Thursday, July 19, 2012

மாமல்லபுரம் ஒரு பார்வை - 3

மாமல்லபுரம் ஒரு பார்வை - 3
சிற்பம்...சிற்பம்..பல்லவர்களின் கலை எங்கெங்கும்......நுணுக்கமான கலைத் திறன்......எப்படி செய்து இருப்பார்கள்..ஆச்சர்யமும் அதிசயமும்...பண்டைகால தமிழர்கள் திறம் வாய்ந்தவர்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு இந்த சிற்ப கலை.
கடற்கரை  கோவில் போகாத தால் அங்க இருக்கிற சிற்பங்களை புகைப்படம் எடுக்க முடியவில்லை.அங்கும் சிறப்பு வாய்ந்த சில சிற்பங்கள் இருக்கிறதாம்.அப்புறம் மாமல்லபுரத்தில் நிறைய இடங்கள்  இருக்கின்றன.சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே தெரிந்து வைத்து இருக்கிறோம்.நமக்கு நம்ம பண்டைய காலத்து பொக்கிசங்கள் எதையும் தெரிந்து வைத்து கொள்வதில்லை.பாதுகாத்து கொள்வதில்லை.இருக்கிற இடங்களை எல்லாம் பாழ் செய்து கொண்டு வருகிறோம்.(எங்க பார்த்தாலும் தனிமையை தேடி திரிகிற ஒரு கூட்டமே இங்க சுத்திட்டு இருக்கு.)
எங்கிருந்தோ வருகிற வெளிநாட்டவனுக்கு நம்ம நாட்டோட கலை, பண்பாடு பற்றி தெரிந்து இருக்கிறது.
நமக்கு....? சுத்தம்..?
இன்றைய தலைமுறையினருக்கு இந்த இடங்களை சுற்றி காட்டுங்கள்.அறிந்து கொள்ளட்டும்....தமிழன் மிக திறமை வாய்ந்தவன் என்பதை..
மீண்டும் செல்லக் கூடிய ஆர்வத்தினை ஏற்படுத்தி விட்டது இந்த மாமல்லபுரம் பயணம்.கண்டிப்பாக கைடு கொண்டு அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

முந்தைய  பகுதி
மாமல்லபுரம் ஒரு பார்வை - 1
மாமல்லபுரம் ஒரு பார்வை -2


நேசங்களுடன் 
ஜீவானந்தம்

13 comments:

 1. நாளைய சரித்திரத்தில் நிச்சயம் உங்கள் பெயர் பொரிக்கபட்டிருக்கும் ( கல்லில் எழுதி வைத்துவிட்டு வந்தீர்களா? உங்கள் பெயரை )

  ReplyDelete
 2. அடுத்த தடவை சென்னை போனால் கண்டிப்பாக போக வேண்டும் என்கிற ஆவலை தூண்டுகின்றது உங்க பதிவு மாப்ள!

  ReplyDelete
 3. எங்கிருந்தோ வருகிற வெளிநாட்டவனுக்கு நம்ம நாட்டோட கலை, பண்பாடு பற்றி தெரிந்து இருக்கிறது.
  >>>
  வெளிநாட்டினர் ஒவ்வொரு இடத்திலயும் சில நாட்கள் தங்கி, அங்கிருக்கும் மக்களின் கலாச்சாரம், உடைகள், உணவுமுறைகள் அங்கு அருகிலிருக்கும் ஸ்தலங்களின் சிறப்புகளை அறிந்து கொள்கின்றனர். ஆனா, நாம ஒரு கார் அல்லது வேன் வாடகைக்கு எடுத்துக்க வேண்டியது, ஒரே நாளில் முப்பது ஊரை சுத்தி பார்க்க வேண்டியது.

  போய் வந்தவங்களை இரண்டு நாள் கழிச்சு எங்கே போய் வந்தே, என்ன சிறப்புன்னு கேட்டா சொல்ல தெரியாது. இதுதான் நாம செய்யும் தப்பு.
  அதை மாற்றி நம்ம குழந்தைகளோடு அங்க தங்கி அந்த இடத்தோட சிறப்புகளை நாம எடுத்து சொல்லனும்.

  ReplyDelete
 4. சென்னையிலேயே வளர்ந்தும் இன்னமும் மாமல்லபுரத்தைப் பார்க்காத பிறவிகளில் நானும் ஒருவன்.
  கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ நாவலில் வர்ணித்துள்ளது போல் எங்கும் சிற்பக் கூடங்கள் தான் போலிருக்கிறது. அருமையான புகைப்படங்கள்.

  நன்றிகள் ஜீவா

  ReplyDelete
 5. மாமல்லபுரத்தில் சுண்டக்கஞ்சி கிடைச்சுதா???

  ReplyDelete
 6. யப்பா நான் நினைத்த மாதிரியே மூணு பாகம்

  ReplyDelete
 7. பதிவு மூன்றில் ஒரு ஈ காகா இல்லாம சுத்தமா போட்டோ புடிச்சு போடிருக்கீங்க மூன்று பதிவுகளுமே நல்லா எழுதியிருக்கிங்க...கூடவே பாமரனின் ஆதங்கத்துடன்...பல்லவ சாம்ராஜியத்தின் நினைவுகளை சுமந்து அதை எல்லோருக்கும் பதிவாக்கிய உங்களுக்கு எனது பாராட்டுகள்.

  ReplyDelete
 8. @ ராஜி

  அருமையான கருத்துரை ராஜி அக்கா! சிந்திக்க வேண்டும் நம் மக்கள்!

  ReplyDelete
 9. சிறப்பான தொகுப்பாக அமைந்தது உங்கள் மாமல்லபுர பயணம்! உங்கள் பதிவு என்னை மீண்டும் மாமல்லபுரம் அழைக்கிறது! பார்ப்போம்!

  ReplyDelete
 10. எங்கிருந்தோ வருகிற வெளிநாட்டவனுக்கு நம்ம நாட்டோட கலை, பண்பாடு பற்றி தெரிந்து இருக்கிறது.
  நமக்கு....? சுத்தம்..?
  இன்றைய தலைமுறையினருக்கு இந்த இடங்களை சுற்றி காட்டுங்கள்.அறிந்து கொள்ளட்டும்....தமிழன் மிக திறமை வாய்ந்தவன் என்பதை..
  மீண்டும் செல்லக் கூடிய ஆர்வத்தினை ஏற்படுத்தி விட்டது இந்த மாமல்லபுரம் பயணம்.கண்டிப்பாக கைடு கொண்டு அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

  பயனுள்ள அறிவுரை நண்பா !

  ReplyDelete
 11. பாரம்பரிய கலைகள் நம் மனதை கொள்ளை கொள்பவையாக/

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....