யா
முஹைய்யதீன் பிரியாணி
YAA.MOHAIDEEN
BIRIYANI
சென்னைக்கு
வந்திருப்பதால் கொஞ்சம் பிரபலமான கடைக்கு செல்வோம் என முடிவெடுத்து சென்றது முதலில்
சுக்குபாய் பிரியாணி கடைக்கு.அங்கு சென்றபின் தான் தெரிந்தது பாரத் பந்திற்கு ஆதரவு
தந்து கடையை மூடி இருப்பது.வெறும் கடையை மட்டும் போட்டோ எடுத்து விட்டு, அடுத்து பல்லாவரத்தில்
பேமஸான யா முகைதீன் பிரியாணிக்கு செல்லலாம் என முடிவெடுத்து விட்டு, முதலில் போன் செய்துவிட்டு
கடை இருக்கிறதா என்பதை கன்பார்ம் பண்ணிவிட்டு போலாம் என்று போன் போட்டதில் கடை இருக்கிறது
என பதில் வந்தது.
அடுத்த
அரை மணி நேரத்தில் அட்ரஸைக் கண்டுபிடித்து பிரியாணி கடையை அடைந்தோம்.
உழவர் சந்தை அருகில்
இருக்கிறது இந்த கடை.கார்கள், டூவீலர்கள் என நிறைய வழியெங்கும் நின்று கொண்டிருந்தன.நாங்களும்
காரை பார்க் பண்ணிவிட்டு வருகையில் ஆங்காங்கே கையில் தட்டுக்களை வைத்தபடி நின்று கொண்டு
சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.ஒரு சிலர் கைகளில் ஏந்தியபடி காரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.கடைக்கு
முன்னால் ஒரே கூட்டம்.ஒவ்வொருத்தர் கையிலும் பாக்கு மட்டை தட்டில் பிரியாணியை சுவைத்துக்
கொண்டிருந்தனர்.பார்சல்கள் நிறைய போய்க்கொண்டிருந்தன.வாளிகள் தொங்கி கொண்டிருப்பதை
பார்த்தால் பயங்கரமாக பேமிலி பார்சல் செல்லும் என தெரிகிறது.
விலைப்பட்டியல்
எங்களை வரவேற்றது.மொத்தம் நான்கு கடைகள் வரிசையாய் இருக்கிறது.முதலில் பில் செக்சன்.அடுத்தடுத்த
இரு கடைகள் சாப்பிடும் இடம், கடைசி கடையில் பிரியாணி அண்டாக்களில் இருந்து டெலிவரி
செய்யும் இடம்.உள்ளே உற்றுப்பார்த்ததில் அண்டா அண்டாக்களாய் பிரியாணிகள்.யூனிபார்ம்
இட்ட பணியாட்கள் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தனர்.வரிசையில் ஒவ்வொருவராய் கடந்து
கடைசியில் பிரியாணி வாங்கி நாங்களும் ரோட்டில் ஓரங்கட்டினோம்.
மட்டன்
பிரியாணி தான்.பாசுமதி அரிசியின் சுவை நன்றாக இருக்கிறது.கறி நன்றாக வெந்து இருக்கிறது.அரிசியின்
உதிரித்தன்மை கொஞ்சம் குறைவு தான்.மசாலாக்கள் நன்கு சேர்ந்து இருக்கின்றன.பிரியாணியின்
அளவு ரொம்ப அதிகம் தான்.ஒரே ஒரு முட்டையோடு மட்டன் துண்டுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன.பிரியாணியை
பார்த்தாலே நன்கு கலர்புல்லாக இருக்கிறது.சாப்பிட சாப்பிட சுவை சூப்பராக இருக்கிறது.
ஒரே ஒரு குறைதான்.தக்காளி துண்டுகள் நிறைய மென்மையாய் வதங்காமல் அப்படியே இருக்கின்றன.தக்காளியினால்
பிரியாணியின் சுவை ஒன்றும் குறைந்து விடவில்லை.தயிர்
பச்சடி புளிப்பில்லாமல் சுவையாகவே இருக்கிறது.கத்திரிக்காய் தால்ச்சா இருந்தது.ஆனாலும்
அதன் துணையில்லாமலே பிரியாணியை காலி பண்ணினோம்.
அங்கு
கூடும் கூட்டத்தினை பார்த்தாலே போதும் பிரியாணியின் சுவை எப்படி பட்டதென்று...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
yov..unakku kavuchchi kadai thaan kannukku theiyuma..mavane onna bjp aalungala vuttu kaima panna sollaren..
ReplyDelete