Showing posts with label சிங்கப்பூர். Show all posts
Showing posts with label சிங்கப்பூர். Show all posts

Thursday, December 12, 2013

கரம் - 12 (12.12.13)

புத்தககண்காட்சி 
கடந்த வாரம் கோவையில் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது.மிகக்குறைந்த அளவே ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன.புத்தகவிற்பனை மிக மந்தமாக இருந்தது என்று சொல்லலாம்.வரவேற்பின்றி தூங்கி வழிந்தன ஸ்டால்களும் கூடவே விற்பனையாளர்களும்.ஸ்டால் போட்ட காசுக்காவது புத்தகம்லாம் வித்திருக்குமா என்பது சந்தேகமே.நான் மூணு மணி வாக்குல உள்ளே நுழைந்தேன்.உலக சினிமா ரசிகன் கூட வந்ததினால் தள்ளுபடி விலையில சுஜாதா புக், ஜெயமோகன் புக் வாங்கிட்டு வந்தேன்.உள்ளே ஒரு சுத்து சுத்திட்டு வந்ததால் சூடா டீ சாப்பிடலாமே அப்படின்னு வெளியே இருக்கிற கேண்டீன்ல டீ சாப்பிட்டா அதுவும் ஆறிக்கிடக்குது...புத்தக கண்காட்சி போலவே....


******************************
ஒரு ஸ்டால்ல சுஜாதா எழுதின புக் பார்த்தேன்.புத்தக அட்டைப்படத் தலைப்பே ரொம்பத் தப்பா இருந்துச்சு.எப்படி இவ்ளோ பெரிய மிஸ்டேக் பண்ணி இருப்பாங்க அப்படின்னு யோசிச்சுகிட்டே ஒரு கிளிக் கிளிக்கிட்டேன்.
புத்தகத்தோட பேரு ஒரு பிராயாணம், ஒரு கொலை, 
ஆனா உள்பக்கம் சரியா பிரிண்ட் பண்ணி இருக்காங்க ஒரு பிரயாணம் ஒரு கொலை அப்படின்னு...கூடவே சுஜாதா எழுதின முதல் நாடகம்னு சின்ன குறிப்பு வேற.எப்படி அட்டைப்படத்தினை கோட்டை விட்டாங்க பதிப்பகத்தார்?


*************************************
கரூர்ல சிக்கன் வாங்க ஒரு கடைக்கு சென்றிருந்தபோது கடையில ஒரு கிரைண்டர் மாதிரி இருந்துச்சு.எவ்ளோ கறி வேணும்னு கடைக்காரர் கேட்க, ஒரு கிலோ ன்னு சொல்ல, உடனே உயிரோட இருந்த பிராய்லர் கோழி ஒண்ணை பிடிச்சி கழுத்த முறிச்சி சுடுதண்ணியில் போட்டு கொஞ்ச நேரம் அப்படி இப்படி திருப்பி அதை எடுத்து கிரைண்டர்ல போட்டு ஆன் பண்ணவும், பயந்தே போயிட்டேன்..கோழியை அரைச்சு மாவா கொடுத்திருவாரோ அப்படின்னு.... ஆனா கொஞ்ச நேரத்துல வெளிய எடுத்து பார்த்தா கோழி டிரஸ் இல்லாம இருக்கு.......ஆச்சரியப்பட்டு கிரைண்டருக்குள்ள எட்டிப்பார்த்தா கல்லுக்குப்பதிலா நீட்ட நீட்டமா ரப்பர் புஷ் நிறைய இருக்கு.கோழி இறகை பிடுங்கறதுக்காக பண்ணின மெசினாம்...ரெண்டு நிமிசத்துல சீக்கிரம் வேலையாகுது.மணிக்கணக்கா உட்கார்ந்து பிடுங்க தேவையில்ல.இப்படி பண்றது தோலோட கறி வாங்குறவங்களுக்கு மட்டும் தானாம்.அதுக்கப்புறம் மிச்சமிருக்கிற கொஞ்ச நஞ்ச முடிகளை லைட்டா பொசுக்கி மஞ்சள் போட்டு தேய்ச்சு கழுவி வெட்டி கொடுத்தாங்க...அப்புறமென்ன....அடுத்து சமையல் தான்...



*******************************
சிங்கப்பூர் கலவரம்
சிங்கப்பூரில் கலவரம் என்று நண்பன் அங்கிருந்து சொல்லும் போது கொஞ்சம் அதிசயமும் ஆச்சர்யமும் பட்டேன்.கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கிற ஊரில் எப்படி இப்படி நேர்ந்தது என்பதை நினைக்கும் போது தான் ஆச்சர்யமாகிறது.


டேக்கா என்று சொல்லப்படும் லிட்டில் இந்தியாவில் கடந்த முறை சென்ற போது கலவரம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள பொது மைதானத்தில் அமர்ந்து பேசி இருக்கிறோம்.சனி ஞாயிறு மட்டும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அந்த மைதானத்தில்  ஆங்காங்கே கூடி மது குடிப்பது வழக்கம்.அங்கு குவியும் தமிழர்கள் அனைவரும் கடின உழைப்பு தொழிலாளிகள். நண்பர்களோடு சேர்ந்து அரட்டை மற்றும் மது குடிப்பது வழக்கம்.இது எப்பவும் இருப்பதுதான்.தன் கண்முன்னே சக தொழிலாளி ஒருவர் இறந்ததைப் பார்த்தவுடன், போதையில் இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு செஞ்ச கண்மூடித்தனமாக செயல் தான் இது.40 வருடமாக எந்த கலவரமும் இல்லாத சிங்கப்பூரில் இந்நிகழ்வு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம்.இது நாள் வரை அனுபவித்து வந்த சலுகைகள் இனி குறையலாம்.இந்த கலவரம் ஏற்பட்டதால் இனி சனி ஞாயிறு அந்த பகுதிகளில் மது விற்பனை கிடையாதாம்.கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவருக்கும் 10ஆண்டு சிறைத்தண்டனை 8 கேன் ( சவுக்கடி ) நிச்சயமாம்.
நாடு விட்டு நாடு பொழைக்கபோன இடத்துல நாமதான் சூதானமா நடந்துக்கனும்.அதை விட்டுட்டு வம்பு வழக்குன்னு போயிட்டா நம்மள நம்பி இருக்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்றது.

**********************************
12.12.1950
இந்த நாளை யாராலும் மறக்க முடியாது.ஏன்னா சூப்பர் ஸ்டாரோட பிறந்தநாள்.சிறுவயதில் இருந்து பார்த்து ரசித்து இன்னமும் அவரின் ரசிகனாக இருப்பதில் கொஞ்சம் பெருமிதம் தான்.பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா...நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.



நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, August 26, 2013

பயணம் - சிங்கப்பூர் - EAST COAST PARK (ECP) - SINGAPORE, குடில் டேட்டிங், சைக்கிளிங், நீச்சல், பொழுது போக்கு

         ஒரு மதிய வேளை...மனதுக்கு இதமான இடத்துக்கு போவோம் என்றெண்ணி போனது இந்த East coast park பீச்சுக்கு.சிங்கப்பூரின் பெடோக் பகுதிக்கு அருகில் இருக்கிற இந்த பீச்சில் நம்மை புதுப்பித்துக்கொள்ள புத்துணர்ச்சி அடைந்து கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் இருக்கிறது.பொழுது போக்காய் மீன் பிடித்தல், பட்டம் விடுதல், நீச்சலடித்தல், வாட்டர் சர்ஃபிங், சைக்கிளிங், ரோலர் ஸ்கேட்டிங், கேம்ப் எனப்படும் குடில்கள்,நடைபயணம், மனம் ரிலாக்ஸ் ஆக பீச், குடும்பம் குடும்பமாய் கும்மியடிக்க பார்பிகியூ இடங்கள் என எல்லாமாய் இருக்கிறது.




                   பரந்து விரிந்து கிடக்கும் கடலினைப் பார்த்துக்கொண்டே ஓரு ஓரமாய் நடந்து செல்கையில் முதலில் கண்ணில் பட்டது இந்த குடிசைகள் சாரி குடில்கள் தான்.பச்சைப்புல்வெளியில் பசுமையான மரங்களுக்கு அடியில் ஆங்காங்கே நீல கலரில் குடில்கள் வியாபித்து இருந்தன.( நீலக்கலர் என்றதுமே அப்போது அது ஞாபகத்திற்கு வரவில்லை.) ஒரு வேளை நாடோடிக் கூட்டங்கள் தான் நட்டு வைத்து இருக்கின்றனரோ என ஒரு ஆச்சர்யத்தில் நண்பரைக் கேட்க அவர் சொன்னது இன்னும் படு ஆச்சர்யம்.வீக் எண்ட் களில் தள்ளிக்கொண்டு, அள்ளிக்கொண்டு, கட்டிக்கொண்டு, ஓட்டிக்கொண்டு (இன்னும் என்னென்ன வார்த்தைகள் இருக்கோ ) தனிமையைத்தேடி வரும் ஜோடிகள் சல்லாபிக்க சரசமாட சாரி பேசிக்கொள்ள அப்புறம் நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள பிரைவசி வேண்டி கட்டிக்கொள்ளும் குடில்கள் தான் அவை.




             எந்த தொந்தரவும் இல்லாமல் போலீஸ்க்கு பயப்படாமல், லாட்ஜ்களுக்கு செலவளிக்காமல் திறந்த வெளியில் குடில் அமைத்து தங்களை புதுப்பித்துக்கொள்ளும் / உணர்ந்து கொள்ளும் இடமாக குடில்களை அமைத்து சல்லாபித்துக்கொண்டு இருக்கின்றனர் கொடுத்த வைத்த குடிமக்கள்.இதுக்கு பேரு தான் குடில் டேட்டிங்கா...? குடில் விலை ஒரு சில டாலர்களில் அடங்கிவிடுவது மட்டுமே.அப்புறம் அம்மணிகளுக்கு பண்ற செலவு தவிர மத்தபடி எந்த செலவுமில்லை.ஆக மொத்தம் குறைந்த விலையில் நிறைந்த சுகம்.கொஞ்சம் பொறாமையோடு பார்த்துக்கொண்டு கடக்கையில் குடிலின் அசைவுகள் நம் உணர்வுகளை கொஞ்சம் அசைத்துப்பார்க்கிறது.



        நம்மூர்லயும் இந்த மாதிரி வசதிகள் வந்துவிட்டால் ரொம்ப நல்லாயிருக்கும்.ம்ம்ம்..ஒரு ஏக்கப்பெருமூச்சுதான்....தினத்தந்தி பேப்பரில் வர்ற மாதிரி நிறைய அசைவ செய்திகள் இருக்காது.70 வயசு கிழவியை கெடுத்தது, சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றது, அப்புறம் அங்க அவன் கெடுத்தான் இங்க இவன் கெடுத்துட்டான்னு பக்கம் பக்கமா நிச்சயமா நியூஸ் வராது.அதே சமயம் நம்மூர் சட்டம் கொஞ்சம் கடுமையா இருக்க வேண்டும்.கண்டிக்க, தண்டிக்க, துண்டிக்க பாரபட்சம் காட்டாமல் இருந்தால் இதுவும் சாத்தியமே.

      அப்படியே பேசிக்கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு நோட்டமிட்டதில் இந்த பீச் மிக சுத்தமாக இருக்கிறது.எந்த வித அசுத்தங்களோ, குப்பைக்கூளங்களோ இல்லை. பீச் ஏரியாவில் இந்த குடில்கள்  நிறைய இருந்தாலும் அம்மக்களை யாரும் எந்த வித தொந்தரவும் செய்யாமல் இருக்கின்றனர். குடில் இல்லாத மக்கள் குடும்ப குடும்பமாய் அடுப்பு மூட்டி பார்பிக்யூ சமையல் செய்து களிக்கின்றனர்.இன்னும் நிறைய பேர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு பீச்சினை வலம் வருகின்றனர்.இதற்காகவே சைக்கிள் வாடகைக்கு விடும் இடமும் இருக்கிறது.பேமிலி சைக்கிள் எனப்படும் ஒரு சைக்கிளில் குடும்பமே குதூகலமாக பீச்சினை சுற்றி வருகின்றனர்.







            ஒரு சிலர் பட்டம் பறக்க விட்டு கொண்டிருக்கின்றனர்.ஒரு சிலர் கடலில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.நம்மளை மாதிரி ஆட்கள் உலாவரும் அம்மணிகளை ரசித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளைக் கண்டபடி இன்னும் சிலர்.இப்படி ஒவ்வொருவரும் அமைதியான மாலைப் பொழுதினை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செலவிடுகின்றனர். 


       
           நன்றாக திட்டமிட்டு மீன்பிடிக்க இடம், வாட்டர் ஸ்கை செய்ய இடம். புல்வெளிகள், சைக்கிள் ஓட்ட பாதை, நடக்க ஒரு பாதை, மரங்கள், சமைத்து சாப்பிடுவர்களுக்கு டேபிள் என அமைத்து இருக்கின்றனர்.



               எல்லாம் ஆற அமர்ந்து பார்த்து ரசித்தபின் நாங்களும் கடலில் குதித்து எங்கள் களியாட்டத்தினை ஆரம்பித்தோம்.(ம்ம்ம்.என்ன பண்றது எங்களுக்குத்தான் குடில் இல்லையே..ஹிஹிஹி ).

               கடலில் குளித்த பின் நல்ல தண்ணீரில் குளிக்க தனித்தனி ஷவர் வைத்து இருக்கின்றனர்.அங்கேயே உடை மாற்றும் அறைகளும் இருக்கின்றன.டாய்லட் வசதிகளும் இருக்கின்றன.ஆனா நம்ம ஊர் பீச் களை நினைக்கையில் ரொம்ப வருத்தமாக இருக்கிறது.நம்ம கவர்மெண்ட்டுக்கு அவ்ளோ தான் முடியும்.மக்கள் தொகைப்பெருக்கம், லஞ்சம், ஊழல் என எல்லாம் பெருகி இருக்கும் போது என்னத்த செய்யுறது..என்னத்த சொல்றது....

                 இருட்ட துவங்கியவுடன் நடையைக்கட்ட ஆரம்பித்தோம்.செல்லும் போது குடில்களை பார்க்கின்ற போது ஒரு ஏக்கப்பெருமூச்சு வெளிவந்தது என்னவோ உண்மைதான்...ஏன்னா நம்மூர்ல தனிமையில் பேசிக்கொண்டிருந்த காதலர்களிடம் கத்தியைக்காட்டி பணம் பறிப்பு, (முடிஞ்சா கற்பையே பறிப்பு), பீச்சில் காதலர்களிடையே போலீசார் மாமூல் வசூல், மகாபலிபுரம் ஈசிஆர் ரோட்டுல போற வர்ற காதலர்கள்கிட்டே வண்டியை மறிச்சு பணம் வசூல் இப்படி நடக்கிறத பார்த்தா சிங்கப்பூர் குடில் வாழ்க்கை எவ்வளவோ தேவலாம்.

கிசுகிசு : குடிலுக்குள்ள தான் போக முடியல...அட்லீஸ்ட் அதுக்கு முன்னாடியாவது நின்னு போட்டோ எடுத்துக்கலாமே அப்படின்னு சிங்கப்பூர் நண்பருடன்.....

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்


ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Wednesday, August 21, 2013

கோவை மெஸ் - சென்டால் பானம்,(Cendol), சிங்கப்பூர்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஏரியாவில் கால் வலிக்க சுத்திட்டு இருக்கும் போது ரொம்ப வறண்டு போய் இருந்ததால் தாகத்துக்கு ஏதாவது குடிக்கலாமே அப்படின்னு ஒரு காம்ப்ளக்ஸ் குள்ள புகுந்தோம்.டேக்கா செண்டர் எனப்படும் அந்த மாலுக்குள் நுழைய ஏகப்பட்ட கடை கண்ணி(ன்னி)கள்.துணிக்கடை, ஹோட்டல், என நிறைய....ஒரு சுத்து சுத்திட்டு வந்து தோதா ஒரு இடத்தில் உட்கார பக்கத்தில ஒரு ஜூஸ் கடை...அதில் கொஞ்சம் வித்தியாசமா ஒரு பானம் இருந்துச்சு.கருப்பு கலர், பச்சை கலர், வெள்ளை  கலர் என கலர் கலரா இருக்க ஒரு அம்மணி வந்து வாங்கி குடிக்கவும் எனக்கு ஆர்வம்..என்னவா இருக்கும் அப்படின்னு.நமக்குன்னு ஒண்ணு கேட்கலாம்னு பார்த்தா அந்த கடைக்காரர் நம்ம ஊர்க்காரர்.விவரத்தை கேட்கவும் புட்டு புட்டு வைத்தார்.அது பேரு சென்டால் அப்படின்னு விவரத்தை சொல்ல.. சரி ..நமக்கு ஒரு கிளாஸ் என கேட்க ஸ்பெசலாய்  போட ஆரம்பித்தார்.பனங்கருப்பட்டி போட்டு தேங்காய் பால் ஊற்றி அரிசியில செஞ்ச நூடுல்ஸ் போட்டு ஐஸ்கட்டிகள் நிறைய போட்டு தந்தார்.
       ஓரு ஓரமா உட்கார்ந்து போக வர இருந்த அம்மணிகளை ரசித்துக்கொண்டே குடித்ததில்  சீக்கிரம் காலியாகிப்போனது.இந்த பானம் மிக நன்றாக இருக்கிறது..பனங்கருப்பட்டி வாசத்தில் தேங்காய்ப்பால் கலந்து ஜில்லென்று குடிக்க மிக சுவையாக இருக்கிறது.உடம்புக்கு குளிர்ச்சியைத்தரும் பானம் என்று கூடுதல் தகவலை சொன்னார்.இதன் விலை 1.20 டாலர்தான்.நன்றாக இருக்கிறது.





நிறைய தமிழர்கள் புழங்கும் இந்த இடத்தில் அவ்வப்போது அழகழகாய் வெளிநாட்டு அம்மணிகளின் வருகை மனதிற்கு இதமளிக்கிறது.
கண்டிப்பா அந்தப்பக்கம் போனீங்கன்னா குடிச்சுப்பாருங்க...செமையா இருக்கும்.
இந்த பானம் பத்தி ஒரு சிறு தகவல் இது மலேசியாவின் மலாக்காவில் மிகப்பிரபலமான பானம்.

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Sunday, August 18, 2013

பயணம் - சிங்கப்பூர் - MARINA BAY Sands , Singapore

கடந்த ஒரு வாரமா சிங்கப்பூர்ல ஊர் சுத்திட்டு இருந்தேன்.மிகப் பிரம்மாண்டமான அதே சமயம் மிகப் பிரமாதமான ஊர்.என்ன ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு, சுத்தம், அப்புறம் அழகழகான அம்மணிகள் என அம்சமாய் இருக்கிறது சிங்கப்பூர்.சிங்கப்பூர்ல மெரினா பே சாண்ட்ஸ் என்கிற இடத்திற்கு போனேன்.கப்பல் மாதிரி இருக்கிற கட்டிடம்.அண்ணாந்து பார்த்தா நிச்சயம் கழுத்து சுளுக்கிக்கும்.அவ்ளோ உயரமான கட்டிடம்.



ஸ்கைபார்க் எனப்படும் உச்சிக்கு மேலே போய் சுத்திப்பார்க்க  20 டாலர்.பில்டிங்கின் அண்டர்கிரவுண்டில் இருக்கிற கவுண்டரில் டிக்கெட் வாங்கிட்டு உள்ளே நுழைகையில் இந்த பில்டிங்கின் மாடல் இருக்கிறது.அதை பார்த்துவிட்டு நகர்கையில் நம்மை இழுத்துப்பிடித்து போட்டோ எடுக்கிறார்கள்.நாங்களும் போஸ் கொடுத்துவிட்டு லிஃப்ட்க்குள் போனோம். லிஃப்ட் மேலே போக போக காது உய்ங்...கிறது.56 மாடிக்கு போக வெறும் 32 செகண்ட்ஸ் தான்.செம பாஸ்ட்..கதவை திறந்து வெளிய பார்த்தா நம்ம போட்டோவை (அந்த பிரம்மாண்டமான கப்பல் பில்டிங் பேக்ரவுண்ட்ல நிக்க வைச்சு  எடுத்த போட்டோ) வச்சி கூவிக்கிட்டு இருந்தாங்க. அட...அதுக்குள்ளயா...என ஆச்சரியப்பட்டே 30 டாலர் கொடுத்து வாங்கிக் கொண்டோம்.(வரலாறு வேணும்ல).



அப்படியே நடந்து போனா கப்பலோட மேற்பரப்புல இருக்கோம்.சுத்தியும் கண்ணாடித்தடுப்பு வைத்திருக்கிறார்கள்.அதில சாய்ந்துகிட்டு ஒவ்வொருத்தரும் செமையா போஸ் கொடுத்துகிட்டு இருக்காங்க.நாங்களும் அந்த ஜோதில ஐக்கியமாகிட்டோம்.மேலிருந்து கீழே பார்த்தால் எல்லாம் துக்குனூண்டு தெரியுது...சிங்கப்பூரோட ஒட்டு மொத்த அழகும் தெரியுது.கடல், கட்டிடம், ரோடு என எல்லாம் மிக அழகாய் தெரிகிறது.இந்த பில்டிங்கில் தான் இன்பினிடி ஃபூல் என்கிற நீச்சல் குளம் இருக்கிறது.இதில் நமக்கு குளிக்க அனுமதி இல்லை.எட்ட நின்னு பார்க்க மட்டுமே.அப்படி எட்டி பார்த்துவிட்டு பெருமூச்சினை விட்டபடி வேற பக்கம் நகர்ந்தோம்.






இந்த கப்பலின் மேற்பரப்பில் சுத்தி சுத்தி பார்த்துகொண்டே அதிசயப்பட்டோம். சிங்கப்பூர் அழகை ரசித்துக்கொண்டே இருக்கிறோம்..நேரம் போனதே தெரியவில்லை.அம்மணிகள் வேற அரைகுறை ஆடைகளுடன் உலாவுகிறார்கள்...அங்கிருந்து கிளம்ப மனசே இல்லை.சும்மா வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துட்டு (அம்மணிகளை இல்லை..அங்கிருந்து தெரிகிற சிங்கப்பூர் அழகினை) கிளம்பினோம்.

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Friday, August 16, 2013

கோவை மெஸ் - தமிழக உணவுகள், சிங்கப்பூர்

இப்போ சமீபத்துல சிங்கப்பூர் போயிருந்தேன்.அங்க வித விதமா உணவு வகைகள் இருந்தாலும் நமக்கு எதுவுமே செட் ஆகல.வெறும் பர்கர், பீர் அப்படின்னு சாப்பிட்டு உடம்பை தேத்தினேன்.ஆனாலும் கிடைச்ச இடத்துல என்னென்ன இருந்துச்சோ அதை ஒரு கை பார்த்திட்டேன்.என்ன இருந்தாலும் நம்ம ஊரு மாதிரி வருமா..நல்ல காரம் சாரமா...மூக்குல ஒழுகற மாதிரி நல்லா சுருக்ன்னு...சிங்கப்பூர்ல தமிழர்கள் நிறைய பேர் வசிக்கிறதால் என்னவோ பெரும்பாலான கடைகளில் தமிழக உணவுகள் கிடைக்கின்றன. அதிகமாய் தமிழர்கள் புழங்கும் இடமான லிட்டில் இந்தியாவில் ஏகப்பட்ட கடைகள் இருக்கின்றன.கிட்டத்தட்ட அந்தந்த ஏரியாவில் இருக்கிற... கிடைக்கிற தமிழக உணவுகளை சாப்பிட்டிருக்கிறேன்.








அதே போல் சிங்கப்பூர் வாசிகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளையும் சாப்பிட்டு இருக்கிறேன்.பிரியாணிக்கு அப்பளம் தருவதை இங்கு தான் பார்க்கிறேன்.அதே போல் காரம் சாரமாக வேண்டும் என்று நம் உணவுகளை விரும்பி வாங்கி சாப்பிடும் வெளிநாட்டினரையும் பார்க்கிறேன். மொத்தத்தில் நன்றாக இருக்கிறது சிங்கப்பூர் தமிழக உணவுகள்.

காரசாரமா இருக்கிற உணவுகளை பார்த்துட்டு வரும் ஏக்கப்பெருமூச்சினை தவிர்க்க ஜில்லுன்னு இருக்கிற மாதிரி இந்த போட்டோ...
கிசுகிசு : வெளிநாட்டுல அம்மணிகள் இப்படித்தான் அரைகுறையா சுத்தி நம்மள சேது கணக்கா ஆக்குதுங்க...ஹிஹிஹிஹி...

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, August 6, 2013

கோவை நேரம் - சிங்கப்பூரில்

புதிய வானம்.... புதிய பூமி...

நம்ம நேரம் இப்போ இண்டர் நேசனல் நேரமாகி இருக்கிறது.ஆம்.இப்போது நான் சிங்கப்பூர்ல இருக்கேன்.இன்று காலை தான் சிங்கை ஏர்போர்ட் வந்தடைந்தேன்.ஒரு வாரம் சிங்கப்பூர்ல தான் டேரா...என் வாசகப்பெருமக்களை சந்திக்க போகிறேன்.என்னை வரச்சொல்லி அழைப்பு விடுத்த (அப்படியே டிக்கெட் போட்டு தங்கறதுல இருந்து திங்கறது, தூங்கறது வரைக்கும் எல்லா செலவும் பண்ற ) அந்த நண்பருக்கு நன்றி. ஏற்கனவே சிங்கப்பூர் போயிருக்கேன்.இந்த தடவை சிங்கை நண்பர்கள் கூட ஜாலியா இருக்க போறேன்.ஆகஸ்ட் 14 தான் சிங்கப்பூருக்கு சுதந்திர தினம்..ஏன்னா நான் தான் அங்கிருந்து கிளம்பிடுவேன்ல...ஹிஹிஹி.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா என என் பயணம் மீண்டும் அமைந்து இருக்கிறது.


அக்கரை சீமை அழகினிலே.....
மனம் ஆடக் கண்டேனே.....

எவ்ளோ நாள்தான் உள்ளூர் அம்மணிகளை பார்ப்பது...செக்க சிவந்த வெளிநாட்டு  அம்மணிகள் வேற..சும்மா இருப்பமா.....ஹிஹிஹி

நம்மூருக்கு வந்தவுடன் ஒவ்வொரு பதிவா போட்டு கொன்னெடுக்கிறேன்
அதுவரைக்கும்......ஒரு சின்ன கேப். (ட்ராப்ட்ல இருக்கிறது ஒவ்வொண்ணா வெளில வரும்....ஹிஹிஹி )


பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, December 10, 2012

வெளிநாட்டு அனுபவம் - சிங்கப்பூர் - 1

சிங்கப்பூர்...ஒரு பூலோக சொர்க்கம்.இந்த சிங்கப்பூரை பத்தி நம்ம தலைவர் ஒரு படத்துல பாடி இருப்பார்.
 அக்கரை சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே...

புதுமையிலே மயங்குகிறேன்.....
அக்கரை சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே...
பார்க்க பார்க்க ஆனந்தம்
பறவை போல உல்லாசம்

மஞ்சள் மேனி பாவைகள்
தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை உம்மை பாராட்ட
நடை பார்த்து மயில் ஆடும்
மொழி கேட்டு கிளி பேசும்
கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்
சொர்க்கம் போல இன்பமும் பெருமையும்
வாழும் சிங்கப்பூர்....
அக்கரை சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே...
அங்க போயும் அம்மணிகளை பத்தி முப்பது வருசத்துக்கும் முன்பே பாடி இருக்காரு..
ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், சீரான போக்குவரத்து, சுத்தம் சுகாதாரம்  என அம்சமாய் இருக்கிறது சிங்கப்பூர்.அதுபோலவே வெளிநாட்டு அம்மணிகளும்.... அதிகமாய் அரை டிரவுசர் போட்டுக்கொண்டு....பார்க்க பார்க்க அதிசயத்து போகிறேன்.



MRT எனப்படும் ரயில் சேவை...மிக அருமை.எல்லாரிடமும் ஒரு ஒழுங்கு இருக்கிறது.யாரும் முண்டியடுத்து ஏறுவதில்லை.அவரவர் தத்தம் மொபைல் போன், ஐ பாட், என மூழ்கி இருக்கின்றனர்.அனைவரிடமும் ஸ்மார்ட் கார்டு இருக்கிறது.உள்ளே நுழைவது முதல் வெளியேறுவது வரை அனைத்தும் ஸ்மார்ட் கார்டின் மூலம் தான்.
நம்ம ஊர்ல இதெல்லாம் எப்போ வருமோ....
இரவு நேரம் ஊரே விழித்து இருக்கிறது,ஷாப்பிங் மால்களில் , பப்களில் விடிய விடிய இருக்கின்றனர்.
நாங்களும் முஸ்தபா சென்டர் அருகில் இருக்கும் ஒரு பப் போனோம்...ஒரே சவுண்ட்..துள்ளலான இசை...சரி..செமையா இருக்கும் அப்படின்னு உள்ளே போய் பார்த்தா ஆடிக்கிட்டு இருக்கிறது எல்லாம் நடுத்தர வயது அம்மணிகள்...அட போங்கப்பா....
வெறுத்துப் போய் ஒரு லார்ஜ் மட்டும் சாப்பிட்டு விட்டு வெளியேறினோம்.மூன்று மணி வரை சிங்கப்பூர் இரவினை ரசித்தோம்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்.



இன்னும் கொஞ்சம்...