Friday, July 5, 2013

வாழ்த்துக்கள் - கோவை மு சரளா - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ( The new indian Express)

இன்னிக்கு காலங்காத்தால ஒரு மெசேஜ்.தோழி கோவை மு சரளா அவர்களிடமிருந்து...என்னன்னு பார்த்தா தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் அவரோட பேட்டி வந்திருக்குன்னு...

அட பரவாயில்லையே ....அப்படின்னு சந்தோசப்பட்டு ஒரு வாழ்த்து செய்தியைத் தட்டி விட்டேன்.எல்லாம் வேலையும் முடிஞ்ச பின்னாடி சரி பேப்பரை வாங்கிப் பார்த்துருவோம் அப்படின்னு காலைல பத்து மணிக்கு கடைக்குப் போனா கடை கண்ணியில ஒரு பேப்பரைக்கூட காணோம்.நல்ல நாளிலேயே இங்கிலீசு பேப்பரை பார்த்தாலே பத்தடி தூரம் பின்னுக்கு போவேன் இப்போ நமக்கு வந்த சோதனைய பாருடா ன்னு நினைச்சிகிட்டே கடையில பார்த்தா ஹிந்து பேப்பர் மட்டும் தான் இருக்கு....

என்னடா அதுக்குள்ள பேப்பர் எல்லாத்தையும் வாங்கிட்டு போயிட்டாங்களா அவங்க ரசிகர்கள் அப்படின்னு நினைச்சிகிட்டே கடைக்காரரிடம் கேட்க... இப்போலாம் யாரு தம்பி இந்த மாதிரி இங்கிலீஸ் பேப்பர்லாம் படிக்கிறா...ஏதோ ஹிந்து பத்திரிக்கை மட்டும் வச்சி வித்திட்டிருக்கேன் அப்படின்னு சொல்ல...
அடடா வடை போச்சே என்கிற ரீதியில் வேற எங்காவது தேடலாமே அப்படின்னு கவுண்டம் பாளையத்துல இருந்து சாய்பாபா கோவில் வரைக்கும் ஒரு கடையில கூட இல்ல.அப்புறம் சாய்பாபா காலனியில் இருந்த ஒரு கடையில் யாராவது வாங்க மாட்டாங்களான்னு தொங்கிட்டு இருந்த பேப்பரை ஓடோடி போய் வாங்கிப்பார்த்தா......சிட்டி எக்ஸ்பிரஸ் முதல்பக்கத்துலயே ஏகப்பட்ட அம்மணிகளோட போட்டோ.எங்கடா...அவங்களை காணோம்னு தேடினால் கவிதை புக் போட்டு ஒரு பெண்மணியோட போட்டோ.ஏதோ ஒரு தென்னமரத்து மட்டை பக்கத்துல ஈர்க்குச்சி உருவிகிட்டு இருக்கிற மாதிரி ஒரு போஸ்ல இருந்தாங்க...கொஞ்சம் உத்துப்பார்க்கவும் தான் தெரிஞ்சது....அட நம்ம கவிதாயினி....


வெறும் போட்டோ மட்டும் தான் பார்த்தேன்.ஒண்ணுமே விளங்கல.. என்னென்னவோ இங்கிலீசுல பேசியிருக்காங்க..என்னன்னு தான் தெரியல.அது அவங்க தான் சொல்லணும்.பேப்பர் கடைக்காரன் கூடவே ஒரு டிக்ஸ்னரி கொடுத்திருந்தானா பரவாயில்லை..அதுவும் இல்லை.எப்படி படிச்சு புரிஞ்சுகிறதுன்னு தெரியல.நல்ல நாளிலேயே அவங்க எழுதுற கவிதை விளங்காது நமக்கு.இதுல இங்கிலீசு வேற...சரின்னு வீட்டிற்கு வந்து கொஞ்சம் டிரை பண்ணலாமே அப்படின்னு டிக்ஸ்னரியைத் தேடினேன்.அப்போதான் தெரிஞ்சுது நாம என்னிக்கு வாங்கி இருக்கோம்னு....சரின்னு கொஞ்சம் அப்படி இப்படின்னு டிரை பண்ணினா.....தூக்கம் தூக்கமா வந்துச்சு...பரவாயில்லையே இந்த பேப்பரை தினமும் படிச்சா தூக்கம் சொல்லாம கொள்ளாம வரும் போலன்னு நினைச்சி பத்திரமா ஸ்கேன் பண்ணி வச்சிட்டேன்.ஹிஹிஹி

எப்படியோ நம்ம கோவைல இருந்து ஒரு பெண் எழுத்தாளரும் , சக பதிவருமான நம்ம தோழியின் பேட்டி ஆங்கில நாளிதழில் வந்திருப்பதில் மிக்க சந்தோசமே..இன்னும் அவர் மென்மேலும் புகழ் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.கோவை பதிவர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

இவர் எழுதிய நூல்கள் - மெளனத்தின் இரைச்சல்கள், காதலின் சாரல்
                          

கிசுகிசு : இதை மொழிப்பெயர்த்து சொல்பவருக்கு கோவை கவிதாயினி சரளாவின் கவிதை புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


41 comments:

  1. நானும் உன்னுடன் இணைந்து தோழி சரளாவை மனமகிழ்வோடு வாழ்த்துகிறேன் நண்பா.

    ReplyDelete
  2. அவங்களுக்கு சொல்லிடீங்களா...முதல் ஆளா வந்ததுக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. போன் பண்ணி வாழ்த்திட்டேன் அப்பவே.

      Delete
    2. அப்படியே டீரீட்டும் கேட்டிடுங்க...பசையுள்ள ஆளுதான்...

      Delete
  3. வாழ்த்துகள் தோழி சரளா. பெரிய விஷயம்தான். மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. வாங்க ...வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் அவர்களிடம்

      Delete
  4. வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்!

    ReplyDelete
  5. முதல்ல கவிதாயினி கோவை சரளாவுக்கு...வாழ்த்துக்கள்.

    அப்புறம் ஜீவா...நம்ம கவிதாயினிகிட்ட ஏகப்பட்ட ட்ரீட் வாங்கணும்.
    1. திருப்பூர் பாராட்டு.
    2. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

    மறந்திராதீங்க.

    ReplyDelete
    Replies
    1. எப்படி மறக்க முடியும்..ஆல்ரெடி சொல்லியாச்சு...அனேகமா தாஜ்ல சொல்லி இருக்காங்க...வாங்கிடலாம்.

      Delete
    2. என்னை மறந்துராதீங்க நட்புகளே.

      Delete
    3. கண்டிப்பா சொல்ரேன்.முத நாளே வந்திடுங்க...

      Delete
    4. வாழ்த்துக்களைப் பகிர்க!

      நன்றி.

      Delete
  6. பெண்கள் கண்ணுக்கு தெரியாத சங்கிலியால சிக்குண்டு இருக்காங்களாமா, .அந்த சங்கிலி எதால செய்யப்பட்டதுன்னா, பாரம்பரியமான கலாச்சாரத்தால, அதுனால எப்பவுமே அந்த சங்கிலிய வுட்டு வரமாட்டாங்களாமா.ஆனா இவுங்க அந்த மாய சங்கிலியை வுட்டு வெளியே வந்து ரெண்டு புத்தகம் எழுதியிருங்காங்கலாமா... பேஸ்புக்கு, வலைதளம் இதுனால பொஸ்தகம் படிக்கிறது கொறஞ்சு போச்சாமா ஆனா அதுவே பொஸ்தகம் எழுதறதுக்கு உதவி கரமா இருக்குதாமா... இங்கிலீசு புரபசருகிட்ட இத காமிச்சு கேட்டதுக்கு அவரு சொன்ன விளக்கம்ங்க. இன்னும் இதுமாதிரி இல்ல... இதவுட மேலா புஸ்தகங்கள எழுதி நம்மோட அறிவு கண்ண அவுங்க திறக்கனும்னு உங்களோட நானும் வாழ்த்துறேனுங்க !

    ReplyDelete
    Replies
    1. அப்போ...கலாகுமரன் சாருக்கு ரெண்டு புக் பார்சல்....

      Delete
    2. புத்தக‌ம் மட்டுந்தானா, அப்புறம் ஜென்னீஸ்.. தாஜில ட்ரீட்டுன்னு கேள்வி பட்டேன்

      Delete
  7. நானும் வாழ்த்திக்குறேன். ஏன் ஜீவா, உனக்குதான் இங்க்லீசு படிக்க தெரியாது ஓக்கே. உன் வீட்டம்மாக்கு தெரியுமே. அட, அவங்களுக்கு தெரியாட்டி உன் பாப்பாக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அவங்ககிட்ட படிச்சு அர்த்தம் சொல்ல சொலி இருக்கலாமே இந்நேரத்துக்கு:-)

    ReplyDelete
    Replies
    1. அதானே...உங்கள மாதிரி ஐடியா யார் கொடுப்பா

      Delete
  8. சகோதரி சரளாவிற்கு வாழ்த்துகள்! தன்னுடைய பாணியில் அழகாக பகிர்ந்த நண்பர் ஜீவாவிற்கு நன்றிகள்!

    ReplyDelete
  9. ஜீவாவிற்கும் ,வாழ்த்திய அனைவருக்கும் என் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் ..........நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் என்னுடைய அடுத்த புத்தக வெளியீட்டில் ஒரு மிகபெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்கிறேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. செல்லாது...செல்லாது...
      அதுக்கு தனி ட்ரீட்...இதுக்கு தனி ட்ரீட்.

      மக்களே விடாதீங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க.

      Delete
    2. இப்படிலாம் எஸ்கேப் ஆக கூடாது கவிஞரே....

      Delete
  10. சகோதரிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அங்க சொல்லுங்க நண்பரே,,,ஹிஹிஹி

      Delete
  11. சரளா அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி,,,நான் சொல்லி விடுகிறேன்

      Delete
  12. ஆளை அடித்துப் போடும் நகைச்சுவை. இதற்குப் பிறகும் ட்ரீட் கேட்கும் உங்கள் துணிச்சலைப் பாராட்டுகிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி...ட்ரீட் காகத்தான் இந்த பதிவே...

      Delete
  13. என் வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  14. கோவை சரளா அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

    பதிவு நகைச்சுவையுடன் அருமை.
    வாழ்த்துக்கள் கோவை நேரம்.

    ReplyDelete
  15. மிக மகிழ்ச்சியான விஷயம் ...

    இங்லீஷ் தானே பிரச்சன நான் ஒரு வலி(ழி) சொல்றேன்

    அமானுஷ்யமா மனித ரூபத்துல ஒரு ஆவி சுத்துமே, ஏதோ பாரின்லா போயிட்டு வந்து இருக்கேன்னு என்கிட்ட கப்சா விட்டது... அத ஒரு பிடி பிடிங்க... ஒன்னு ஆவி வாயில இருந்து இங்லீஷ் வரணும் இல்ல உண்மை வரணும்... அமெரிக்கா பேரிக்கா ஊற ஏமாத்திட்டு... கவுண்டம்பாளையத்த கூட தாண்டியிருக்காது...

    இப்படி சொல்ல சொன்னது ஆவியின் எதிர்க்கட்சி குட்டிச் சாத்தான் :-)
    # ஷப்பா வந்த வேல முடிஞ்சது

    ReplyDelete
    Replies
    1. எவ்ளோ நாளா இந்த கொலை வெறி,,,,ஹிஹிஹி
      ஆமா //இப்போ அந்த ஆவி படு பயங்கரமா மொட்டைல்லாம் போட்டு சுத்திட்டு இருக்கு

      Delete
  16. வாழ்த்துகள்.... கோவை மு. சரளாவிற்கும் தகவலை பகிர்ந்த உங்களுக்கும்!

    ReplyDelete
  17. தமிழ்நாட்டுல தமிழ்ல தாம்ப்பா பேசணும்.. தமிழ் தெரியாதவங்ககிட்ட வேணும்னா இங்க்லீஷ் பேசினா போதும். அதுவும் தேவைப்பட்டா மட்டும்.. இது என் பாலிசி..

    அது சரி, நான் எப்போ பாரின் போனேன்னு சொன்னேன்.. யூரின் போறேன்னு சொன்னது அப்படி காதுல விழுந்துடுச்சுன்னு நினைக்கிறேன்.. அந்த கு.சா வ நேர்ல பார்க்கும் போது கவனிச்சுக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி...கரக்ட் தான் மச்சி..நாம என்னிக்கு இங்லிஸ்ல பேசியிருக்கொம்,

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....