Showing posts with label வெளிநாடு. Show all posts
Showing posts with label வெளிநாடு. Show all posts

Saturday, April 6, 2013

கோவை மெஸ் - நாசி லெமக் ( NASI LEMAK ), மலேசிய உணவு வகை

நாசி லெமக் ( Nasi lemak).
மலேசியாவின் ஃபேமஸான உணவு இந்த நாசி லெமக்.இதைப்பத்தி அதிகம் தெரியல.ஒரு முறை மலேசியா செல்லும் போது ஏர் ஆசியா விமானத்தில் மெனு கார்டுல இந்த உணவு வகையை பார்த்திட்டு இருந்தோம்...மதிய வேளை வேற...அப்பப்ப விமானத்தின் பணிப்பெண்கள் குறுக்கும் நெடுக்கும் நடந்து விட்டு இருந்ததில் நமக்கு பசியை உண்டு பண்ணியிருந்தனர்....பசி வயித்தைக் கிள்ளுது...பாவை அவர்களின் நடை உடை நம்ம மனசைக் கொல்லுது...அட....டி ஆர் மாதிரி வருதே....சரின்னு அம்மணிகளை வரச்சொல்லி சாப்பிட ஆர்டர் செய்தோம். (அம்மணிகள் பக்கத்துல வரவே பசி பத்தும் பறந்து போச்சு...ஹிஹிஹி...)எதுக்கு இதை ஆர்டர் பண்ணினோம்னா இந்த மெனுவில் தான் சாதம் இருந்தது.கொஞ்ச நேரம் அழகான ராட்சசிகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம் எப்போ வரும்... வருவார்கள் என்று....
ஒரு தள்ளுவண்டியில் ஒய்யாரமாக நடை நடந்து வந்து கொண்டிருந்தனர்.நம் அருகே வந்ததும் குயில் கூவ ஆரம்பித்தது...பார்த்துக்கொண்டே பக்குவமாய் உணவை வாங்கினோம்...
நம்மளை போலவே அவர்களின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து இருக்கை நபர்களின் பசியை போக்க பாவை நகர்ந்து செல்லவே.... பசியானது அதிகரிக்க ஆரம்பித்தது...உடனே பிரிக்க ஆரம்பித்தோம்....வாசனை மூக்கைத்துளைக்கிறது...
 
ஏர் ஆசியா கஃபே என்கிற பெயரில் சின்ன பாக்சில் தான் தருகிறார்கள்.மிதமான சூடு இருந்தது.உணவுகள் குறைவாக இருந்தது..தேங்காய் பாலில் வேகவைக்கப்பட்ட சாதம், அவிச்ச அரை முட்டை, சில பொறித்த மீன்கள் (நம்மூர் நெத்திலி போல ), சிக்கன் துண்டுகள் கிரேவியுடன், சம்பல் எனப்படும் சில்லி இறால் சாஸ், கொஞ்சம் பொறித்த நிலக்கடலை...
முதல் முதலாய் அயல்நாட்டு வகை உணவினை சுவைப்பதில் ஒரு ஆர்வம்.அதுவும் விமானத்தில்..மிக சுவையாக இருந்தது.அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு சுவையைத் தந்தன.சாதமும் சிக்கன் கிரேவியும் செம காம்பினேசன்.சாஸ் இன்னும் நன்றாக இருந்தது. என்ன காம்பினேசனோ தெரியவில்லை...நிலக்கடலை அவ்வளவு சுவையாக இருந்தது.
உணவுகள் சுத்தமாய் பத்தவில்லை..ஆயினும் ருசியால் பசி அடங்கியது. ஆரஞ்சு ஜூஸ் தாகத்தை தணிக்க  உணவினை காலி பண்ணினோம்....
உணவுகள் குறைவாக இருந்தாலும் விலை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.(பின்னே...10000 அடி உயரத்திற்கும் மேல சாப்பிடறோம்....ரேட்டு என்ன குறைவாகவா இருக்கும்...) ஆனால் செம டேஸ்ட்..
அதுக்கப்புறம் மலேசியா இறங்கிட்டு கெந்திங் ஹைலேண்ட்ஸில் மறுபடியும் நாசி லெமக் ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன்.முதல் முறை விமானத்தில் இருந்த சுவை மீண்டும் காணாமல் போய் இருந்தது.ஆனால் நன்றாக இருந்தது..ஆப்பாயில், வெள்ளரி, என புதிதாய் இருந்தது..



இந்த உணவு வகை பற்றி நிறைய அறியணும்னா விக்கி பீடியா போங்க..எவ்ளோ டீடெயில்ஸ்...

சமீபத்தில் தான் ஃபேஸ்புக்கில் நமது நண்பர்கள் பகிர்ந்து இருந்தனர் இந்த உணவு பற்றி.அதனால் தான் இந்த பதிவு.



நேசங்களுடன்
ஜீவானந்தம்.

இன்னும் கொஞ்சம்...

Monday, December 10, 2012

வெளிநாட்டு அனுபவம் - சிங்கப்பூர் - 1

சிங்கப்பூர்...ஒரு பூலோக சொர்க்கம்.இந்த சிங்கப்பூரை பத்தி நம்ம தலைவர் ஒரு படத்துல பாடி இருப்பார்.
 அக்கரை சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே...

புதுமையிலே மயங்குகிறேன்.....
அக்கரை சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே...
பார்க்க பார்க்க ஆனந்தம்
பறவை போல உல்லாசம்

மஞ்சள் மேனி பாவைகள்
தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை உம்மை பாராட்ட
நடை பார்த்து மயில் ஆடும்
மொழி கேட்டு கிளி பேசும்
கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்
சொர்க்கம் போல இன்பமும் பெருமையும்
வாழும் சிங்கப்பூர்....
அக்கரை சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே...
அங்க போயும் அம்மணிகளை பத்தி முப்பது வருசத்துக்கும் முன்பே பாடி இருக்காரு..
ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், சீரான போக்குவரத்து, சுத்தம் சுகாதாரம்  என அம்சமாய் இருக்கிறது சிங்கப்பூர்.அதுபோலவே வெளிநாட்டு அம்மணிகளும்.... அதிகமாய் அரை டிரவுசர் போட்டுக்கொண்டு....பார்க்க பார்க்க அதிசயத்து போகிறேன்.



MRT எனப்படும் ரயில் சேவை...மிக அருமை.எல்லாரிடமும் ஒரு ஒழுங்கு இருக்கிறது.யாரும் முண்டியடுத்து ஏறுவதில்லை.அவரவர் தத்தம் மொபைல் போன், ஐ பாட், என மூழ்கி இருக்கின்றனர்.அனைவரிடமும் ஸ்மார்ட் கார்டு இருக்கிறது.உள்ளே நுழைவது முதல் வெளியேறுவது வரை அனைத்தும் ஸ்மார்ட் கார்டின் மூலம் தான்.
நம்ம ஊர்ல இதெல்லாம் எப்போ வருமோ....
இரவு நேரம் ஊரே விழித்து இருக்கிறது,ஷாப்பிங் மால்களில் , பப்களில் விடிய விடிய இருக்கின்றனர்.
நாங்களும் முஸ்தபா சென்டர் அருகில் இருக்கும் ஒரு பப் போனோம்...ஒரே சவுண்ட்..துள்ளலான இசை...சரி..செமையா இருக்கும் அப்படின்னு உள்ளே போய் பார்த்தா ஆடிக்கிட்டு இருக்கிறது எல்லாம் நடுத்தர வயது அம்மணிகள்...அட போங்கப்பா....
வெறுத்துப் போய் ஒரு லார்ஜ் மட்டும் சாப்பிட்டு விட்டு வெளியேறினோம்.மூன்று மணி வரை சிங்கப்பூர் இரவினை ரசித்தோம்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்.



இன்னும் கொஞ்சம்...

Monday, November 12, 2012

வெளிநாட்டு அனுபவம் - கோலாலம்பூர், மலேசியா - 4

ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ் முடித்து விட்டு வந்து சேர்ந்த இடம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர்.ஓங்கி உயர்ந்த, பளபளப்பான கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கட்டிடங்கள், அடுத்து அடுத்து தொடர்ந்து கட்டப்பட்ட கட்டிடங்கள் என ஊர் முழுக்க உயர்ந்த கட்டிடங்கள்.நம்ம ஜெய் பார்த்த மாதிரி அதாங்க பட்டி காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி அண்ணாந்து பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கி கொண்டது தான் மிச்சம்.









முதலில் சென்ற இடம் கேஎல் டவர்.இது மலேசியாவின் முக்கிய லேண்ட்மார்க் ஆக இருக்கிறது.இந்த டவர் மலேசியாவின் தொலை தொடர்பு மற்றும் ஒளிபரப்பு விசயங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.ஒரு மலை மீது 421 மீட்டர் உயரத்தில் இது அமைக்க பட்டு இருக்கிறது.இதன் மேலே சென்றால் ஒட்டு மொத்த கோலாலம்பூர் அழகையும் காணலாம்.
அப்புறம் சென்ற இடம் ட்வின் டவர்.பெட்ரோனாஸ் டவர் என்று அழைக்கப்படும் ரொம்ப உயரமான கட்டிடம்..அண்ணாந்து பார்க்கவே முடியல...அவ்ளோ உயரம்...இரண்டும் ஒன்று போலவே இருக்கிறது. இரண்டிற்கும் இடையே இணைப்பு பாலம் வேறு உயரத்தில் இருக்கிறது.(451.9 மீட்டர் உயரம் உள்ள இந்த கோபுரம், 88 அடுக்குகளை கொண்டது. 41, 42வது தளங்களில், இரு கோபுரங்களையும் இணைக்கும் பாலம் உள்ளது).மேலே செல்ல வில்லை.அங்கிருந்து பார்த்தால் இன்னும் அழகாக தெரியும் கோலாலம்பூர்.

 
 
 அடுத்து சென்றது இஸ்தானா நெகரா எனப்படும் அரண்மனைக்கு.மலேசியா அரசின் மன்னராட்சி முறை இன்னும் இருக்கிறது என்பதற்கு இந்த அரண்மனை ஒரு எடுத்துக்காட்டு.பரந்து விரிந்து இருக்கிறது.உள்ளே செல்ல வில்லை.வெளியே  இருந்து பார்த்து ரசித்தோம்.

அப்புறம் இன்னும் ஒரு சில இடங்கள்.அப்படி ஒன்றும் அதிகம் ஈர்க்கவில்லை.மலேசியாவை உருவாக்கியவர்களுக்காக நினைவு சின்னம் இருக்கும் இடம் அங்கு ஒரு சில போட்டோக்கள் மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து விடை பெற்றோம்.


மலேசியாவில் கண்டு களிக்க ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன.ஓரிரு நாட்களில் எல்லாவற்றையும் பார்த்து முடித்து விட முடியாது போல.ரெண்டு மூணு மாசம் வேணும்.ஒவ்வொரு பகுதியிலும் சில நாட்களை செலவிட வேண்டும்.எனது பயணம் மலேசியா கோலாலம்பூர் சுற்றியே அமைந்து இருந்தது.அதனால் குறைவான இடங்களை பார்க்க நேரிட்டது,மீண்டும் செல்ல கூடிய ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.மிக முக்கியமான இடங்கள் நிறைய இருக்கின்றன.விரைவில் வாய்ப்புகள் வரும் என்றே நினைக்கிறேன்.

கிசுகிசு : இந்த பதிவிலும் அம்மணிகள் பத்தின வார்த்தைகள் இடம் பெறவில்லை...ஹி ஹி ஹி

நேசங்களுடன்
 ஜீவானந்தம்.
இன்னும் கொஞ்சம்...

Saturday, November 10, 2012

வெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் (கெந்திங்) ஹைலேண்ட்ஸ், மலேசியா - 3


First World - Genting Hilands 
நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் மிகப் பிரமாண்டமான ஹோட்டல். மொத்தம் 6118 அறைகள் இருக்கின்றன.இந்த ஹோட்டலை ஒட்டியே தான் மால், கேசினோ, தீம்பார்க் என அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. இந்த ஹோட்டலில் தங்குபவர்களுக்கு காலை உணவும், இரவு உணவும் காம்ப்ளிமென்ட் ஆக தருகிறார்கள்.மிக சிறந்த உணவு.....பபே முறையில் வெஜ் நான் வெஜ் என ஏகப்பட்ட வகைகள்...சாப்பிடத்தான் வயிற்றில் இடமில்லை.பல்வேறு வகை உணவும் மிக சுவையுடன் நன்றாக இருக்கிறது.முக்கியமாய் அனைத்து நான் வெஜ்களும் இருக்கிறது.நம்மூர்ல முட்டை வெள்ளையா இருக்கும்.இங்க பழுப்பு நிறத்தில் இருக்கு.ஆனா ஆப்பாயில் எப்பவும் போல வெள்ளையும் மஞ்சளா தான் இருக்கு.என்ன உப்பும் மிளகும் இல்லாமல் தருகிறார்கள்.
அப்புறம் ஹாட் டாக்ஸ் எனப்படும் சிக்கன் ரோல் நன்றாக இருக்கிறது.அப்புறம் நிறைய வெரைட்டி.....ஆடு, இறால், மீன், என










 இருக்கிற பருப்பு, தானியங்கள் அனைத்தும் அழகாய் பாட்டிலில் கலர் கலராய் அடுக்கி வைத்து இருக்கின்றனர்.பார்க்க மிக நன்றாக இருக்கிறது





 




 




ஸ்வீட் வகையில் நிறைய வகைகள், ஐஸ்க்ரீம், கேக், ஜெல்லி என கலர்கலராய்...இது எல்லாம் இரவு டின்னரில் சாப்பிட்டு பார்த்தவை..இதே மாதிரிதான் காலை உணவும்.எப்படி சாப்பிட்டு இருக்கேன் பாருங்க.இரண்டு மூன்று தினங்கள் எல்லாம் பத்தாது போல...அனைத்தையும் பார்த்திட ...சுவைத்திட...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...