Showing posts with label பொள்ளாச்சி. Show all posts
Showing posts with label பொள்ளாச்சி. Show all posts

Saturday, May 5, 2012

அருள் மிகு மாசாணி அம்மன் - ஆனைமலை, பொள்ளாச்சி


அருள் மிகு மாசாணி அம்மன்
பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலையில் இந்த மாசாணி அம்மன் கோவில் இருக்கிறது.நேற்று இந்த கோவிலுக்கு அம்மனை தரிசிக்க சென்றேன்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி பின்னர் ஆனைமலை.இவ்வூர் செல்லும் வழி எங்கும் பசுமை..பசுமை..பசுமை..பசுமை தவிர வேறு எதுவும் இல்லை.இரண்டு பக்கமும் நிறைய புளிய மரங்கள் ரொம்ப அடர்த்தியாய்..இரு மருங்கிலும் நிறைய தென்னை மரங்கள்.வயல் வெளிகள் என எங்கும் பசுமை.


கோவிலை அடைந்தோம்.அம்மன் கோவில் என்பதினாலோ ஏகப்பட்ட அம்மணிகள் கூட்டம்.(இதெல்லாம் இப்போ ரொம்ப முக்கியமா..?).கோவிலின் பெரிய ஆர்ச் ஒன்று நம்மை வரவேற்கிறது.கோவில் செல்லும் வழி மெயின் ரோட்டில் இருந்தே கடை கண்ணிகளுடன் தொடங்குகிறது.இரண்டு பக்கமும் கடைகள் ....அம்மன் படங்கள், குங்குமம், மஞ்சள், மலர் மாலை, பொரி கடலை, கம்பங் கூழ், ஜூஸ் கடை என நிறைய.....

தென்னை மரங்கள் நிறைந்த தோப்பில் காரினை நிறுத்தி விட்டு (காட்டுக்குள்ள வண்டி நிறுத்த 30 ரூபாய் ) வந்தோம்.கோவிலின் கீழ் பகுதியில் ஒரு கிளை ஆறு...ஆழியாற்றிலிருந்து பிரிந்து வரும் உப்பாறு,இந்த ஆற்றில் இறங்கி கை கால் கழுவி கொண்டு மேலேறினோம்.இந்த ஆற்றில் நீராடினால் நம் பாவங்கள் நீரில் விழுந்த உப்பாய் கரைந்து போகுமாம்.
இந்த கரை ஓரமாய் ஒரு விநாயகர் வீற்று இருக்கிறார்.உள்ளே வன்னி மரம், நாகலிங்க மரம் போன்ற மரங்களுக்கு அடியில் தெய்வங்கள் வீற்று இருக்கின்றன.குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் குடும்பத்துடன் வந்து தொட்டில் கட்டி கொண்டு இருந்தனர். நாமும் உள்ளே சென்று ஒரு கும்பிடு போட்டு விட்டு அம்மனை தரிசிக்க ஆலயம் நுழைந்தோம்..




பெரிய மண்டபம்..உள்ளே பக்தர்கள் செல்ல நீண்ட வரிசை.வி ஐ பி களுக்கு என்று தனி வரிசை இருக்கிறது.நாம அப்படி ஒண்ணும் பெரிய அபாடக்கர் இல்லையே ..ஹி ஹி ஹி... வளைந்து வளைந்து செல்லும் வரிசையில் (ஒரு பத்து அடிதான் இருக்கும்.இருந்தாலும் வளைந்து நீண்டு செல்வதால் ரொம்ப தூரம் செல்வது போல் உணர்வு) நாமும் ஐக்கியமானோம். அம்மன் வேறெங்கும் காண முடியாத நிலையில் மயான தேவதையாக படுத்து இருக்கிறாள்.
மஞ்சள் சிகப்பு புடவையில் மிகவும் அலங்காரமாய் காட்சி அளிக்கிறாள்.மிகவும் நிதானமாய் அம்மனை தரிசித்து விட்டு குங்குமம் திருநீறு வாங்கிகொண்டு அம்மனை நினைத்த படி வெளி பிரகாரம் வந்தோம்.மேலும் உள்ளே உள்ள தெய்வங்களை வணங்கி விட்டு பிரகாரத்தில் அமர்ந்தோம்.

உட்கார்ந்த இடம் எதிரே பிரசாத கடை.சர்க்கரை பொங்கலும் புளியோதரையும் வாங்கி அமர்ந்தோம்.(சிறிய தொன்னை..அளவும் ரொம்ப குறைவு ஆனால் விலையோ பத்து ரூபாய்).
அப்புறம் நீதிக்கல் என்கிற தெய்வம் இருக்கிறது.பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களை தண்டிக்க இங்குள்ள ஆட்டு உரலில் மிளகாய் அரைத்து நீதிக்கல்லில் பூசி அம்மனிடம் வேண்டுதல் செய்தால் அம்மன் அவர்களை தண்டிப்பாள் என்பது நிச்சயமான உண்மை.
பெண்களின் உடல், மனம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் அம்மன் நிறைவேற்றுவாள் என்பது அசைக்க முடியாத உண்மை.
இங்கு செவ்வாய், வெள்ளி, மாத அமாவாசை, மற்றும் முக்கிய தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
கண்டிப்பாய் அனைத்து பெண்களும் செல்ல வேண்டிய கோவில்.வணங்க வேண்டிய தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்த அருள்மிகு மாசாணி அம்மன்.
 ஓம் சக்தி.....மாசாணி சக்தி.
பொள்ளாச்சி யில் இருந்து சேத்துமடை செல்லும் வழியில் ஆனை மலை இருக்கிறது. இருபது கிலோமீட்டர் இருக்கும்.

கிசுகிசு : உள்ளே போட்டோ எடுக்க அனுமதி இல்லை. அப்புறம் டாப் சிலிப் என்ற சுற்றுலா தளம் இங்கே இருந்து 20 கிலோ மீட்டர் தான்.அங்கே சென்றால் யானை சவாரி செய்யலாம்.
இந்த  அம்மன் தரிசனம் முடித்து விட்டு அங்கே இருந்து மீன் குளத்தி அம்மன் கோவில் சென்றோம்.அது அடுத்த பதிவில்....

நேசங்களுடன் 
ஜீவானந்தம் 

இன்னும் கொஞ்சம்...

Monday, March 26, 2012

குரங்கு அருவி - மங்கி பால்ஸ் (MONKEY FALLS)பொள்ளாச்சி


குரங்கு அருவி மங்கி பால்ஸ்
இன்னிக்கு எங்காவது வெளில போலாம்னு முடிவு பண்ணிட்டு வீட்டுல இருந்து காலை டிபன்க்காக இட்லி சட்டினி லாம் எடுத்து  கிட்டு காலையில் 9 மணிக்கு பொள்ளாச்சி பக்கம் இருக்கிற மங்கி பால்ஸ் போனோம்...(பொள்ளாச்சி யில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் இருக்கிறது) முதல்ல ஆழியார் ..அப்புறம் செக் போஸ்ட்.

(ஒருஆளுக்கு 15 ரூபாய் டிக்கெட் வாங்குறாங்க) .அப்புறம் மங்கி பால்ஸ்.போன உடன் நம்மை அந்த அருவிக்கு சொந்த காரங்க ளான குரங்குகள் நம்மை வரவேற்கின்றன.
 

உள்ளே போனால் தண்ணீர் வரத்து கம்மியா இருக்கு..அங்க இருக்கிற பாறைலாம் பல்லு இளிக்குது..எல்லாம் வறண்டு போய் இருக்கு...ஏதோ அருவி அப்படிங்கிற துக்காக கொஞ்சம் சன்னமா வருது...




ஓகே..முதல்ல சாப்பிட்டு விட்டு வருவோம் ன்னு நினைச்சு வால்பாறை ரூட்டுல கொஞ்ச தூரம் மேல போனோம்...இரண்டு ஹேர் பின் வளைவுகள் போய் அங்க ஒரு இடத்துல காரை நிறுத்தி விட்டு இருந்த ஒரு பாலம் மேல உட்கார்ந்து, எதிர்த்தாப்புல  தெரிஞ்ச ஆழியார் டேம் அணை தண்ணீரை பார்த்து கிட்டே கொண்டு போன இட்லி களை உள்ளே தள்ளுனோம்...


அப்புறம் அப்படி இப்படி போட்டோ எடுத்து கிட்டு மீண்டும் மங்கி பால்ஸ் வந்தோம்.மீண்டும் குரங்குகள் வரவேற்றன.குளிக்க ஆயத்தம் ஆகி பாறையோடு பாறையா வந்து கிட்டு இருக்கிற தண்ணீர்ல கை வச்சி குளிச்சோம்..பல்லி மாதிரி ஒட்டிகிட்டே குளிச்சோம்...தண்ணீர் குறைவா இருந்தாலும் குளிர்ச்சி ரொம்ப அதிகமா இருந்துச்சு...அங்க அடிச்ச வெயிலுக்கு இது ரொம்ப இதமா இருந்துச்சு...ஒரு மணி நேரம் பக்கம் அந்த இனிய குளிரினை அனுபவித்தோம்...எப்பவும் போல மக்கள் வந்து கொண்டே இருந்தனர்..தண்ணீர் வரத்து கம்மியா இருந்தது னால என்னவோ வந்தவங்க முகம் சுருங்கி போய் ஆச்சரியம் கலந்த பார்வையில் குளிக்கிறவங்களை பார்த்துட்டு போனாங்க.....

இந்த சீசனுக்கு தண்ணீர் ரொம்ப வரும்.. என்னமோ தெரியல..இப்படி வறண்டு போய் கிடக்கு...வால்பாறை போற ரூட்டுல இரண்டு பக்கமும் எப்பவும் பசுமையா இருக்கும்.இப்போ அது கூட இல்ல..ரொம்ப காஞ்சு போய் இருக்கு..மழை பெய்ய ஆரம்பித்து விட்டால் இங்கு எப்போதும் பசுமை இருக்கும் என்பது உறுதி..
இது ரொம்ப நல்ல இடம்...எப்பவும் பசுமையா இருக்கும்.இதை பார்த்தால் நம் மனசும் லேசாகும்..பக்கத்துல ஆழியார் டேம் இருக்கு..அங்க பார்க் லாம் இருக்கு..ஒரு நாள் சுற்றுலா செல்ல சிறந்த இடம் இது...பொள்ளாச்சி யில் இருந்து வால்பாறை செல்லும் அனைத்து பஸ் களும் இங்கு செல்லும்.

பொள்ளாச்சி  யில் இருந்து ஆழியார் செல்லும் வழியில் நா.மூ .சுங்கம் இருக்கு அங்க ஒரு ஹோட்டல் இருக்கு தாஜ் பிரியாணி... பொள்ளாச்சி பக்கத்தில் 
வரும்போது  இந்த கடைக்கு போனேன்..கூட்டம் அள்ளுது...அப்புறம் பக்கத்துல ரெண்டு மூணு கடை புதுசா ஓபன் ஆகி இருக்கு...
அப்புறம் இதுக்கு எதிர்த்த ரோட்டுல டாஸ்மாக் இருக்கு.இன்னிக்கு தான் கவனிச்சேன்.....(வரலாறு முக்கியம்)

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Saturday, August 20, 2011

கோவை மெஸ் - தாஜ் பிரியாணி... நா.மூ சுங்கம் , பொள்ளாச்சி

பொள்ளாச்சி யில் இருந்து வால்பாறை போற வழியில நா.மூ .சுங்கம் அப்படிங்கிற ஊருல பிரியாணி கடை இருக்கிறது.மிகவும் சுவையாய் இருக்கும் என்று நம் பங்காளிகள் உசுப்பேத்தி விட்டதால் அந்த கடைக்கு போனேன்.பொள்ளாச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் நா.மூ .சுங்கம் உள்ளது.அங்கே இடது பக்கம் திரும்பினால் தாஜ் பிரியாணி என்ற கடை நம்மை வரவேற்கிறது.





கீற்று கொட்டகை அமைப்பில் நான்கு டேபிள்களுடன் உள்ளது.உள்ளே மகளிர் மற்றும் குடும்பத்தினருடன் வருபவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு (33 % ) உள்ளது.மட்டன் பிரியாணி சாப்பிட்டேன்.அப்புறம் எனக்கு ரொம்ப பசியாய் இருந்ததால் (ரொம்ப நேரம் சுத்தி இந்த கடையை தேடி அலைந்ததால்மணி 3 க்கும் மேலே ஆகிவிட்டது ) ருசியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகம் போட்டோ கூட எடுக்கவில்லை. அப்புறம் அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஆனைமலை இருக்கிறது. கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சியாய் (அம்மணிகள் அல்ல ) வயல் வெளிகள் இருக்கின்றன.பசுமையை போர்த்திக்கொண்டு நல்ல குளிர்ச்சியான கிளைமேட் உடன், சிறு தூறலுடன் இருக்கின்றது.இங்குதான் அதிகம் சினிமா படபிடிப்புகள் நடக்குமாம்.மீண்டும் செல்ல வேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது.புகைப்படங்கள் எடுக்கவில்லை.அடுத்த பதிவில் இயற்கையை காண்பிக்கின்றேன்...

நேசங்களுடன்  
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, August 8, 2011

பொள்ளாச்சி ரோட்டுல ....டைட்டானிக் கப்பல்

இன்னிக்கு பொள்ளாச்சி போனேன் .ஈச்சனாரி கோவில் தாண்டி, பைபாஸ் தாண்டி
போற வழியில மைலேரிபாளையம் என்கிற ஊரில் ஒரு காலேஜ் இருக்கு .கோயம்புத்தூர் மரைன் காலேஜ்.கப்பல் மாதிரியே கட்டிடம் கட்டி இருக்காங்க.மாணவர்கள் யுனி பாரம் எல்லாம் கப்பல வேலை செய்யிற ஆளுங்க மாதிரியே போட்டுட்டு இருக்காங்க ...ரொம்ப அருமையா கட்டி இருக்காங்க ..தூரத்துல இருந்து பார்க்கும் போது கப்பல் தரை தட்டி இருக்கிற மாதிரியே இருக்கு ...




படங்களை கிளிக்கி பெருசா பாருங்க

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...