Wednesday, September 5, 2018

கரம் - 33

                        சமீபத்தில் கரூர் சென்றிருந்தேன்.முன்பெல்லாம் குறிப்பிட்ட ஏரியாக்களில் மட்டும் தான் கரம் கடை இருக்கும்.ஆனால் இப்பொழுதோ எல்லா சந்து பொந்துகளிலும் ஆரம்பித்து இருக்கின்றனர்.ஒரு தெருவை எடுத்துக்கொண்டால் குறைந்த பட்சம் மூன்று நான்கு கடைகள் இருக்கின்றன.எந்தக் கடையில் சாப்பிடுவது, எந்த கடையை விடுவது என்கிற குழப்பம் ஏற்படுகிறது.அப்படியே தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் சுவை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.ஐந்து ரோடு மக்கள் கரம் கடையில் சட்னி வகைகள் மட்டும் நான்கு வெரைட்டிக்கும் மேல் வைத்திருப்பார்.வித விதமாய் செட் கரம் சாப்பிடலாம்.மற்ற பக்கம் ஒரே ஒரு சட்னியை வைத்துக் கொண்டு கரம் கடையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
                                    கரம் என்பது பொரி, கேரட் பீட்ரூட், கொஞ்சம் முறுக்கு, கடலைப் பருப்பு,சட்னி சேர்ந்தது தான்.இதனுடன் முட்டை, சமோசா, குடல் அப்பளம் சேர்த்தால் தனித்தனி கரம் வகைகள்.
முட்டை கரம் எப்பவும் ஸ்பெஷல் தான் எனக்கு.சாப்பிட சுவையாக இருக்கும்.இதை சாப்பிட்டு விட்டு ஒரு செட்டு ஒன்று சாப்பிட வேண்டும்.தட்டுவடையோடு கேரட் பீட்ரூட் கலந்து சட்னியும் சேர்த்து நம் பல்லில் அரைபடும் போது ஏற்படும் சுவை இருக்கிறதே ஆஹா....செம...



நான் சாப்பிட்ட கரம் கடையில் உருண்டை வகைகள் வைத்திருந்தனர்.கம்பு, கொள்ளு, ராகி, எள், கோதுமை, பாசிப்பருப்பு என பலவகைகள்.ஒவ்வொன்றும் செம டேஸ்ட்.விலை ரூ 7.

ஜிலேபி மீன்: 
காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்திருப்பதால் மீன்கள் அதிகம் கிடைக்கும் என்று பார்த்தால் மீன் வரத்தே இல்லை.ஒரு சில பேர் தான் ஆற்றில்  மீன் பிடிக்கின்றனர்.அப்படித்தான் கடந்த வெள்ளியன்று எங்கள் ஊரில் மீன் பிடித்து கொண்டு வந்திருந்தனர்.அனைத்தும் ஜிலேபி மீன்.வாங்கி நன்கு சுத்தம் செய்து மசாலாவில் ஊறவைத்து தோசைக்கல்லில் சுட்டு சாப்பிட்டால் செம டேஸ்ட்.





கொஞ்சம் மஞ்சள் தூள். மிளகாய்த்தூள், கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட், கொஞ்சம் உப்பு சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் கழித்து தோசைக்கல்லில் போட்டு பொரித்து சாப்பிட்டால் சுவையான மீன் வறுவல் ரெடி...கடையில் விற்கிற மசாலாக்களை ஊருக்கு போனால் மட்டும் உபயோகிக்கவே மாட்டோம்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்

3 comments:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....