Saturday, September 22, 2018

பயணம் - சென்னை - சிறு உலாவல்


                 சென்னை செல்வதென்றாலே மனதுக்குள் கொஞ்சம் குதூகலம் அதிகமாகவே இருக்கும்.என்னதான் வெயில், டிராஃபிக் என அசெளரியங்கள் இருந்தாலும் தமிழகத்தின் தலைநகரை பார்க்கப் போவதில் ஒரு அலாதி இன்பம் இருக்கும்.காரணம் கடல்.மெரினா பீச்சில் கால்கள் மண்ணில் புதைய புதைய நடந்து, கடலில் அலைகள் மோத நீரில் கால் வைத்தவுடன் ஏற்படுகிற ஜில்லிப்பு இருக்கிறதே…அது அங்கு மட்டும் தான் கிடைக்கும்.ஈர நிலப்பரப்பில் கடல் அலைகள் பெரும் ரீங்காரத்துடன் வந்து சேருவதை பார்க்க அவ்வளவு ஆசையாக இருக்கும்.
               பீச் மணற்பரப்பில் சுனாமியே வந்தாலும் கவலைப்படாமல் காதல் கொள்ளும் ஜோடிகள் பார்க்க அழகு.தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் என விற்றுவரும் பொடிப் பையன்கள் அழகு.பொரித்த மீன் வாசம் வரும் மீன் கடைகள் அழகு.கடல் நீரில் கால்கள் நனைத்து விளையாடும் அம்மணிகள் அழகு.பீச் ஓரங்களில் கல்லா கட்டும் சிறு சிறு கடைகள் பார்க்க அழகு.





               திராவிட ஆட்சியின் முதுகெலும்புகளான அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் சமாதிகள் பார்க்க அழகு.சமீபத்தில் காலமாகி அங்கே இளைப்பாறிக் கொண்டு இருக்கும் கலைஞர் கருணாநிதி அவர்களின் சமாதியும் அழகு.இந்த நால்வரையும் பார்க்க வந்து குவியும் உடன்பிறப்புகள், ரத்தத்தின் ரத்தங்கள், பொதுமக்கள் என தினமும் இங்கே கூட்டம் கூடுகிறது.புரட்சித் தலைவியின் சமாதி இப்போது பொலிவு படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் அங்கே தொலைதூரமாக பார்த்து விட்டு வரும்படி இருக்கிறது.இந்த நினைவகங்களை பார்த்து வரும் மக்களிடம் விற்பனை செய்யவே வழியெங்கும் கடைவீதி போல கடைகள்.கடல் பாசி, சங்கு, கிளிஞ்சல்கள் கடைகள். ஐஸ்கீரிம் கடைகள்., உணவங்கள், மீன் கடைகள் என பலதும் வரவேற்கின்றன.







                 இந்த முறை சென்னை சென்றதில் திராவிட ஆட்சியாளர்கள் அனைவரின் சமாதிகளையும் கண்ட திருப்தி ஏற்பட்டது.அதற்கு பின் பிரியாணி கடைகளை தேடி தேடி சுவைத்ததில் ஒரு இன்பம்.அதையும் ஒவ்வொண்ணா எழுத ஆரம்பிக்கணும்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்




4 comments:

  1. அருமையான படங்களும்
    எண்ணங்களும்

    ReplyDelete
  2. ஆஹா.... சென்னை பயணமா.....

    வாழ்த்துகள். படங்கள் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலந்த வணக்கங்கள்..

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....