பொள்ளாச்சி யில் இருந்து வால்பாறை போற வழியில நா.மூ .சுங்கம் அப்படிங்கிற ஊருல பிரியாணி கடை இருக்கிறது.மிகவும் சுவையாய் இருக்கும் என்று நம் பங்காளிகள் உசுப்பேத்தி விட்டதால் அந்த கடைக்கு போனேன்.பொள்ளாச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் நா.மூ .சுங்கம் உள்ளது.அங்கே இடது பக்கம் திரும்பினால் தாஜ் பிரியாணி என்ற கடை நம்மை வரவேற்கிறது.
கீற்று கொட்டகை அமைப்பில் நான்கு டேபிள்களுடன் உள்ளது.உள்ளே மகளிர் மற்றும் குடும்பத்தினருடன் வருபவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு (33 % ) உள்ளது.மட்டன் பிரியாணி சாப்பிட்டேன்.அப்புறம் எனக்கு ரொம்ப பசியாய் இருந்ததால் (ரொம்ப நேரம் சுத்தி இந்த கடையை தேடி அலைந்ததால்மணி 3 க்கும் மேலே ஆகிவிட்டது ) ருசியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகம் போட்டோ கூட எடுக்கவில்லை. அப்புறம் அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஆனைமலை இருக்கிறது. கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சியாய் (அம்மணிகள் அல்ல ) வயல் வெளிகள் இருக்கின்றன.பசுமையை போர்த்திக்கொண்டு நல்ல குளிர்ச்சியான கிளைமேட் உடன், சிறு தூறலுடன் இருக்கின்றது.இங்குதான் அதிகம் சினிமா படபிடிப்புகள் நடக்குமாம்.மீண்டும் செல்ல வேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது.புகைப்படங்கள் எடுக்கவில்லை.அடுத்த பதிவில் இயற்கையை காண்பிக்கின்றேன்...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
சகோ நன்றி
ReplyDeleteசகோ நன்றி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesunday இங்கதான் சாப்பிட்டேன்.. நல்லா இருக்கு.. ஆனா கொஞ்சம் கூட்டம்.. அரை மணி நேரம் வெயிட் பண்ணினேன்..
ReplyDeleteகுடிசை மாதிரி இருக்கு?
ReplyDeleteயோவ்.. நம்ம பேவரிட் ஸ்பாட் இதுதேன்...
ReplyDeleteaverage taste
ReplyDelete