Showing posts with label ஏலகிரி. Show all posts
Showing posts with label ஏலகிரி. Show all posts

Friday, October 10, 2014

தானம்

சமீபத்தில் ஜோலார்பேட்டை வரை  செல்லவேண்டியிருந்ததால் நடுநிசியில் பயணப்பட்டு காலை வேளையில் ஜோலார்ப்பேட்டை ஜங்சனில் கால் பதித்தேன்.எப்பவும் போல அந்த காலை வேளையில் ரயில் நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்தது.ஏறுவதும் இறங்குவதுமாக பயணிகள்... தூக்க கலக்கத்துடனும் எந்த ஸ்டேசன் என்று எட்டிப்பார்த்து மீண்டும் தன் தூக்கத்தினை தொடர்கின்ற பயணிகள், இருக்கின்ற மிச்ச மீதி தூக்கத்தினையும் கலைக்கும் விதமாக காபி....டீ....காபி...டீ  என ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக சூடான டீ காபி வாளியினை தூக்கிக்கொண்டு சேவலுக்குப்பதிலாய் கூவி கூவி எழுப்பி தங்கள் விற்பனையை ஆரம்பித்துக்கொண்டிருந்தனர்...
வழி அனுப்புவர்களும், வரவேற்க வந்தவர்களுமாய் ஒரு கூட்டம் அலைந்து திரிந்து கொண்டிருந்தது.எனக்கான பிளாட்பார்மில் இறங்கி ஸ்டேசனை விட்டு வெளியேற ஆரம்பித்தேன்.காலைப்பொழுது நல்ல இதமானதாக இருக்கவே நடந்து சென்றால் ஒரு சில கலோரிகளை இழந்து கொஞ்சம் அழகுறலாமே என்ற எண்ணத்தில் நடை போட ஆரம்பித்தேன்...இழுத்துப்போர்த்தியபடி கடைகளும், கடை ஓரங்களில் ஆதரவற்றவர்களும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

சிறிது தூரம் சென்றவுடன் கிளைமேட் கொஞ்சம் மங்கலாக இருக்க, குளிர் காற்று வீசத்தொடங்கியது.குளிருக்கு இதமாக இருக்குமே என்று அருகிலிருந்த ஒரு ஹோட்டலோடு இணைந்த டீக்கடை கண்ணுக்கு தெரிய ஒதுங்கினேன்.நம்பார்வையை படித்த டீமாஸ்டர், காபியா டீயா ? என கேட்க, டீதான் என சொல்ல சூடாய் டீ வந்தது.கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருந்த ஏலகிரி மலையில் தவழ்ந்து சென்ற மேகங்களை ரசித்தபடி சுற்றிலும் திரும்ப, டீக்கடையில் ஏகப்பட்ட பிளக்ஸ் போர்டுகள், சிலேட்டு அறிவுப்புகள் என என் கவனத்தினை ஈர்த்தது...




ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தன.கடை ஓனரை கண்டிப்பாக பாராட்ட வேண்டுமே என்று டீ மாஸ்டரை கேட்டதில் அருகில் காலை விற்பனைக்காக மும்முரத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது மனிதரை  கை காட்டினார்.முண்டாசு பனியனுடன் தீவிரமாக இருந்த அவரை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு குடித்த டீக்காக பணத்தினை கொடுத்துவிட்டு மனநிறைவோடு கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்தேன்...சில அடி தூரம் தான்..மெல்லமாய் தூறல்கள் எட்டிப்பார்த்தன...பிறகு கொட்டென கொட்டித் தீர்த்தது மழை....

நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, January 25, 2012

அருள்மிகு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் - ஜலகாம் பாறை - ஏலகிரி - திருப்பத்தூர்

ஜலகாம் பாறை....ஏலகிரி மலையினை ஒட்டி அமைந்துள்ள ஒரு திருத்தலம்.முருகன் தம்பதி சமேதராக சிவலிங்க வடிவில் உள்ள கோவிலில் அருள் பாலிக்கிறார். இங்கு ஏலகிரி மலைகளில் இருந்து உருவாகும் சிறு அருவி திருமால் முருகன் தீர்த்தம் என்று அழைக்கபடுகிறது.திருப்பத்தூரில் இருந்து 20  கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஜலகாம்பாறை இருக்கிறது.மலை சூழ்ந்த இடம் ஆதலால் மிகவும் ரம்மியமாக இருக்கிறது.வெங்கடேச பெருமாளின் பாதம் பட்ட இடம் ஆதலால் அவர்க்கும் ஒரு கோவில் அமைத்து கும்பிடுகின்றனர்












அமைதி...அமைதி...அப்படி ஒரு அமைதி...சலசலக்கும் அருவி சத்தம், கோவில் மணி யோசை என மிக அருமையாக இருக்கிறது.மலையின் மேல் கோவில் இருந்தாலும் அடிவாரம் என்று ஒன்றும் இல்லை.ஆனாலும் அங்கு கடை கண்ணிகள் இருக்கிறது.சுட சுட பணியாரம் , கரும்பு ஜூஸ், என திடீர் கடைகள் நிறைய இருக்கின்றன.





அருவியில் நீர் (கொஞ்சமாக) தற்போது வந்து கொண்டிருக்கிறது.குளிக்க ஜில்ல்னு இருக்கிறது.ஒரு சில சீசன்களில் மட்டும்தான் அதிகம் வருமாம்.
ஆனால் எப்போதும் நீர் வரத்து இருக்குமாம்.அப்புறம் நம்ம முன்னோர்கள் இங்கும் வாசம் செய்கிறார்கள்.அப்புறம் எப்பவும் போல நம்ம அம்மணிகள் அவங்கங்க ஆளுகளோட...திருப்பத்தூரில் இருந்து 20  கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஜலகாம்பாறை இருக்கிறது

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, January 23, 2012

ஏலகிரி மலை - திருப்பத்தூர்

திருப்பத்தூர்க்கு அருகில் உள்ள கோடை மலை வாசஸ்தலம் ஏலகிரி.ஒரு சில ஹேர் பின் வளைவுகள் கொண்ட மலைப்பாதைகள் உடைய ஒரு பிக்னிக் ஸ்பாட்.அதிக குளிரும் இல்லாமல் அதிக வெய்யிலும் இல்லாமல் இருக்கிறது.படகு துறை இருக்கிறது.அப்புறம் தொலை நோக்கி மையம் ஒன்றும் உள்ளது.13  வளைவுகள் இருக்கிறது.ஒவ்வொரு வளைவிற்கும் .கம்பர், இளங்கோவன், ஒளவையார், பாரி, ஓரி, காரி , பேகன் என அழகிய தமிழ் பெயர்கள்.ட்ரெக்கிங் செல்ல அருமையான இடம்.மலை பழங்கள் என பலாபழம் ராம சீதா பழம் போன்றவை இருக்கிறது.இவை யாவும் ஏலகிரியில் விளைகின்றன என்று.... சொல்லி விற்கின்றனர். கொம்பு தேன் மற்றும் மலை தேன் என்றும் விற்கிறார்கள்.
மத்தபடி பெருசா ஒண்ணும் இங்க இல்ல...என்ன.....இங்க
நிறைய ஜோடிகள் கூட்டம் மட்டுமே.கூட்டிகிட்டு அப்புறம் ஓட்டிகிட்டு வந்தது அப்புறம் அள்ளிகிட்டு வந்ததும் தள்ளிகிட்டு வந்ததும்தான் அதிகமாக இருக்கிறது.(ஹி..ஹி ஹி ..)






அப்புறம் நமது முன்னோர்கள் நிறைய பேர் இருக்காங்க வழியெங்கும். ஒரு அம்மா படகு இல்லம் அருகில் மீன் வறுத்து விற்கிறார்கள்.நல்ல சுவையுடன் இருக்கிறது





 ஒருநாளில் சென்று வர ஏலகிரி ஓகே.அதிக செலவும் இருக்காது

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...