Showing posts with label செங்கல்பட்டு. Show all posts
Showing posts with label செங்கல்பட்டு. Show all posts

Wednesday, October 17, 2012

கோவை மெஸ் : தாபா எக்பிரஸ், மஹிந்தரா வோர்ல்டு சிட்டி, செங்கல்பட்டு

தாபா எக்பிரஸ்...மஹிந்தரா வோர்ல்டு சிட்டி, செங்கல்பட்டு

நம்ம வேலை இங்க நடக்கிறதால் ஒரு வெள்ளிக்கிழமை அன்னிக்கு இந்த ஹோட்டலுக்கு போனேன்.இந்த ஏரியா ஒரு சாஃப்ட்வேர் என்பதால் ஆங்காங்கே அம்மணிகள் கூட்டம்.
முதல் மாடியில் இருக்கிறது இந்த தாபா..முன்பே டேபிள் ஆர்டர் செய்து விட்டு நண்பர்கள் புடை சூழ கிளம்பினோம்.
ஹோட்டலின் முகப்பு மூங்கில் பிளைண்ட்ஸ் போட்டு வெய்யில் உள்ளே வராதபடி தடுத்து  இருக்கின்றனர்.உள்ளே இருப்பது ஒன்றும் தெரியவில்லை. ஆனாலும் அவ்வப்போது வெளியில் வந்து நம்மை கடந்து சென்ற அம்மணிகளால் ரொம்பவே பசியாறிப் போனோம்.டேபிள் ரெடியாக கொஞ்ச நேரம் ஆனதால் வெளியே அவர்களின் அழைப்பிற்காக காத்து இருந்த போது  கடந்து சென்ற அம்மணிகள் பதம் பார்த்தது என்னமோ நம் மனதை தான்.... 



நம்ம அழைப்பு வந்தவுடன் உள்ளே நுழைந்தால் ஒரே கூட்டம்.. சந்தைக்கடையில் நுழைந்த மாதிரி....ரெண்டு அம்மணிகள் இருந்தாலே அந்த இடம் கலகலத்து போய்டும்...உள்ளே ஊர்ப்பட்ட அம்மணிகள்... ஆங்காங்கே கொஞ்சம் சொல்லிக்கொள்கிற மாதிரி நம்மாளுங்க அம்மணிகளுக்கு துணையாய்..... ஒவ்வொரு டேபிளிலும் பத்து பதினைந்து பேராய்...என்னமோ கல்யாண பந்தியில் சாப்பிடுவது போல....வரிசையாய் போடப்பட்டு இருக்கின்றன டேபிள்கள்.வரிசை கட்டி சாப்பிடுகின்றனர்.அத்தனையும் நிரம்பி வழிகிறது அம்மணிகளால்.....டேபிள் காலியானதும் அடுத்த குரூப் ஆக்கிரமத்து கொள்கிறது.இப்படியே ரொம்ப பிசியாக இருக்கிறது இந்த ஹோட்டல்.இந்த சிட்டியில் இருக்கிற நல்ல டீசண்டான ஹோட்டல் இதுதான்.இதற்கு கீழே அர்ச்சனா ஃபுட் ஹோம் இருக்கிறது.

கொடுத்த மெனுவை பார்த்தால் அசத்தலாக இருக்கிறது.என்னென்னமோ மெனு இருக்கிறது.நண்பர்கள் ரெகுலர் வாடிக்கையாளர் என்பதால் அவர்களோட விருப்ப உணவுகள் ஆர்டர் செய்ய பட்டன.
ஆஃப்கானி சிக்கன், பேபி கார்ன், தவா சிக்கன், ஹைதராபாத் பிரியாணி, ஜல்ஜீரா, நான், முட்டை மசாலா, ஃபிரைடு ரைஸ், சில்லி சிக்கன் என ஏகப்பட்ட ...
சுட சுட வந்தது...சும்ம உரித்தகோழி கணக்காய்....ஆஃப்கானி சிக்கன்...செம டேஸ்ட்.. கொஞ்சம் கூட எண்ணையில்லாமல் தந்தூரி கணக்காய்.அதே மாதிரி சிக்கனின் கலரில்...மசாலா எதுவும் இல்லாமல் மிக அருமையாக காரம் உப்பு என செமையாக இருக்கிறது. இந்த ஹோட்டலின் ஸ்பெசல் இதுதானாம்.ரொம்ப நன்றாக இருக்கிறது.(ஒரு சில அம்மணிகளும் உரித்த கோழி கணக்கில் சும்மா செவ செவ ன்னு...பிரம்மன் படைத்த அற்புதமாய்...)
 
அதேமாதிரி சில்லி சிக்கனும். பேபி கார்ன் சில்லியும் மிக அருமை.சிக்கனை விட பேபிகார்ன் சுவை இன்னும் அதிகம்.ரொம்ப நன்றாக இருக்கிறது.
 
 
 
 
             (ஜல்ஜீரா சோடா )
ஹைதராபாத் பிரியாணி நன்றாக இருக்கிறது.மிக நீளமான பாசுமதி அரிசியில். இதுவும் நன்றாக இருக்கிறது.எல்லாம் முடித்து விட்டு கடைசியாக ஆர்டர் பண்ணினது ஜல்ஜீரா...புதினா மற்றும் சோடா கலந்த ஒரு பானம். இதன் உரைப்பு இன்னும் நம் நாக்கில் இருக்கிறது.அனைத்து நான்- வெஜ் உணவுகளின் செரிமான பானமாய் இது இருக்கிறது.
ஸ்டார்ட்டர் உணவுகளை சாப்பிடும் போது புதினா சட்னியும், மசால் வெங்காயமும் வைக்கின்றனர்.அதிலும் இந்த வெங்காயம் இருக்கே ...அனைத்தும் ஒரே சைசில்...உப்பு சுவையுடன்...புதிதாய் இருக்கிறது...
கிட்டதட்ட ஒருமணி நேரம் ஆகிவிட்டது அனைத்தும் காலி பண்ண அருகருகே அம்மணிகள் அமர்ந்து இருந்ததால் என்னவோ அதிகம் இறங்க வில்லை.ஆஃப்கானி சிக்கன் போலவே நல்ல வெள்ளை வெளேர் என நிறைய அம்மணிகள்...சாஃப்ட்வேர் வேற....அழகுக்கு சொல்லவா வேணும்..
அப்புறம் விலையை பத்தி கேட்கவே வேணாம்..சாஃப்ட்வேர் ஆளுங்களுக்கு ஏத்த மாதிரி தான்..செம விலை.
மஹிந்தரா வோர்ல்ட் சிடியில் இருக்கிற அத்தனை சாஃப்ட் வேர் கம்பெனி ஆளுங்களுக்காக மட்டுமே இது இருக்கு.வெள்ளிக்கிழமை மட்டும் பயங்கர கூட்டமாய் இருக்கும்.கும்பலாய் கடலை போட இருக்கிற ஒரே இடம் இது தான்.எப்பவாவது அந்த பக்கம் போனீங்கன்னா அம்மணிகளை சாரி ஆஃப்கானி சிக்கனை ரசிக்க  சாரி  ருசிக்க மறந்திடாதீங்க..போகும்போது பர்ஸ் நல்லா கனமா இருக்கட்டும்...
முன்பே டேபிள் புக் பண்ண 044 - 27460028; 9282199916, 

கிசு கிசு : எங்கடா ஒரு அம்மணி போட்டோ கூட இல்லையேனு கேட்டிடாதீங்க..இதை எடுக்கவே எவ்ளோ கஷ்டப்பட்டேன்.கண்ணுக்கும் வயிற்றுக்கும் செம ருசி தான் இங்க...

அம்மணிகள் 
அப்பப்ப 
கிராஸ் பண்ணியதால்
கிளாஸ் போல 
சுக்கு நூறாகியது 
என் இதயம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Thursday, August 30, 2012

தென் திருப்பதி - மலை வையாவூர், காஞ்சி புரம்

பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் - தென் திருப்பதி,  மலை வையாவூர், காஞ்சி புரம் மாவட்டம் 

போன முறை வேடந்தாங்கல் போன போது மலை மீது ஒரு கோவிலை கண்டேன்.அது தென் திருப்பதி கோவில் என்று கேள்விப்பட்டதோடு சரி. அப்போ போக நேரமில்லாத தால் நேற்று மீண்டும் தரிசனம் பெற சென்றேன்.
இயற்கை சூழ்ந்த மலை.மலை அடிவாரத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் அரச மர பிள்ளையார் கோவில் ஒன்றும் இருக்கிறது.
 
 

இந்த ஊரில் தான் ஆஞ்ச நேயர்  சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வந்த போது  இந்த இடத்தில் சற்று இளைப்பாற எண்ணி, மலையை கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மலையை மாற்றிக் கொண்டாராம். எனவே, மலையை கீழே வைக்காத ஊர் என்பதே மருவி மலை வையாவூரானது என்று ஒரு தல வரலாறு இருக்கிறது.இங்கே நர்த்தன அவதாரம் எடுத்து இருக்கிற கோலத்தில் காட்சி அளிக்கிறார் ஆஞ்ச நேயர்.
                  இக்கோயிலின் ஆஞ்சநேயரை வேண்டுபவர் தங்கள் எண்ணங்களை வெள்ளைத் தாளில் எழுதி அதன்மீது மட்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள் துணியில் முடிந்து அனுமனின் பாதத்தில் வைத்து வணங்குகின்றனர். பின்னர் அதை கோயிலில் அதற்கென இருக்கும் கொம்பில் கட்டி விட்டுச் சென்றால் நாற்பத்தெட்டு நாட்களுக்குள் அவர்களது எண்ணம் கை கூடுகிறது என்பது நம்பிக்கையாக உள்ளது.
              இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றியும், வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
                           இவரின் எதிர்ப்பக்கத்தில் இருக்கிற மலையில் தான் பிரசன்ன வெங்கடேச  பெருமாள் அருள் புரிகிறார்.அடிவாரத்தில் இருந்து  மலைக்கு செல்ல படிகள் இருக்கின்றன.வண்டிகள் செல்ல ஒரு மலைப்பாதையும் இருக்கின்றன.
              நான் மட்டுமே படியில் சென்றால் சீக்கிரம் இளைத்தும்... களைத்தும் விடுவோம் என்று எண்ணி காரிலேயே மலைப்பாதையில் சென்றேன்.ஒரே ஒரு ஹேர் பின் வளைவுடன் அழகாய் வளைந்து செல்கிறது.மலை பாதை தற்போது செப்பனிடப்பட்டு வருகிறது.இந்த மலைப்பாதையில் செல்லு போது  சுற்றிலும் பார்த்தால் இயற்கை பசுந்தோலை போர்த்தி கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.மலையை சுற்றிலும் இயற்கை அன்னையின் மடியில் பசுமை தோட்டங்கள் பரந்து விரிந்து கிடக்கிறது.கோவிலை அடைந்தோம்.ரொம்ப அமைதி தவழ்கிறது.நல்ல விசாலமான கோவிலாகத்  தான் இது இருக்கிறது.
 
 
   இந்த கோவிலுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.மன்னன் அபராஜிதவர்மப் பல்லவன். திருப்பதி பெருமாளின் அழகில் மயங்கி அதே நினைவுகளுடன் தீர்த்த யாத்திரை செய்துகொண்டிருந்தபோது, ஒரு மலையைக் கண்டார். தன்னுடைய எண்ணத்தில் எப்போதும் நிறைந்திருக்கும் திருப்பதி ஸ்ரீனிவாசனை அங்கேயும் எழுந்தருளும்படி வேண்டினார்.அபராஜிதன் மனத்தில் தோன்றிய பிரான், அவருக்காக அங்கே ஒரு ரதத்தில் காட்சி தந்தார். குதிரைகள் பூட்டப்பட்ட அந்த ரதத்தில் இருந்தபடி மன்னருக்கு அருள்புரிந்தார் திருப்பதி ஸ்ரீவேங்கடேசப் பெருமான்.தன் நாட்டின் பாதுகாப்புக்காக ரதத்தில் செங்கோல் பூண்டு காட்சி தந்த பெருமாளுக்கு பிரசன்ன வேங்கடேசர் என திருநாமம் இட்டு அழைத்தார்.பின்னர், இந்த மலை மீது ஒரு கோயிலையும் கட்டுவித்தார்.பிற்காலத்தில், ராஜா தோடர்மால் திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் பல செய்வித்தார்.
        ரதத்தின் மீது காட்சி அளித்தததின் அடையாளமாய் ரத சக்கரமும் குதிரை கால் குளம்பும் ஒரு பாறையில் இன்றும் இருக்கிறது

 
 
 
 
         மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் அமையப் பெற்ற தலம் இது. திருமலை திருப்பதியைப் போல் விளங்கும் தலமும்கூட. கோவிலை சுற்றி வலம் செல்ல பாதை சுத்தமாய் இருக்கிறது.முதலில் நம்மை வரவேற்பது கொடி மரம்.இதற்கு எதிரில் லட்சுமி வராகர் கோவில் இருக்கிறது.மேலும் ஸ்ரீசக்கரத்தாழ்வார், வேணுகோபாலர், ராமர் சந்நிதிகள் இருக்கின்றன.அலர்மேல்மங்கைத் தாயார் இதே மலையில், தனி சந்நிதி கொண்டுள்ளார்.மலை மீது, வலம் வந்து பெருமாள் சந்நிதிக்குள் சென்றால், இங்கே மூலஸ்தானத்தில் பெருமாள் செங்கோலுடன் ராஜகோலத்தில் காட்சி தருகிறார்.இவரது இரு மார்புகளிலும் இரண்டு மகாலட்சுமிகள் என்றும் நீங்காது அருள் புரிகின்றனர்.
      திருப்பதியில் எவ்வாறு வராக சுவாமியை வணங்கிய பிறகே வெங்கடாசலபதியை தரிசிக்கச் செல்ல வேண்டுமோ அதே போன்றுதான் இங்கும். 

      கோவிலின் பின்புற சுவற்றில் சிறு சிறு கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. இது என்ன வேண்டுதல் என்று தெரியவில்லை.
    மலை அடிவாரத்தின் கீழே நிறைய குடிசைகள் அழகாய் வைக்கோலால் போர்த்தப்பட்டு இருக்கிறது.
நல்ல இயற்கை சூழலில் குடி கொண்டுள்ள திருப்பதி பெருமானை வணங்கி மேன்மை அடைவோம்.

கோவில்  நடை திறக்கப்படும் நேரம்:
காலை  8.00 to 12 மணி வரை மாலை  4 to 7

ஆஞ்ச  நேயர் கோவில் :சனி ஞாயிறு மட்டும் காலை 8 to 1 மணி வரை. 
அப்புறம் எப்பவாவது அய்யர் ப்ரீயா இருந்தா வந்து திறப்பாராம்..(அவரே சொன்னது..)ஏன்னா அதிக வருமானம் இல்லாத கோவிலாம்.(கடவுளே காணிக்கை கேட்குதே..)

செல்லும் வழி :
மதுராந்தகம் டு செங்கல்பட்டு ரோட்டில் படாளம் கூட்டு ரோட்டில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் வழியில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்  மலை வையாவூர் இருக்கிறது.

கிசு கிசு : கோவில் ன்னா சாமி இருக்கிறதும், மலை ன்னா மாமி சாரி அம்மணி இருக்கிறதும் சகஜம். (கடலை போட ஏத்த இடமாத்தான் இந்த மலை கோவில் இருக்கிறது போல )


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Sunday, July 8, 2012

உத்திரமேரூர் - கல்வெட்டு

உத்திரமேரூர்
             சிறு வயதில் பள்ளிக்கூடத்தில்  வரலாறு படிக்கிற போது இந்த உத்திர மேரூர் கல்வெட்டுகளை பத்தி ஏதோ தெரிஞ்சு வச்சி இருந்தேன்.(பள்ளிக்கூடம் வரைக்கும் போய் இருக்கானே அப்படின்னு யாராவது சொல்லிராதீங்க..   ஹி ஹி ஹி ..) இப்போ செங்கல்பட்டு வந்த போது உத்திர மேரூர் போர்டு பார்த்திட்டு சரி ஒரு எட்டு போய்ட்டு வருவோம் அப்படின்னு கிளம்பினோம். எனக்கு ஒரே ஆவல் ....ஒரு பெரிய மலை இருக்கும்.அந்த மலையில் நம்மை ஆண்ட முன்னோர்களின் வரலாறு பொறிக்கப்பட்டு இருக்கும் அப்படின்னு ரொம்ப எதிர்பார்ப்போடு போனேன்.
      உத்திரமேரூர் வந்தாச்சு.....பார்த்தா ஒரே நெரிசலா இருக்கு.இரண்டு பக்கமும் கடைகள் தான் இருக்கு.பரபரப்பா மக்களின் நடமாட்டம்...ஒரே ஊரா இருக்கு...மலை எங்கும் காணோம்....நேரே போனா ஒரு பெரிய பெருமாள் கோவில் மட்டும் வருது.ஒரு குளம் கூட இருக்கு.ரொம்ப விசேஷமான கோவில் என்றும் சொன்னார்கள். சென்னையில் இருக்கிற ஒரு கோவில் கூட இதை கம்பேர் செய்து சொன்னார்கள். 
அந்த கோவில் இதுதான்


            அப்புறம் அங்க விசாரிச்சு பார்த்தா பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு பில்டிங் இருக்கே அதுதான் அப்படின்னு சொன்னாங்க...வந்து  பார்த்தா ஒரு மணி மண்டபம் மாதிரி இருக்கு.முழுவதும் கருங்கல்.அந்த கால கோவில் போல கட்ட பட்டு இருக்கு.சுத்தி முத்தி பார்த்து விட்டு கொஞ்சம் உத்துப் பார்த்தால் கருங்கல்லில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு இருக்கு.அந்த மண்டபம் முழுவதும் செதுக்கி இருக்காங்க.





        கல்வெட்டுக்களை படிக்கிற அளவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லாததால் அதை போட்டோ மட்டும் எடுத்து கிட்டு கிளம்பினேன்.இந்த மண்டபத்தை தொல்லியல் துறை கட்டுபாட்டில் வைத்து இருக்கு.என்னவோ எதிர்பார்த்து வந்தாலும் ஒரு பெரிய சந்தோசம்..வரலாற்று சுவடான இந்த உத்திர மேரூர் கல்வெட்டுகளை எப்பொழுதோ புத்தகத்தில் படித்து இருந்தாலும் அதை நேரில் பார்த்த திருப்தியுடன் சென்றேன்..அப்புறம் எப்பவும் போல இந்த மாதிரி இடங்களை நிறைய பேரு தங்களின் சொர்க்க புரியா மாத்தி வச்சி இருக்காங்க.பொழுதுபோக்கும் சோம்பேறிகளின் இடமாக இருக்கு.

செங்கல்பட்டுல இருந்து ஒரு நாற்பது கிலோ மீட்டருக்குள் இந்த ஊர் இருக்கு.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...