Showing posts with label கோலாலம்பூர். Show all posts
Showing posts with label கோலாலம்பூர். Show all posts

Monday, November 12, 2012

வெளிநாட்டு அனுபவம் - கோலாலம்பூர், மலேசியா - 4

ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ் முடித்து விட்டு வந்து சேர்ந்த இடம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர்.ஓங்கி உயர்ந்த, பளபளப்பான கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கட்டிடங்கள், அடுத்து அடுத்து தொடர்ந்து கட்டப்பட்ட கட்டிடங்கள் என ஊர் முழுக்க உயர்ந்த கட்டிடங்கள்.நம்ம ஜெய் பார்த்த மாதிரி அதாங்க பட்டி காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி அண்ணாந்து பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கி கொண்டது தான் மிச்சம்.









முதலில் சென்ற இடம் கேஎல் டவர்.இது மலேசியாவின் முக்கிய லேண்ட்மார்க் ஆக இருக்கிறது.இந்த டவர் மலேசியாவின் தொலை தொடர்பு மற்றும் ஒளிபரப்பு விசயங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.ஒரு மலை மீது 421 மீட்டர் உயரத்தில் இது அமைக்க பட்டு இருக்கிறது.இதன் மேலே சென்றால் ஒட்டு மொத்த கோலாலம்பூர் அழகையும் காணலாம்.
அப்புறம் சென்ற இடம் ட்வின் டவர்.பெட்ரோனாஸ் டவர் என்று அழைக்கப்படும் ரொம்ப உயரமான கட்டிடம்..அண்ணாந்து பார்க்கவே முடியல...அவ்ளோ உயரம்...இரண்டும் ஒன்று போலவே இருக்கிறது. இரண்டிற்கும் இடையே இணைப்பு பாலம் வேறு உயரத்தில் இருக்கிறது.(451.9 மீட்டர் உயரம் உள்ள இந்த கோபுரம், 88 அடுக்குகளை கொண்டது. 41, 42வது தளங்களில், இரு கோபுரங்களையும் இணைக்கும் பாலம் உள்ளது).மேலே செல்ல வில்லை.அங்கிருந்து பார்த்தால் இன்னும் அழகாக தெரியும் கோலாலம்பூர்.

 
 
 அடுத்து சென்றது இஸ்தானா நெகரா எனப்படும் அரண்மனைக்கு.மலேசியா அரசின் மன்னராட்சி முறை இன்னும் இருக்கிறது என்பதற்கு இந்த அரண்மனை ஒரு எடுத்துக்காட்டு.பரந்து விரிந்து இருக்கிறது.உள்ளே செல்ல வில்லை.வெளியே  இருந்து பார்த்து ரசித்தோம்.

அப்புறம் இன்னும் ஒரு சில இடங்கள்.அப்படி ஒன்றும் அதிகம் ஈர்க்கவில்லை.மலேசியாவை உருவாக்கியவர்களுக்காக நினைவு சின்னம் இருக்கும் இடம் அங்கு ஒரு சில போட்டோக்கள் மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து விடை பெற்றோம்.


மலேசியாவில் கண்டு களிக்க ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன.ஓரிரு நாட்களில் எல்லாவற்றையும் பார்த்து முடித்து விட முடியாது போல.ரெண்டு மூணு மாசம் வேணும்.ஒவ்வொரு பகுதியிலும் சில நாட்களை செலவிட வேண்டும்.எனது பயணம் மலேசியா கோலாலம்பூர் சுற்றியே அமைந்து இருந்தது.அதனால் குறைவான இடங்களை பார்க்க நேரிட்டது,மீண்டும் செல்ல கூடிய ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.மிக முக்கியமான இடங்கள் நிறைய இருக்கின்றன.விரைவில் வாய்ப்புகள் வரும் என்றே நினைக்கிறேன்.

கிசுகிசு : இந்த பதிவிலும் அம்மணிகள் பத்தின வார்த்தைகள் இடம் பெறவில்லை...ஹி ஹி ஹி

நேசங்களுடன்
 ஜீவானந்தம்.
இன்னும் கொஞ்சம்...

Wednesday, October 31, 2012

வெளிநாட்டு அனுபவம் - பத்துமலை,கோலாலம்பூர், மலேசியா

கோலாலம்பூரில் இருந்து முதலில் சுற்றிப் பார்க்கப் போன இடம் பத்துமலை என்கிற பட்டு கேவ்ஸ் (Batu Caves )..அப்பா அம்மா கிட்டே கோவிச்சுகிட்டு மலை ஏறின நம்ம ஊரு முருகன் இருக்கிற இடம்..ஜக ஜக என தங்க கலரில் மிக உயரமாக ஜொலிக்கும் முருகன்.வெளிநாட்டிலும் நம்ம ஊர் கடவுளுக்கு இவ்வளவு வரவேற்பா என ஆச்சரிய பட வைக்கிறது இந்த கோவில். உள்ளே நுழையும் போதே பெரிய வேல் ஒன்று நம்மை வரவேற்கிறது.கோவிலை சுற்றி இடம் நல்ல விஸ்தாரமாக  இருக்கிறது.முறையாய் பராமரிக்கப்பட்டு இருக்கிறது.(நம்ம ஊர் மாதிரி குப்பை கூளங்கள் காணோம்).மலையின் அருகே ஓடுகிற பத்து என்கிற ஆறின் பெயரால் இந்த குகை அழைக்கப்படுகிறது.இந்த முருகன் கோவிலை நிர்மாணித்தது ஒரு தமிழர் என்பது இன்னும் ஆச்சரியமே...
அடிவாரத்தில் இருந்து குகைக்கு செல்ல படிகள் இருக்கின்றன.நமக்கு படியில் செல்ல தெம்பு இல்லாத காரணத்தினால் கீழேயே இருந்து முருகனை தரிசித்தோம்.கூடவே வெளி நாட்டு அம்மணிகளையும்...
மேலே இருக்கிற குகைக் கோவிலில்  சுண்ணாம்புக் குன்றுகளிலான பல குகைகள் இருக்கின்றன.அரிய வகை விலங்கினங்களும் தாவரங்களும் இருக்கின்றனவாம்..இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.சரி..சரி..நமக்கு எதுக்கு வரலாறு எல்லாம்...
சும்மா ஜக ஜகன்னு ஜொலிக்கிறாரு முருகன்..அவர மாதிரியே ஒரு சில அம்மணிகளும் ஜொலிக்குதுங்க...என்ன பண்றது..நம்ம முருகனுக்கு வந்த வாய்ப்ப பாருங்க...வெளிநாட்டுல சும்மா ஜெக ஜோதியா.....
 
 
 
 
 
 
 அடிவாரத்தில் நிறைய புறாக்களின் கூட்டம் இருக்கிறது.அவை பறப்பதும் அமர்வதும் என அழகாய் இருக்கிறது....அதை சுற்றி ஒரே கூட்டம்....புறாவை பார்க்கவா இல்ல அம்மணிகளை பார்க்கவான்னு தெரியல...
தமிழக கோவில்களில் இருப்பது போலவே இங்கும் ஒரு சில பிளாட்பார கடைகள்.தமிழ் பெயர்ப்பலகை தாங்கிய ஹோட்டல், என சிறப்பாய் இருக்கிறது.
 
 
 
 
இந்த பத்துமலை கோவில் அருகிலேயே ராமாயண குகை என சொல்லப்படுகிற குகைக்கு செல்லும் வழியில் ஆஞ்சனேயர் சிலை ஒன்றும் இருக்கிறது.அப்புறம்...இங்க தைப்பூசத் திருவிழா தமிழகத்தை விடவும் வெகுசிறப்பாகக் கொண்டாடப் படுமாம். நேர்த்திக் கடன்களுக்காக  பால் காவடி, மச்சக் காவடி, பன்னீர்க் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என பல காவடிகள் எடுப்பார்களாம் இந்து,  சீன, மலாய் மக்கள்...

கோலாலம்பூரில் இருந்து 15 கிலோ மீட்டருக்குள் இந்த பத்து மலை இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...