Showing posts with label கும்பக்கரை. Show all posts
Showing posts with label கும்பக்கரை. Show all posts

Monday, August 6, 2012

கும்பக்கரை அருவி - பெரியகுளம், தேனி

கும்பக்கரை அருவி..
தேனி செல்லும் போது பெரியகுளம் ஊரை அடைவதற்கு முன்னால் கும்பக்கரை அருவி என்கிற போர்டினை பார்த்து உள்ளே நுழைந்தோம்.
இரு புறங்களிலும் புளிய மரங்கள் நிறைய..அப்புறம் அதிக எண்ணிக்கையில் கடைசி அறுவடையில் மாமரங்களும்......அருவி செல்லும் வரையிலும் இரு புறமும் நல்ல பசுமையுடன் இருக்கிறது.

கொஞ்சம் சீக்கிரமாகவே சென்று விட்ட படியால் கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியதாகி போனது. அந்த நேரத்திலும் வாடிக்கையாளர்களின் வருகையை எதிர் நோக்கி சுக்கு டீ கடை போட்டு காத்திருந்த ஒரு வயதான பெண்மணியிடம் சூடாய் வாங்கி அவர்களின் முதல் போணியை ஆரம்பித்து வைத்தோம்..
குடித்து முடிப்பதற்குள் மூடியிருந்த கேட்டை திறக்க ஆள் வர பத்து ரூபாய் கொடுத்து உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.இரு புறமும் கம்பி வேலி போட்டு நல்ல முறையில் சாலை போடப்பட்டு இருக்கிறது.கொஞ்ச தூரம் சென்றவுடன் கும்பக்கரை மல்லேஸ்வர் கோவில் நம்மை வரவேற்கிறது.வண்டியை நிறுத்தி விட்டு ஈஸ்வரனுக்கு ஒரு அட்டனன்ஸ் போட்டு விட்டு அருவியை நோக்கி நடந்தோம்.
 
சுற்றிலும் பாறை..பாறை..பாறை..பாறையை தவிர ஒன்றும் இல்லை..ஒரு வாய்க்கால் அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.பாறையை குடைந்து வைத்து இருக்கிற இடத்தில அந்த தண்ணீர் கொட்டுகிறது.அருவியின் உயரம் என்பது கொஞ்சம் கூட இல்லை.சீசன் காலங்களில் மட்டும் பாறை முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்கும் போல...இப்போது ஆங்காங்கே அனைத்து பாறைகளும் பள்ளங்களும் தெரிகிறது. 
அருவி தண்ணீருக்கே உண்டான குளிர்ச்சி நம் கால் வைக்கையில் சில்லிடுகிறது.கொஞ்ச நேரம் பாறையை சாரி அருவியை ரசித்து விட்டு வெளியேறினோம்.அருவியின் கரையோரத்தில் முருகனும் விநாயகனும் அருள் பாலிக்கின்றனர்.அப்புறம் பெண்களுக்கான உடை மாற்றும் வசதி கொண்ட அறைகள் இருக்கிறது.பாதுகாப்பாய் குளிக்க கம்பிகள் போட்டு இருக்கின்றனர்.வஞ்சிகளின் வருகை இல்லாமல் வறண்டு கிடக்கும் மனங்களை போல் இந்த பாறைகளும்  இப்போதைக்கு இருக்கின்றன.(நாங்களும் எழுதுவோம்ல...கவிதை...)
தண்ணீர் வரத்து இருக்கிற காலங்களில் சென்றால் நிச்சயம் நம்மை மகிழ்வூட்ட கூடிய இடமாய் இருக்கும்.
பெரியகுளம் செல்லும் வழியில் வலதுபுறம் 7 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அருவி இருக்கிறது.


நேசங்களுடன்
ஜீவானந்தம்.

இன்னும் கொஞ்சம்...