Wednesday, March 19, 2014

கரம் - 13 ( 19.3.2014)

வாசித்தவை :
திருடன் மணியன்பிள்ளை..
            சமீபத்தில் படித்த புத்தகம்.ஒரு திருடனின் தன் வரலாறு.மிக சுவாரசியமான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தில் தான் செய்த திருட்டுக்கள், அதில் எப்படி மாட்டிக்காமல் தப்பித்தது, எப்படி போலீஸிடம் மாட்டியது என அனைத்தையும் சுவைபட கூறியிருக்கும் விதம் நம்மை புத்தகத்துக்குள் ஒன்றச் செய்கிறது.மைசூரில் ஒரு பெரிய கோடிஸ்வரனாக ஆனதும் கர்நாடக முதல்வருடன் ஹெலிகாப்டரில் பறந்ததும், மிக செல்வாக்காய் இருந்த சமயத்தில் ஒரே நிமிடத்தில் அனைத்தும் இழந்து ஓட்டாண்டி ஆனதையும் மிக சுவைபட சொல்லியிருக்கிறார்.திருடச்சென்ற இடத்தில் உயிரைக் காப்பாற்றிய விதம், திருடிய பணத்தில் மற்றவர்களுக்கு உதவிய விதம், திருடிக்கொண்டிருக்கும் போது மாட்டியவிதம் என படிக்க படிக்க செம திரில்லிங்காக இருக்கிறது.தன் வழக்கில் தானே வாதிட்டு வெற்றியடைவது, ஒரு திருடனாக இருந்தாலும் காவல் நிலையத்தில் பல வருடங்கள் பணியாற்றியது, விலைமாதர்களுடன் தொடர்பு, பல வீடுகளில் தான் செய்த திருட்டு ஆப்ரேசன்கள், இப்படி ஒவ்வொன்றையும் மிகவும் நகைச்சுவையாய் விவரித்து இருக்கிறார்.படிக்க மிகவும் நன்றாக இருக்கிறது.பெரிய புத்தகம் தான்.ஆனாலும் பக்கத்துக்கு பக்கம் படிக்க படிக்க இண்ட்ரஸ்டிங்.மொத்தப்பக்கங்கள் 592.மலையாளத்தில் ஜி ஆர் இந்துகோபன் எழுதியுள்ள இந்த புத்தகத்தினை குளச்சல் மு யூசுப் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.விலை 450.00

பார்த்தவை - 1
            நம்ம வீட்டுல 9 மணி ஆச்சுன்னா போதும் எல்லாரும் டிவி முன்னாடி ஆஜராகி விடுவாங்க.அந்த சீரியல் மியூசிக் சாங் போட்டாலே போதும் அப்படியே உருகிடுவாங்க.அப்பப்ப நடு நடுவுல அந்த புல்லாங்குழல் ஒலிக்குமே...சான்சே இல்ல....செம....நெஞ்சம் பேசுதே அப்படிங்கிற சீரியல்தான்.நல்ல ரொமாண்டிக் சீரியல்.ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டருக்கும், பக்கத்து வீட்டு விதவைப் பெண்ணுக்கும் ஏற்படும் காதல், அதைக் காண்பிக்கிற சுவாரஸ்யமான காட்சிகள் என நன்றாக இருக்கிறது.மொழி மாற்றம் செய்த சீரியலாக இருந்தாலும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.நம்மூர் சீரியல் மாதிரி மாமியார் மருமகள் கொடுமை, நாத்தனார் கொடுமை, பொண்டாட்டி கொடுமை, அவன் பொண்டாட்டி கூட இவன் தொடர்பு, இவன் பொண்டாட்டிகிட்ட அவன் தொடர்புன்னு காண்பிக்கிற கள்ள காட்சிகள், தங்கச்சியே அக்கா புருசனை கரெக்ட் பண்றது, அப்புறம் விஷம் வைக்கிறது, ஆக்சிடெண்ட் பண்றதுன்னு ஏகப்பட்ட நீட்டி முழக்கிய காட்சிகள், அப்படின்னு எதுவும் இந்த சீரியல்ல இல்ல.ஆபாசமாகவோ வக்கிரமாகவோ எதுவும் இல்ல.நன்றாகவே இருக்கு.பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிற அனைத்து சீரியலும் நன்றாகவே இருக்கு.இந்த சீரியல் போலத்தான் உள்ளம் கொள்ளை போகுதடா....இதுவும் செம ஹிட்.....(நம்மளையும் சீரியல் பார்க்க வச்சிட்டாங்கப்பா....)

பேசாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே ...
கண் பார்வை மெல்ல தூண்டில் வீசுதே ...

ஏ பூக்கள் எங்கு பூக்கும் போதும் காற்றில் வாசம் வீசுமே...
நான் பேச வந்த வார்த்தை யாவும் கண்கள் இன்று பேசுமே ...

சொல்லாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே ...
நில்லாமல் கண்கள் தூண்டில் வீசுதே ...

ஏ காலம் வந்து மாயம் செய்து நெஞ்சை மாற்றிப் போகுதே ...
என்னுள்ளே இன்று காதல் வந்து கொஞ்சி கொஞ்சிப் பேசுதே...

பேசுதே பேசுதே ஆஹாஹா நெஞ்சமே பேசுதே ஆஹாஹா
பேசுதே பேசுதே நெஞ்சம் பேசுதே ...........


பார்த்தவை - 2
நேற்று சன் டிவில கோயம்புத்தூர் மாப்ளே படம் போட்டிருந்தாங்க.நம்ம இளமைக்கால விஜய் தான் ஹீரோ (இப்பவும் அவரு இளமைதான்). ஹீரோயினா நம்ம தளபதி விஜயை முன்னேற்றுவதற்காக தொடர்ந்து பல படங்களில் தன் கவர்ச்சியை விநியோகம் பண்ணிய சங்கவி.அப்புறம் நம்ம கவுண்டர் கூட நடிச்சிருக்காரு கூடவே செந்திலும்...இதுல என்ன விசயம்னா நம்மகிட்ட ஏர்டெல் டிஷ் தான் இருக்கு.ரிமோட்ல இன்ஃபோ அப்படிங்கிற பட்டனை அமுக்கினா படத்தோட கதை, நடிச்சவங்க பேரு வரும்.அப்படித்தான் இந்த பட்டனை அமுக்கிய போது, நடிச்சவங்க லிஸ்ட்ல சில்க் ஸ்மிதா, செந்தில்னு வந்துச்சி.....அடப்பாவிகளா....ஒரே ஒரு பாட்டுக்கு ஆடின சில்க்கை ஞாபகம் இருக்கு, படம் புல்லா நடிச்ச(?) நம்ம விஜயையே மறந்துட்டாங்களே இந்த நார்த் இண்டியா பசங்க.....


ருசித்தவை :
கோணக்கா.....கோணப்புளியங்கா....
கொடுக்காபுளி....இப்போ வீட்டுக்கு போனபோது வயக்காட்டுல இருந்த மரத்தில் பறிச்சது இந்த கோணக்கா....சாப்பிட்ட போது ஞாபகங்கள் பின்னோக்கி...... சிறுவயதில் சாப்பிட்ட ஞாபகம்.ஊரில் இருக்கிற அத்தனை மரங்களிலும் ஏறியும் கொக்கி போட்டு பறித்தும் சாப்பிட்டிருக்கிறேன். ஆட்டுக்கு தழை வெட்டணும்னா இந்த மரத்துலதான் ஏறுவோம்.அப்ப லட்டு லட்டா தொங்குற கோணக்காவை பறிச்சி டவுசர்ல போட்டுக்குவோம்.வீட்டுக்கு வந்து பொறுமையா சாப்பிடுவோம்.செம டேஸ்டா இருக்கும்.இளஞ்சிவப்பு கோணக்கா தான் செம டேஸ்ட்டா இருக்கும்.கோணக்கா கொட்டைய எடுத்து தோலை அதை காயம்படாம உளிக்கனும்.அதுலயும் போட்டி வைப்போம் யாரு அதிகமா உளிக்கிறாங்கன்னு.அப்படி உளிச்சு எடுத்து தலைகாணிக்கடியில வச்சி தூங்குவோம், அடுத்த நாள் எதுவாகவோ மாறியிருக்கும் என்கிற நம்பிக்கையில்... தாயக்கட்டை விளையாடும் போது இந்த கொட்டையை வச்சி விளையாடுவோம்..........ம்ம்...மலரும் நினைவுகள்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்

17 comments:

 1. திருடன் - திரைப்படமாகவே எடுக்கலாம் போல...!

  அடடா...! சீரியல் மாட்டிகிட்டீங்களா...? வளர்க வளமுடன்...!

  கொடுக்காபுளி... எங்கே கிடைக்குது...? அப்படியே கிடைத்தாலும் தொண்டை கவ் கவ் கவ்வுகிறது...! ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன்...
   கண்டிப்பா எடுக்கலாம் .செம விசயங்கள் இருக்கு..
   எப்பவாவது பார்ப்பதுதான் சீரியல்....
   எங்க ஊர்ல கிடைக்குது....யாரும் விற்க மாட்டாங்க..நாமதான் பறிச்சிக்கணும்

   Delete
 2. திருடன் மணியன் பிள்ளை ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும் போல! கொடுக்காபுளி நண்பர்கள் சாப்பிடுவார்கள்! தங்கைகளும் சாப்பிட்டு இருக்கிறார்கள் ஆனால் நான் சாப்பிட்டது இல்லை! இன்னுமா இந்த விஜய் படங்களை பார்க்கிறீங்க!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ்...
   செம இண்ட்ரஸ்டிங்கான புக்....
   ஊருக்கு வருவீங்க தானே...அப்போ எங்க வீட்டுக்கு போங்க...

   Delete
 3. திருடன் மணியன்பிள்ளையைப் படிக்கணும்
  சுவாரஸ்யமான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார்....

   Delete
 4. அந்த கொடுக்காபுளி...நாக்குல எச்சில் ஊருதய்யா !

  ம்ம்ம் பல்சுவை விருந்து அருமை !

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ....சிறுவயதில் சாப்பிட்டது...இப்போ சமீபத்தில் சாப்பிட்டது...
   நன்றாகவே இருக்கும்....

   Delete
 5. பகிர்வு,நன்று!//கொடுக்கா/கோண புளி செம டேஸ்ட்டு.நான் கூட சின்ன வயசில சாப்புட்டிருக்கேன்,ஒரு உறவுக்காரங்க வூட்ல நின்னுது.இப்ப இருக்கோ,இல்லியோ?ஹூம்!///அந்த சீரியல்......... பாத்துடுவோம்............!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றீ சார்....இப்பவும் கிடைக்கும் பழமுதிர் நிலையங்களில்....

   Delete
 6. நான் கொடுக்காபுளி சாப்பிட்ட நியாபகம் வந்தது.....

  ReplyDelete
 7. கதை விமர்சனம் எல்லாம் எழுதறீங்க...கூடிய சீக்கிரம் உங்களிடமிருந்து ஒரு நாவல்.... ஆஹா...சீரியல்ல மாட்டிக்கிட்டீங்களா.... கோணப்புளியங்காய் என் இளமைக்கால பாட்டி வீட்டு கோடை விடுமுறைகளை நினைவுபடுத்தியது...

  ReplyDelete
 8. புத்தகம் சுவாரசியம் என்றாலும் விலையும் பக்கங்களும் பயமுறுத்துகின்றன

  ReplyDelete
 9. தளபதிய மறந்துடானுங்களா எடு டா தலைவா பட டிவிடி ய

  ReplyDelete
 10. புத்தகம் - அறிமுகத்திற்கு நன்றி...

  கொடுக்காபுளி - தில்லியிலும் உண்டு. ஆனால் அத்தனை சுவை இல்லை...

  ReplyDelete
 11. கொடுக்காபுளி பார்த்ததும் நாக்கில் எச்சி ஊறுது...

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....