இப்போ சமீபத்துல
சிங்கப்பூர் போயிருந்தேன்.அங்க வித விதமா உணவு வகைகள் இருந்தாலும் நமக்கு எதுவுமே
செட் ஆகல.வெறும் பர்கர், பீர் அப்படின்னு சாப்பிட்டு உடம்பை தேத்தினேன்.ஆனாலும்
கிடைச்ச இடத்துல என்னென்ன இருந்துச்சோ அதை ஒரு கை பார்த்திட்டேன்.என்ன இருந்தாலும்
நம்ம ஊரு மாதிரி வருமா..நல்ல காரம் சாரமா...மூக்குல ஒழுகற மாதிரி நல்லா சுருக்ன்னு...சிங்கப்பூர்ல
தமிழர்கள் நிறைய பேர் வசிக்கிறதால் என்னவோ பெரும்பாலான கடைகளில் தமிழக உணவுகள் கிடைக்கின்றன.
அதிகமாய் தமிழர்கள் புழங்கும் இடமான லிட்டில் இந்தியாவில் ஏகப்பட்ட கடைகள் இருக்கின்றன.கிட்டத்தட்ட
அந்தந்த ஏரியாவில் இருக்கிற... கிடைக்கிற தமிழக உணவுகளை சாப்பிட்டிருக்கிறேன்.
அதே
போல் சிங்கப்பூர் வாசிகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளையும் சாப்பிட்டு
இருக்கிறேன்.பிரியாணிக்கு அப்பளம் தருவதை இங்கு தான் பார்க்கிறேன்.அதே போல் காரம்
சாரமாக வேண்டும் என்று நம் உணவுகளை விரும்பி வாங்கி சாப்பிடும் வெளிநாட்டினரையும்
பார்க்கிறேன். மொத்தத்தில் நன்றாக இருக்கிறது சிங்கப்பூர் தமிழக உணவுகள்.
காரசாரமா இருக்கிற
உணவுகளை பார்த்துட்டு வரும் ஏக்கப்பெருமூச்சினை தவிர்க்க ஜில்லுன்னு இருக்கிற மாதிரி
இந்த போட்டோ...
கிசுகிசு : வெளிநாட்டுல அம்மணிகள் இப்படித்தான் அரைகுறையா சுத்தி நம்மள சேது கணக்கா ஆக்குதுங்க...ஹிஹிஹிஹி...
பதிவர் சந்திப்பு - நாள் -1.9.2013, இடம் - சென்னை - அனைவரும் வாரீர்
நேசங்களுடன்
ஜீவானந்தம்