கலப்பட வெல்லம்
சாலையோரங்களில் விற்கும் கருப்பட்டி மற்றும் அச்சு வெல்லங்களை வாங்காதீர்கள்.அனைத்தும் கலப்படங்களே..
பெரியநாய்க்கன் பாளையம் செல்லும் வழியில் ஒரு கும்பல் இடமும் வலமும் நூறடி தூர இடைவெளியில் கடை பரப்பியிருந்தனர்.காரை விட்டு இறங்கியவுடன் உடனடி வியாபாரத்தை ஆரம்பிக்க, கிலோ 160 என்றனர் பிறகு 120 க்கு தருகிறோம் என்றனர்.உடன்குடி மற்றும் திருநெல்வேலியில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்கிறோம் என்றனர்.சேம்பிள் கொஞ்சம் உடைத்து தர வாயில் போட்டேன்.பனைக்கருப்பட்டியின் சுவையை விட சர்க்கரைப்பாகின் சுவை அதிகம் ஆக்ரமிக்கிறது.
இன்னொரு கருப்பட்டி வெல்லம் கிலோ 200 .அதில் இஞ்சி மிளகு சுக்கு சேர்த்து செய்திருக்கிறார்களாம். இருமல் சளி கபம் போன்ற வியாதிகளுக்கு நல்லதாம்.தேர்ந்த நாட்டுப்புற சித்த மருத்துவரைப்போல் பேச, வாயில் இட்டிருந்த வெல்லக்கட்டி கரையவும் ,போய்ட்டு வந்து வாங்கிறேன் என சொல்ல, இன்னும் பத்து ரூபாய் குறைத்து தருகிறேன் என ஆரம்பிக்க, வேணாம் பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்றபடி வண்டி ஏறினேன்.
என்னதான் பனை ஓலைப்பெட்டியில் வைத்து நல்லா மேக்கப் பண்ணி, அச்சு வெல்லம் மற்றும் கருப்பட்டியை கொடுத்தாலும் விஷம் விஷம் தானே.அது இனிக்கத்தான் செய்யும் அதில் எவ்வளவு கலப்படமிட்டிருந்தாலும்...
கரூர் அருகே உள்ள ஜேடர்பாளயத்தில் கரும்பு ஆலைகள் அதிகம்.அங்கு வெல்லப்பாகில் சர்க்கரையை கலந்து தான் வெல்லம் செய்கின்றனர்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
தமிழக அரசு நியமித்திருக்கும் உணவு ஆய்வாளர்கள் கவனிக்க!
ReplyDeleteகண்டிப்பா சோதனை பண்ணனும் உணவு ஆய்வாளர்கள்.
Delete