Monday, August 6, 2012

கும்பக்கரை அருவி - பெரியகுளம், தேனி

கும்பக்கரை அருவி..
தேனி செல்லும் போது பெரியகுளம் ஊரை அடைவதற்கு முன்னால் கும்பக்கரை அருவி என்கிற போர்டினை பார்த்து உள்ளே நுழைந்தோம்.
இரு புறங்களிலும் புளிய மரங்கள் நிறைய..அப்புறம் அதிக எண்ணிக்கையில் கடைசி அறுவடையில் மாமரங்களும்......அருவி செல்லும் வரையிலும் இரு புறமும் நல்ல பசுமையுடன் இருக்கிறது.

கொஞ்சம் சீக்கிரமாகவே சென்று விட்ட படியால் கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியதாகி போனது. அந்த நேரத்திலும் வாடிக்கையாளர்களின் வருகையை எதிர் நோக்கி சுக்கு டீ கடை போட்டு காத்திருந்த ஒரு வயதான பெண்மணியிடம் சூடாய் வாங்கி அவர்களின் முதல் போணியை ஆரம்பித்து வைத்தோம்..
குடித்து முடிப்பதற்குள் மூடியிருந்த கேட்டை திறக்க ஆள் வர பத்து ரூபாய் கொடுத்து உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.இரு புறமும் கம்பி வேலி போட்டு நல்ல முறையில் சாலை போடப்பட்டு இருக்கிறது.கொஞ்ச தூரம் சென்றவுடன் கும்பக்கரை மல்லேஸ்வர் கோவில் நம்மை வரவேற்கிறது.வண்டியை நிறுத்தி விட்டு ஈஸ்வரனுக்கு ஒரு அட்டனன்ஸ் போட்டு விட்டு அருவியை நோக்கி நடந்தோம்.
 
சுற்றிலும் பாறை..பாறை..பாறை..பாறையை தவிர ஒன்றும் இல்லை..ஒரு வாய்க்கால் அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.பாறையை குடைந்து வைத்து இருக்கிற இடத்தில அந்த தண்ணீர் கொட்டுகிறது.அருவியின் உயரம் என்பது கொஞ்சம் கூட இல்லை.சீசன் காலங்களில் மட்டும் பாறை முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்கும் போல...இப்போது ஆங்காங்கே அனைத்து பாறைகளும் பள்ளங்களும் தெரிகிறது. 
அருவி தண்ணீருக்கே உண்டான குளிர்ச்சி நம் கால் வைக்கையில் சில்லிடுகிறது.கொஞ்ச நேரம் பாறையை சாரி அருவியை ரசித்து விட்டு வெளியேறினோம்.அருவியின் கரையோரத்தில் முருகனும் விநாயகனும் அருள் பாலிக்கின்றனர்.அப்புறம் பெண்களுக்கான உடை மாற்றும் வசதி கொண்ட அறைகள் இருக்கிறது.பாதுகாப்பாய் குளிக்க கம்பிகள் போட்டு இருக்கின்றனர்.வஞ்சிகளின் வருகை இல்லாமல் வறண்டு கிடக்கும் மனங்களை போல் இந்த பாறைகளும்  இப்போதைக்கு இருக்கின்றன.(நாங்களும் எழுதுவோம்ல...கவிதை...)
தண்ணீர் வரத்து இருக்கிற காலங்களில் சென்றால் நிச்சயம் நம்மை மகிழ்வூட்ட கூடிய இடமாய் இருக்கும்.
பெரியகுளம் செல்லும் வழியில் வலதுபுறம் 7 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அருவி இருக்கிறது.


நேசங்களுடன்
ஜீவானந்தம்.

17 comments:

 1. //வஞ்சிகளின் வருகை
  இல்லாமல் வறண்டு கிடக்கும் மனங்களை போல்
  இந்த பாறைகளும் இப்போதைக்கு இருக்கின்றன.//

  கவிதை கவிதை...

  ReplyDelete
 2. அம்மம்மா..காற்று வந்து ஆடை தொட்டுப் போகும்..எனும் பாடல் படமாக்கப்பட்ட இடம் இதுதான் என நினைக்கிறேன்! தெரிந்தவர்கள் சொல்லலாமே!

  ReplyDelete
 3. மாப்ள, கழுத ச்சே கவித ......ம் கலக்குரீகளே

  ReplyDelete
 4. //நம்ம சொந்த காரங்க//

  மாப்ள, சொந்தக்காரங்க கொஞ்சம் கவனியுங்கோ

  ReplyDelete
 5. குளிக்கலீங்களா?

  ReplyDelete
 6. சீசன் காலம் எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்க... :))
  இப்ப பார்க்கவே அவ்ளோ அருமையா இருக்கு...!!

  ReplyDelete
 7. கும்பக்கரை பாக்க சைலன்ட்டா, ஆரவாரம் அதிகமா இல்லாத அருவி... ஆனா, ஆளை முழுங்கும் பயங்கரம் இங்கு அதிகம்....

  இப்போ கம்பி தடுப்புகள், இன்னும் சில பாதுகாப்பு காரணங்கள், மற்றும் தண்ணீர் வரத்து குறைவு ஆகிய காரணங்களால் விபத்து நடப்பது இல்லை...

  ReplyDelete
 8. கும்பக்கரை பத்தி பதிவ போட்டு என் புது டிஜிட்டல் கேமரா தண்ணியில மூழ்கினத்தை ஞாபகப்படுத்திடிங்க மச்சி....

  எப்படியோ கேமராவை சரி பண்ணியாச்சு...

  ReplyDelete
 9. Very very dangerous falls.... Please avoid this spot

  ReplyDelete
 10. சிறப்பான படங்களுடன் அருவி அறிமுகம் சூப்பர்! கவிதையும்தான்!

  இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

  ReplyDelete
 11. எங்க ஊர் பக்கம் வந்துட்டீங்க....
  படங்களுடன் பதிவு அருமை....
  தொடர வாழ்த்துக்கள்...


  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  ReplyDelete
 12. ஆஹா அருவி, கண்கொள்ளா காட்சி....! மிக்க நன்றி....

  ReplyDelete
 13. ///(நாங்களும் எழுதுவோம்ல...கவிதை...)//

  நான்கு முறை படித்து பார்த்துவிட்டேன் நீங்கள் குறிப்பிட்ட கவிதையை இந்த பதிவில் காணவில்லையே ஒரு வேலை இனிமேல் எழுதி இணைப்பீர்களோ!

  இப்படிக்கு
  அப்பாவி தமிழன்! :D :D

  ReplyDelete
 14. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி


  வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

  தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

  ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

  அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


  மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
  95666 61214/95666 61215

  ReplyDelete
 15. நல்ல தேவையான தகவலுடனான பதிவு.ஊர் சுற்ற ஆரம்பிக்கலாம். நன்றி.

  ReplyDelete
 16. வஞ்சிகளின் வருகை
  இல்லாமல் வறண்டு கிடக்கும் மனங்களை போல்
  இந்த பாறைகளும் இப்போதைக்கு இருக்கின்றன.// nice

  ReplyDelete
 17. என்னங்க.. இது எல்லாம் அருவின்றாங்களா?
  படம் நல்லா இருக்கு.

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....