இன்னிக்கு காலங்காத்தால ஒரு மெசேஜ்.தோழி கோவை மு சரளா அவர்களிடமிருந்து...என்னன்னு பார்த்தா தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் அவரோட பேட்டி வந்திருக்குன்னு...
அட பரவாயில்லையே ....அப்படின்னு சந்தோசப்பட்டு ஒரு வாழ்த்து செய்தியைத் தட்டி விட்டேன்.எல்லாம் வேலையும் முடிஞ்ச பின்னாடி சரி பேப்பரை வாங்கிப் பார்த்துருவோம் அப்படின்னு காலைல பத்து மணிக்கு கடைக்குப் போனா கடை கண்ணியில ஒரு பேப்பரைக்கூட காணோம்.நல்ல நாளிலேயே இங்கிலீசு பேப்பரை பார்த்தாலே பத்தடி தூரம் பின்னுக்கு போவேன் இப்போ நமக்கு வந்த சோதனைய பாருடா ன்னு நினைச்சிகிட்டே கடையில பார்த்தா ஹிந்து பேப்பர் மட்டும் தான் இருக்கு....
என்னடா அதுக்குள்ள பேப்பர் எல்லாத்தையும் வாங்கிட்டு போயிட்டாங்களா அவங்க ரசிகர்கள் அப்படின்னு நினைச்சிகிட்டே கடைக்காரரிடம் கேட்க... இப்போலாம் யாரு தம்பி இந்த மாதிரி இங்கிலீஸ் பேப்பர்லாம் படிக்கிறா...ஏதோ ஹிந்து பத்திரிக்கை மட்டும் வச்சி வித்திட்டிருக்கேன் அப்படின்னு சொல்ல...
அடடா வடை போச்சே என்கிற ரீதியில் வேற எங்காவது தேடலாமே அப்படின்னு கவுண்டம் பாளையத்துல இருந்து சாய்பாபா கோவில் வரைக்கும் ஒரு கடையில கூட இல்ல.அப்புறம் சாய்பாபா காலனியில் இருந்த ஒரு கடையில் யாராவது வாங்க மாட்டாங்களான்னு தொங்கிட்டு இருந்த பேப்பரை ஓடோடி போய் வாங்கிப்பார்த்தா......சிட்டி எக்ஸ்பிரஸ் முதல்பக்கத்துலயே ஏகப்பட்ட அம்மணிகளோட போட்டோ.எங்கடா...அவங்களை காணோம்னு தேடினால் கவிதை புக் போட்டு ஒரு பெண்மணியோட போட்டோ.ஏதோ ஒரு தென்னமரத்து மட்டை பக்கத்துல ஈர்க்குச்சி உருவிகிட்டு இருக்கிற மாதிரி ஒரு போஸ்ல இருந்தாங்க...கொஞ்சம் உத்துப்பார்க்கவும் தான் தெரிஞ்சது....அட நம்ம கவிதாயினி....
வெறும் போட்டோ மட்டும் தான் பார்த்தேன்.ஒண்ணுமே விளங்கல.. என்னென்னவோ இங்கிலீசுல பேசியிருக்காங்க..என்னன்னு தான் தெரியல.அது அவங்க தான் சொல்லணும்.பேப்பர் கடைக்காரன் கூடவே ஒரு டிக்ஸ்னரி கொடுத்திருந்தானா பரவாயில்லை..அதுவும் இல்லை.எப்படி படிச்சு புரிஞ்சுகிறதுன்னு தெரியல.நல்ல நாளிலேயே அவங்க எழுதுற கவிதை விளங்காது நமக்கு.இதுல இங்கிலீசு வேற...சரின்னு வீட்டிற்கு வந்து கொஞ்சம் டிரை பண்ணலாமே அப்படின்னு டிக்ஸ்னரியைத் தேடினேன்.அப்போதான் தெரிஞ்சுது நாம என்னிக்கு வாங்கி இருக்கோம்னு....சரின்னு கொஞ்சம் அப்படி இப்படின்னு டிரை பண்ணினா.....தூக்கம் தூக்கமா வந்துச்சு...பரவாயில்லையே இந்த பேப்பரை தினமும் படிச்சா தூக்கம் சொல்லாம கொள்ளாம வரும் போலன்னு நினைச்சி பத்திரமா ஸ்கேன் பண்ணி வச்சிட்டேன்.ஹிஹிஹி
எப்படியோ நம்ம கோவைல இருந்து ஒரு பெண் எழுத்தாளரும் , சக பதிவருமான நம்ம தோழியின் பேட்டி ஆங்கில நாளிதழில் வந்திருப்பதில் மிக்க சந்தோசமே..இன்னும் அவர் மென்மேலும் புகழ் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.கோவை பதிவர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.
இவர் எழுதிய நூல்கள் - மெளனத்தின் இரைச்சல்கள், காதலின் சாரல்
இவர் எழுதிய நூல்கள் - மெளனத்தின் இரைச்சல்கள், காதலின் சாரல்
கிசுகிசு : இதை மொழிப்பெயர்த்து சொல்பவருக்கு கோவை கவிதாயினி சரளாவின் கவிதை புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்




