அனைத்துப்பகுதிகளிலும்  நீளவாக்கில் கத்தியினால் கீறிக்கொள்ள வேண்டும்

உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கீறிய உள்பகுதிகளில் தடவ வேண்டும்.வெண்டைக்காயைச் சுற்றிலும் தடவ வேண்டும்.
பின்னர் வாணலியில் அனைத்து வெண்டைக்காயையும் வைத்து கொஞ்சம் எண்ணைய் தடவி வேக விடவேண்டும்.அவ்வப்போது திருப்பி விட வேண்டும்.வெண்டைக்காய் நன்கு வதங்கியவுடன் எடுத்துவிட வேண்டும்...
சுவையான வெண்டைக்காய் ஃப்ரை ரெடி....




உப்பு மிளகுடன், மிளகாய்ப்பொடியும் சேர்த்துக்கொள்ளலாம். (வெறும் மிளகு, உப்பு இருந்தாலே போதும் செம டேஸ்டாக இருக்கும்).நான் வெள்ளை மிளகு, உப்பு, மிளகாய்ப்பொடி சேர்த்து இருக்கிறேன்) தோசைக்கல்லில் வதக்கினாலும் கூட நன்றாக இருக்கும்.
ஓவனில் வைத்து கிரில் செய்தும் சாப்பிடலாம்..மிக சுவையாக இருக்கும்.முழு வெண்டைக்காயை அப்படியே சாப்பிட செம டேஸ்டாக இருக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


17 comments:

  1. வெண்டைக்காய் செஞ்சாலும் நான் மட்டும் சாப்பிட மாட்டேன்.. வழ வழதான்.. காரணம். ok ok இனி இந்த ப்ரை செஞ்சி பார்க்கிறேன்..(செய்ய சொல்றேன்...)

    ReplyDelete
    Replies
    1. வாங்க...அப்போ வீட்டில அவருதான் சமையலா...?

      Delete
  2. நீண்ட நாட்களுக்குப் பிறகு சைவ சமையல்!

    வித்தியாசமாக இருக்கு. செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி... செய்து பாருங்கள்

      Delete
  3. நம்ம வூட்லயும் அப்புடித்தான்,கொழ கொழ /வழவழ ன்னு இருக்கு ன்னு சாப்புட மாட்டாங்க.செஞ்சு பாத்துடுவோம்!

    ReplyDelete
  4. சின்னசின்ன கட் செய்து மசால் எல்லாம் சேர்த்து வீட்டில் செய்வார்கள்... சூப்பராக இருக்கும்... உங்கள் செய்முறையின் படி செய்து பார்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாள் வரேன்.கூட வெண்டைக்காயோடு

      Delete
  5. முழுசா ஃப்ரை ஆன மாதிரி தெரியலியே!

    ReplyDelete
    Replies
    1. இது போதும்.இன்னும் மொறுகலா வேனாலும் பண்ணலாம்

      Delete
  6. புதிய ரெசிபியாக இருக்கிறது! வெண்டைக்காய் பிடித்த ஒன்றும் செய்து பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. இதையே ஸ்டப் பண்ணியும் செய்யலாம்.

      Delete
  7. நல்லா இருக்கு. செஞ்சு பார்த்துடுவோம்!

    ReplyDelete
  8. பாத்தாலே சாப்பிடனும் போல இருக்கு, வீட்டம்மா கிட்ட சொல்லி செய்ய சொல்றேன்...

    ReplyDelete
  9. வெண்டைக்காயின் வழவழப்பு நீங்க கொஞ்சம் அரிசிமாவு சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த ரெசிபியில் உப்பு, மிளகு சேர்க்கும்போது சேர்க்கலாம்.

    ReplyDelete
  10. முயற்சி செஞ்சு பாத்துருவோம்.......

    ReplyDelete
  11. பார்க்கவே ஆசையா இருக்கு சாப்பிட... கொழகொழப்பு தான் வெண்டைக்காய் பக்கமே திரும்ப விடாமல் செய்வது. ஆனால் வெண்டைக்காயின் கொழகொழப்பு தான் நம் மூட்டுக்கு பலம் சேர்ப்பது...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....