உத்திரமேரூர்
நேசங்களுடன்
ஜீவானந்தம்
சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் வரலாறு படிக்கிற போது இந்த உத்திர மேரூர் கல்வெட்டுகளை பத்தி ஏதோ தெரிஞ்சு வச்சி இருந்தேன்.(பள்ளிக்கூடம் வரைக்கும் போய் இருக்கானே அப்படின்னு யாராவது சொல்லிராதீங்க.. ஹி ஹி ஹி ..) இப்போ செங்கல்பட்டு வந்த போது உத்திர மேரூர் போர்டு பார்த்திட்டு சரி ஒரு எட்டு போய்ட்டு வருவோம் அப்படின்னு கிளம்பினோம். எனக்கு ஒரே ஆவல் ....ஒரு பெரிய மலை இருக்கும்.அந்த மலையில் நம்மை ஆண்ட முன்னோர்களின் வரலாறு பொறிக்கப்பட்டு இருக்கும் அப்படின்னு ரொம்ப எதிர்பார்ப்போடு போனேன்.
உத்திரமேரூர் வந்தாச்சு.....பார்த்தா ஒரே நெரிசலா இருக்கு.இரண்டு பக்கமும் கடைகள் தான் இருக்கு.பரபரப்பா மக்களின் நடமாட்டம்...ஒரே ஊரா இருக்கு...மலை எங்கும் காணோம்....நேரே போனா ஒரு பெரிய பெருமாள் கோவில் மட்டும் வருது.ஒரு குளம் கூட இருக்கு.ரொம்ப விசேஷமான கோவில் என்றும் சொன்னார்கள். சென்னையில் இருக்கிற ஒரு கோவில் கூட இதை கம்பேர் செய்து சொன்னார்கள்.
உத்திரமேரூர் வந்தாச்சு.....பார்த்தா ஒரே நெரிசலா இருக்கு.இரண்டு பக்கமும் கடைகள் தான் இருக்கு.பரபரப்பா மக்களின் நடமாட்டம்...ஒரே ஊரா இருக்கு...மலை எங்கும் காணோம்....நேரே போனா ஒரு பெரிய பெருமாள் கோவில் மட்டும் வருது.ஒரு குளம் கூட இருக்கு.ரொம்ப விசேஷமான கோவில் என்றும் சொன்னார்கள். சென்னையில் இருக்கிற ஒரு கோவில் கூட இதை கம்பேர் செய்து சொன்னார்கள்.
அந்த கோவில் இதுதான்
அப்புறம் அங்க விசாரிச்சு பார்த்தா பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு பில்டிங் இருக்கே அதுதான் அப்படின்னு சொன்னாங்க...வந்து பார்த்தா ஒரு மணி மண்டபம் மாதிரி இருக்கு.முழுவதும் கருங்கல்.அந்த கால கோவில் போல கட்ட பட்டு இருக்கு.சுத்தி முத்தி பார்த்து விட்டு கொஞ்சம் உத்துப் பார்த்தால் கருங்கல்லில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு இருக்கு.அந்த மண்டபம் முழுவதும் செதுக்கி இருக்காங்க.
கல்வெட்டுக்களை படிக்கிற அளவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லாததால் அதை போட்டோ மட்டும் எடுத்து கிட்டு கிளம்பினேன்.இந்த மண்டபத்தை தொல்லியல் துறை கட்டுபாட்டில் வைத்து இருக்கு.என்னவோ எதிர்பார்த்து வந்தாலும் ஒரு பெரிய சந்தோசம்..வரலாற்று சுவடான இந்த உத்திர மேரூர் கல்வெட்டுகளை எப்பொழுதோ புத்தகத்தில் படித்து இருந்தாலும் அதை நேரில் பார்த்த திருப்தியுடன் சென்றேன்..அப்புறம் எப்பவும் போல இந்த மாதிரி இடங்களை நிறைய பேரு தங்களின் சொர்க்க புரியா மாத்தி வச்சி இருக்காங்க.பொழுதுபோக்கும் சோம்பேறிகளின் இடமாக இருக்கு.
செங்கல்பட்டுல இருந்து ஒரு நாற்பது கிலோ மீட்டருக்குள் இந்த ஊர் இருக்கு.
செங்கல்பட்டுல இருந்து ஒரு நாற்பது கிலோ மீட்டருக்குள் இந்த ஊர் இருக்கு.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
Nice Should see. Thanks
ReplyDelete//கொஞ்சம் கூட அறிவே இல்லாததால்//
ReplyDeleteயோவ் மாப்ளே, நம்ம சீக்ரட் எல்லாம் பப்ளிகுட்டி பண்ணபடாது ஒக்கே
பாண்டிச்சேரியிலிருந்து...உத்திரமேரூர்.
ReplyDeleteதடாலடி ஜம்பாயிருக்கே...ஜீவா.
பழங்கால கட்டிட அழகோ அழகுதான்ய்யா இல்லையா...?
ReplyDeleteகண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்!
ReplyDeleteமிக நல்ல விவரிப்பு! படங்களும் சூப்பர்!
ReplyDeleteமச்சி இப்ப நம்மாளுங்க நோட்டு புக்குல எழுதறதே கல்வெட்டு மாதிரிதான இருக்கு
ReplyDeleteநல்ல விளக்கம்..... படங்கள் அருமை..... தொடர வாழ்த்துக்கள்..... பகிர்வுக்கு நன்றி !
ReplyDeleteஅருமையான பயண தகவல்கள் கொடுத்திருக்கீங்க. கல்வெட்டுகள் அதில் உள்ள தகவல்களை நம்மால் படிக்க இயலவில்லை என்ற ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். எனக்கும் தான். என்ன செய்வது நமது கல்வி முறை கல்வெட்டு எழுத்துகளை பற்றிய பாடமே கிடையாது.
ReplyDelete