மாமல்லபுரம் ஒரு பார்வை - 3
சிற்பம்...சிற்பம்..பல்லவர்களின் கலை எங்கெங்கும்......நுணுக்கமான கலைத் திறன்......எப்படி செய்து இருப்பார்கள்..ஆச்சர்யமும் அதிசயமும்...பண்டைகால தமிழர்கள் திறம் வாய்ந்தவர்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு இந்த சிற்ப கலை.
கடற்கரை கோவில் போகாத தால் அங்க இருக்கிற சிற்பங்களை புகைப்படம் எடுக்க முடியவில்லை.அங்கும் சிறப்பு வாய்ந்த சில சிற்பங்கள் இருக்கிறதாம்.அப்புறம் மாமல்லபுரத்தில் நிறைய இடங்கள் இருக்கின்றன.சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே தெரிந்து வைத்து இருக்கிறோம்.நமக்கு நம்ம பண்டைய காலத்து பொக்கிசங்கள் எதையும் தெரிந்து வைத்து கொள்வதில்லை.பாதுகாத்து கொள்வதில்லை.இருக்கிற இடங்களை எல்லாம் பாழ் செய்து கொண்டு வருகிறோம்.(எங்க பார்த்தாலும் தனிமையை தேடி திரிகிற ஒரு கூட்டமே இங்க சுத்திட்டு இருக்கு.)
எங்கிருந்தோ வருகிற வெளிநாட்டவனுக்கு நம்ம நாட்டோட கலை, பண்பாடு பற்றி தெரிந்து இருக்கிறது.
எங்கிருந்தோ வருகிற வெளிநாட்டவனுக்கு நம்ம நாட்டோட கலை, பண்பாடு பற்றி தெரிந்து இருக்கிறது.
நமக்கு....? சுத்தம்..?
இன்றைய தலைமுறையினருக்கு இந்த இடங்களை சுற்றி காட்டுங்கள்.அறிந்து கொள்ளட்டும்....தமிழன் மிக திறமை வாய்ந்தவன் என்பதை..
மீண்டும் செல்லக் கூடிய ஆர்வத்தினை ஏற்படுத்தி விட்டது இந்த மாமல்லபுரம் பயணம்.கண்டிப்பாக கைடு கொண்டு அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.
முந்தைய பகுதி
மாமல்லபுரம் ஒரு பார்வை - 1
மாமல்லபுரம் ஒரு பார்வை -2
முந்தைய பகுதி
மாமல்லபுரம் ஒரு பார்வை - 1
மாமல்லபுரம் ஒரு பார்வை -2
நேசங்களுடன்
ஜீவானந்தம்



































