Showing posts with label விருந்தினர் பக்கம். Show all posts
Showing posts with label விருந்தினர் பக்கம். Show all posts

Saturday, August 29, 2015

கரம் - 17 - விருந்தினர் பக்கம் - 2 - YUMMY DRIVES

கரம் -  விருந்தினர் பக்கம் - 2  -  YUMMY DRIVES 
                                         www.yummydrives.com

              இந்த இணையத் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்து மிகச்சிறப்பாய் பேருரையும் சிற்றுரையும் ஆற்றிய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் மிக்க நன்றி...ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்களும் ஒவ்வொரு தனித்தன்மை உடையவர்கள்.
இவர்களில் வெங்கடேஷ் ஆறுமுகத்தினை தொடர்ந்து
மசாலா எஃப் எம் ரொஃபினா ( Masala FM - ROFINA).                   
                      வெங்கடேஷ் ஆறுமுகத்தினை தொடர்ந்து அடுத்து யாரை அழைக்கலாம் என்று முடிவு செய்த போது, கொஞ்சம் பிரபலமாக இருக்க வேண்டும், அதே சமயம் கொஞ்சம் கலர்புல்லாகவும் வேண்டும் என நினைத்த போது, ஃபேஸ்புக்கில் அதிகம் போட்டோ போட்டு கொன்னெடுத்துக் கொண்டிருந்த அழகான ராட்சசி என்கிற புரோபைல் ஞாபகம் வந்தது.
               இவரைப்பற்றி அதிகம் தெரியாததால் இவரது தகவல்களை குடைந்தபோது, ஒரு தனியார் ரேடியோ ஒளிபரப்பின் நிறுவனர் எனத்தெரிந்தது.அதுவும் ரேடியோ ஜாக்கியாக இருப்பவர் எனவும் தெரிந்து ஆச்சர்யப்பட்டபடி இவரது மசாலா எஃப் எம் வெப்சைட்டுக்கு போன போது இவரது காந்தக்குரல் நம்மை இழுக்கிறது.இவரது வசியக்குரல் நம்மை வசியப்படுத்துகிறது.தேன் தடவிய வார்த்தைகளை கோர்த்து நிகழ்வுகளை சொல்லும் போது இவரின் குரலால் அந்த காட்சிகள் விரிவடைகின்றன... நம்மையும் வியக்க வைக்கின்றன....
                      அவரது கேலரியில் சென்று போட்டோக்களை பார்த்த போது ஒரே ஆச்சர்யம்...ஒட்டு மொத்த கோலிவுட் சினிமா இண்ட்ஸ்ட்ரி கூடயும் போட்டோ எடுத்து இருக்கிறார்.இவரை சிறப்பு விருந்தினராக ஆக்கிட வேண்டியதுதான் என முடிவு செய்து மசாலா எஃப் எம் நிறுவன உரிமையாளரான ரொஃபினா அவர்களை கமெண்டில் தொடர்பு கொண்டேன்...
                பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள்.அப்படி பேசுவதையே சாதகமாக்கி உலகத்திலேயே தொடர்ந்து 50 மணி நேரத்திற்கும் மேலாக நான்ஸ்டாப்பாக பேசி விருது வாங்கியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்...விழாவுக்கு வருகை தர அழைப்பு விடுத்தபோது மிக சந்தோசமாய் வருவதாக சொன்னார்...அதே மாதிரி விழா தொடங்குவதற்கு டைம் ஆனபோதும் வந்து சேராமல் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார்.ஒருவழியாய் வந்து சேர்ந்தபோது விழாவினை ஆரம்பித்தோம்....

           இருண்டு கிடந்த வானில் ஒரு நட்சத்திரம் எப்படி மிக பிரகாசமாய் மின்னுகிறதோ அது மாதிரி களையிழந்து பொலிவிழந்த எங்கள் விழாக்கூட்டத்தில் ஒரு நட்சத்திரமாய் மின்னினார்...
                   ஏற்கனவே ரொம்ப நேரம் பேசி விருது வாங்கிய ஆளாச்சே....இன்று நம்மை விடப்போவதில்லை என நினைத்தோம்...ஆனால் தன் குயிலினும் மென்மையான குரலில் மிக அழகாய் பேசி எல்லாரையும் மெய் மறக்க வைத்தார்...தன் குடும்ப சூழல் காரணமாக தன் அம்மா ஹோட்டல் தான் முதலில் ஆரம்பித்து தங்களை வளர்த்தினார் என்று சொல்லும் போது அவருக்குள் இருந்த சோகமும், ஹோட்டல் பத்தின ஆர்வமும் வெளியேறியது.என்னால் வெறும் பேச்சு மட்டும் தான் பேசமுடியும் அப்படின்னு இல்லாம நான் நல்லா சமைப்பேன் என்கிற அரிய தகவலை சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்...மிக எளிமையாய் அனைவரிடமும் பழகி விழா முடியும் வரை இருந்து, எல்லோருடனும் போட்டோ எடுத்துக்கொண்டு, மிகக்கலகலப்பாய் விழாவினை மிகச்சிறப்பாய் நடத்திக் கொடுத்து விட்டு அந்த நட்சத்திரம் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டு சென்றது...

                விழா முடிந்த அதற்கடுத்த நாளில் இருந்து தன் வேலையை ஆரம்பித்து விட்டார் பேஸ்புக்கில்.....பார்த்தும் ரசித்தும் அவர்களது போட்டோக்களுக்கு  லைக்கிட்டு கொண்டிருக்கிறேன்....
இவரின் masala FM கேட்க

மிக்க நன்றி ரொஃபினா....வந்திருந்து விழாவை சிறப்பித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்.....

கரம் -  விருந்தினர் பக்கம் - 1  -  YUMMY DRIVES

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, August 27, 2015

கரம் - 16 - விருந்தினர் பக்கம் - 1 - YUMMY DRIVES

                   நல்ல உணவுகளுக்கான தேடலை வைத்து ஒரு வெப்சைட் ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்கிற வினாவோடு சுரேஷ்குமார் பேச ஆரம்பிக்க, அது பற்றின விடாமுயற்சிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச்சிறப்பாய் இந்த வெப்சைட் ஆரம்பித்து வெற்றிகரமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
                                                   www.yummydrives.com

              இந்த இணையத் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்து மிகச்சிறப்பாய் பேருரையும் சிற்றுரையும் ஆற்றிய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் மிக்க நன்றி...ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்களும் ஒவ்வொரு தனித்தன்மை உடையவர்கள்.
முதலில் திரு வெங்கடேஷ் ஆறுமுகம்.
                இவரைப்பற்றி கொஞ்சம்...இவரை நான் கலக்கப்போவது யாரு என்கிற நிகழ்ச்சியில் டீவியில் கண்டு மகிழ்ந்ததோடு சரி..பின் இவர் கருப்பசாமி குத்தகைக்காரர் என்கிற திரைப்படத்தில் இவரின் நடிப்பை கண்டிருக்கிறேன்.பேஸ்புக்லாம் அப்போது வந்திராத காலம் என்று நினைக்கிறேன்.மதுரை ராஜ்மஹால் துணிக்கடைக்கு போடப்பட்ட பிரமாண்ட செட் உருவாக்கத்தில் எனது நண்பருக்கு உதவியாக இருந்தபோது நான் அவரை சந்தித்து இருக்கிறேன்.அதற்கப்புறம் அவரது ஆபிஸ் இண்டீரியர் பணிக்காக அவரை மதுரையில் சந்தித்து இருக்கிறேன்.(ப்ளான் மற்றும் கொட்டேசன் கொடுத்தோடு சரி...).ஓரிரு வார்த்தைகள் பேசி இருப்போம் பார்மலாக அவ்ளோ தான்..பின் கோவையில் அவரது நிறுவனத்திற்கு கிளை ஆரம்பித்த போது அப்போதும் அவரை சந்தித்து இருக்கிறேன்..(அப்போதும் வேலை கொடுத்த பாடில்லை).ரயில்வே ஸ்டேசன் அருகில் ஒரு லாட்ஜில் கனத்த புகை மண்டலத்தின் நடுவே ஒரு தேவதூதராய் காட்சியளித்த ஞாபகம் இன்னும் இருக்கிறது.
                பின் கோவையில் போத்திஸ் ஆரம்பித்த போது அந்தவிழாவிற்கு சென்ற போது வெங்கி அவர்களுடன் கை குலுக்கி ஒரிரு வார்த்தைகள் பேசி இருக்கிறேன்.அதற்கப்புறம் பேஸ்புக்கில் அவரது பாலோயர் ஆகி அவரின் நகைச்சுவை கலந்த பதிவுகளை கண்டு அவ்வப்போது லைக்கிட்டு இருக்கிறேன்..அவரின் மீது எனக்கு மிகக்கடும் பொறாமை இருக்கிறது.. ஏகப்பட்ட அம்மணிகள் அவர்க்கு லைக்கிடுவது தான்...அது மட்டுமல்ல ஆதித்யா டீவியில் ஆரம்பித்த வலைச்சிரிப்பு நிகழ்ச்சியிலும் அவர் கிருஷ்ணராக காட்சியளிப்பதும் மிகுந்த பொறாமைக்குள்ளாக்கியது.... அவருக்கு மச்சம் உடம்பில் இல்லை...அவரது உடம்பே மச்சத்தில் தான் இருக்கிறது எனவும் தெரிந்து கொண்டேன்...எனினும்  நமக்கு விதித்த்து அவ்வளவுதான் என நொந்து கொண்டு என்னை நானே தேற்றிக்கொண்டேன்...

                    இந்த வெப்சைட் துவக்கத்திற்கு யாரை அழைக்க போகிறீர்கள் என சுரேஷ் கேட்டபோது முதலில் ஞாபகத்திற்கு வந்தவர் தாமு அவர்கள் தான்..அவரை பலவிதங்களிலும் தொடர்பு கொண்டபோது அவரை பிடிக்க முடியவில்லை...அடுத்து உடனடியாய் ஞாபகம் வந்தவர் நம்ம வெங்கடேஷ் தான்...தாமுவை போன்ற உடலமைப்பு கொண்டவர், நல்ல சாப்பாட்டு பிரியர், மதுரைக்காரர் வேறு, அவரின் உணவுப்பதிவுகளில் உள்ள எதார்த்தமான நகைச்சுவை தொனி நம்மை சிரிக்க, வியக்க வைக்கும்.சரி...அவரை வரவேற்கலாமா என சுரேஷிடம் கேட்டபோது அவரும் வியந்து சரியான ஆள் தான் என சொல்ல, அவரை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்னை சேர்ந்து விட்டது.அவரின் நம்பர் முன்பு ஒரு காலத்தில் வைத்து இருந்தேன்.இப்போது இல்லை...முதலில் பேஸ்புக் சாட் செய்தேன்..கண்டுக்கவில்லை...(ஒருவேளை பெண் பெயரில் ஃபேக் ஐடியாக இருந்தால் ரிப்ளை வந்து இருக்குமோ..).உடனே என் நண்பருக்கு போன் போட்டு வெங்கடேஷ் கிட்ட பேசு, அவரு சீஃப் கெஸ்டா வேணும்னு சொன்னேன்...உடனே பர்மிசன் வந்தது...அவரின் நம்பருக்கு பேசினேன்...மதுரைக்காரர்களுக்கே உரித்தான குரல்.....என்னால் மறக்க முடியவில்லை....மிகப்பணிவாய் குரல்.... வந்துடறேன் என சொல்லி , பங்சனுக்கு மிகச்சரியாய் ஒரு நிமிடம் முன்னதாக வந்து ஆச்சர்யத்தினை தந்தார்....மிகச்சிறப்பாய் பேசி எங்கள் வெப்சைட்டுக்கு நல்ல அறிமுகத்தினை தந்தார்...அவரின் மனைவி சென்னையில் ஒரு மாலில் ஹோட்டல் ஆரம்பித்து இருப்பதாக சொல்லியிருக்கிறார்...யம்மி ட்ரைவ்ஸ் க்காக அங்கு சென்று சாப்பிட வேண்டும்....
                      ஒரே ஒரு வருத்தம் தான் அவரிடம்.....என் கூட நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள் என்று சொல்லவில்லை... அவசரவேலை காரணமாக அப்படியே சென்று விட்டார்...

மிக்க நன்றி வெங்கடேஷ்.....வந்திருந்து வாழ்த்தியமைக்கு.....


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...