Friday, August 16, 2013

கோவை மெஸ் - தமிழக உணவுகள், சிங்கப்பூர்

இப்போ சமீபத்துல சிங்கப்பூர் போயிருந்தேன்.அங்க வித விதமா உணவு வகைகள் இருந்தாலும் நமக்கு எதுவுமே செட் ஆகல.வெறும் பர்கர், பீர் அப்படின்னு சாப்பிட்டு உடம்பை தேத்தினேன்.ஆனாலும் கிடைச்ச இடத்துல என்னென்ன இருந்துச்சோ அதை ஒரு கை பார்த்திட்டேன்.என்ன இருந்தாலும் நம்ம ஊரு மாதிரி வருமா..நல்ல காரம் சாரமா...மூக்குல ஒழுகற மாதிரி நல்லா சுருக்ன்னு...சிங்கப்பூர்ல தமிழர்கள் நிறைய பேர் வசிக்கிறதால் என்னவோ பெரும்பாலான கடைகளில் தமிழக உணவுகள் கிடைக்கின்றன. அதிகமாய் தமிழர்கள் புழங்கும் இடமான லிட்டில் இந்தியாவில் ஏகப்பட்ட கடைகள் இருக்கின்றன.கிட்டத்தட்ட அந்தந்த ஏரியாவில் இருக்கிற... கிடைக்கிற தமிழக உணவுகளை சாப்பிட்டிருக்கிறேன்.
அதே போல் சிங்கப்பூர் வாசிகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளையும் சாப்பிட்டு இருக்கிறேன்.பிரியாணிக்கு அப்பளம் தருவதை இங்கு தான் பார்க்கிறேன்.அதே போல் காரம் சாரமாக வேண்டும் என்று நம் உணவுகளை விரும்பி வாங்கி சாப்பிடும் வெளிநாட்டினரையும் பார்க்கிறேன். மொத்தத்தில் நன்றாக இருக்கிறது சிங்கப்பூர் தமிழக உணவுகள்.

காரசாரமா இருக்கிற உணவுகளை பார்த்துட்டு வரும் ஏக்கப்பெருமூச்சினை தவிர்க்க ஜில்லுன்னு இருக்கிற மாதிரி இந்த போட்டோ...
கிசுகிசு : வெளிநாட்டுல அம்மணிகள் இப்படித்தான் அரைகுறையா சுத்தி நம்மள சேது கணக்கா ஆக்குதுங்க...ஹிஹிஹிஹி...

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

14 comments:

 1. வாவ்.. சிங்கப்பூர் போகணம் என ரெம்ப நாள் ஆசை. பார்க்கலாம், அந்த ஜில் ஜில் இடத்தைக் காணவாவது போயிடணம்..! :))

  ReplyDelete
  Replies
  1. மிகவும் அற்புதமான ஊர்..கண்டிப்பாக காண வேண்டிய ஊர்

   Delete
 2. சிங்கப்பூரே குட்டி தமிழ்நாடுதானே ஜீவா?!

  ReplyDelete
  Replies
  1. ஆமா...நம்மூரு மாதிரி அம்மணிகள் இல்ல...ஹிஹிஹி

   Delete
 3. தமிழ்நாட்டில் எங்கே காரசாரமாகக் கிடைக்கிறது..? மெளுகு வாசம்தான் பல உணவுகளில். காரம் கம்மியே. ஆந்திராவில் கார உணவுகள் கிடைக்கலாம். ஆனால் சுவை பிடிக்கவில்லை. கேரளாவும் அப்படியே. இருந்தபோதிலும் தமிழ் நாட்டு அன்பர்களோ விருந்தினர்களோ இங்கே (மலேசியா சிங்கப்பூர்) வந்தால்.. உணவுகளைக் கண்டு மிரள்வார்கள். நான் கொலபட்டினியாகக் கிடப்பேனேயொழிய இந்த உணவுகள் மட்டும் வேண்டாம் என்கிற வேட்கையில்.... :)

  ReplyDelete
  Replies
  1. என்னது தமிழ்நாட்டுல காரசாரமா கிடைக்கலயா...அப்போ நீங்க சரியான ஹோட்டலுக்கு போகலன்னு அர்த்தம்..வாங்க ஒரு நாளைக்கு கூட்டிட்டு போறேன்...
   மூக்குல தண்ணி வருதா இல்லையானு பார்ப்போம்...

   Delete
 4. பார்த்து ரசித்த இடங்களை படத்துடன் சொல்லுங்க நண்பரே

  ReplyDelete
 5. மச்சி, என்ன வாங்கிட்டு வந்தே? சவுண்டே இல்ல?

  ReplyDelete
  Replies
  1. வாங்கி வந்ததெல்லாம் காலியாப்போச்சே...நான் என்னத்த சொல்ல...

   Delete
 6. //தமிழ்நாட்டில் எங்கே காரசாரமாகக் கிடைக்கிறது..? மெளுகு வாசம்தான் பல உணவுகளில். காரம் கம்மியே. ஆந்திராவில் கார உணவுகள் கிடைக்கலாம். ஆனால் சுவை பிடிக்கவில்லை. கேரளாவும் அப்படியே.//

  உங்களுடைய கருத்து தான் என்னுடையதும். தமிழ்நாட்டுக்கு அடிக்கடி போகும் வழக்கம் எனக்குமுண்டு. தமிழ்நாட்டைப் பற்றிய என்னுடைய முதல் முறைப்பாடு, உணவு தான். எதுவுமே சுவையாகவுமில்லை. தமிழ்நாட்டுக்கென தனித்துவமான உணவுமில்லை. ஒரே அரைத்தமாவை அல்லது புளித்துப்போன ரவாவை வெவ்வேறு பெயர்களில் தயாரித்து பரிமாறுவார்கள். ஒரு மாதம் அங்கு நின்றதும் எப்படா திரும்பிபோய் சுவையாக எதையாவது சாப்பிடுவேன் என்றாகி விடும். ஆந்திராவில் கொஞ்சம் காரம் ஆனால், உணவு வகை ஒரே மாதிரியானவை தான். கேரளாவில் உணவு இலங்கை போல் இருந்தாலும், இலங்கை உணவுகளின் சுவையும், தரமும் அங்குமில்லை. சிலவேளை இந்தியாவில் உணவின், தரமும் சுவையும் அதிகளவில் சனத்தொகை உள்ளதால் பாதிக்கப்படுகிறது என நினைத்துக் கொள்வேன். Five star ஹோட்டல்களில் கூட இந்தியாவில் மற்ற நாடுகளில் அதேயுணவை ஒப்பிடும்போது தரமும், சுவையும் குறைவு தான். :)

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு தமிழ்நாட்டுக்கு அடிக்கடி போகுற பழக்கமா...? பாஸ்..நான் தமிழ்நாடேதான்...வாங்க ஒரு நாளைக்கு நான் கூட்டிட்டு போறேன்..தமிழ்நாடு அப்படின்னாலே இட்லி தோசை தான்..வேற எதுவும் இல்லை...ஆனா அதுக்கு மேட்சா நான் வெஜ் இருக்கே...
   இட்லிக்கு வறுவல்,குடல்,ஆப்பத்திற்கு ஆட்டுக்கால் பாயா, தோசைல கறி தோசை, இப்படி ஏகப்பட்ட வெரைட்டி இருக்கே...

   Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....