Saturday, August 29, 2015

கரம் - 17 - விருந்தினர் பக்கம் - 2 - YUMMY DRIVES

கரம் -  விருந்தினர் பக்கம் - 2  -  YUMMY DRIVES 
                                         www.yummydrives.com

              இந்த இணையத் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்து மிகச்சிறப்பாய் பேருரையும் சிற்றுரையும் ஆற்றிய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் மிக்க நன்றி...ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்களும் ஒவ்வொரு தனித்தன்மை உடையவர்கள்.
இவர்களில் வெங்கடேஷ் ஆறுமுகத்தினை தொடர்ந்து
மசாலா எஃப் எம் ரொஃபினா ( Masala FM - ROFINA).                   
                      வெங்கடேஷ் ஆறுமுகத்தினை தொடர்ந்து அடுத்து யாரை அழைக்கலாம் என்று முடிவு செய்த போது, கொஞ்சம் பிரபலமாக இருக்க வேண்டும், அதே சமயம் கொஞ்சம் கலர்புல்லாகவும் வேண்டும் என நினைத்த போது, ஃபேஸ்புக்கில் அதிகம் போட்டோ போட்டு கொன்னெடுத்துக் கொண்டிருந்த அழகான ராட்சசி என்கிற புரோபைல் ஞாபகம் வந்தது.
               இவரைப்பற்றி அதிகம் தெரியாததால் இவரது தகவல்களை குடைந்தபோது, ஒரு தனியார் ரேடியோ ஒளிபரப்பின் நிறுவனர் எனத்தெரிந்தது.அதுவும் ரேடியோ ஜாக்கியாக இருப்பவர் எனவும் தெரிந்து ஆச்சர்யப்பட்டபடி இவரது மசாலா எஃப் எம் வெப்சைட்டுக்கு போன போது இவரது காந்தக்குரல் நம்மை இழுக்கிறது.இவரது வசியக்குரல் நம்மை வசியப்படுத்துகிறது.தேன் தடவிய வார்த்தைகளை கோர்த்து நிகழ்வுகளை சொல்லும் போது இவரின் குரலால் அந்த காட்சிகள் விரிவடைகின்றன... நம்மையும் வியக்க வைக்கின்றன....
                      அவரது கேலரியில் சென்று போட்டோக்களை பார்த்த போது ஒரே ஆச்சர்யம்...ஒட்டு மொத்த கோலிவுட் சினிமா இண்ட்ஸ்ட்ரி கூடயும் போட்டோ எடுத்து இருக்கிறார்.இவரை சிறப்பு விருந்தினராக ஆக்கிட வேண்டியதுதான் என முடிவு செய்து மசாலா எஃப் எம் நிறுவன உரிமையாளரான ரொஃபினா அவர்களை கமெண்டில் தொடர்பு கொண்டேன்...
                பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள்.அப்படி பேசுவதையே சாதகமாக்கி உலகத்திலேயே தொடர்ந்து 50 மணி நேரத்திற்கும் மேலாக நான்ஸ்டாப்பாக பேசி விருது வாங்கியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்...விழாவுக்கு வருகை தர அழைப்பு விடுத்தபோது மிக சந்தோசமாய் வருவதாக சொன்னார்...அதே மாதிரி விழா தொடங்குவதற்கு டைம் ஆனபோதும் வந்து சேராமல் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார்.ஒருவழியாய் வந்து சேர்ந்தபோது விழாவினை ஆரம்பித்தோம்....

           இருண்டு கிடந்த வானில் ஒரு நட்சத்திரம் எப்படி மிக பிரகாசமாய் மின்னுகிறதோ அது மாதிரி களையிழந்து பொலிவிழந்த எங்கள் விழாக்கூட்டத்தில் ஒரு நட்சத்திரமாய் மின்னினார்...
                   ஏற்கனவே ரொம்ப நேரம் பேசி விருது வாங்கிய ஆளாச்சே....இன்று நம்மை விடப்போவதில்லை என நினைத்தோம்...ஆனால் தன் குயிலினும் மென்மையான குரலில் மிக அழகாய் பேசி எல்லாரையும் மெய் மறக்க வைத்தார்...தன் குடும்ப சூழல் காரணமாக தன் அம்மா ஹோட்டல் தான் முதலில் ஆரம்பித்து தங்களை வளர்த்தினார் என்று சொல்லும் போது அவருக்குள் இருந்த சோகமும், ஹோட்டல் பத்தின ஆர்வமும் வெளியேறியது.என்னால் வெறும் பேச்சு மட்டும் தான் பேசமுடியும் அப்படின்னு இல்லாம நான் நல்லா சமைப்பேன் என்கிற அரிய தகவலை சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்...மிக எளிமையாய் அனைவரிடமும் பழகி விழா முடியும் வரை இருந்து, எல்லோருடனும் போட்டோ எடுத்துக்கொண்டு, மிகக்கலகலப்பாய் விழாவினை மிகச்சிறப்பாய் நடத்திக் கொடுத்து விட்டு அந்த நட்சத்திரம் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டு சென்றது...

                விழா முடிந்த அதற்கடுத்த நாளில் இருந்து தன் வேலையை ஆரம்பித்து விட்டார் பேஸ்புக்கில்.....பார்த்தும் ரசித்தும் அவர்களது போட்டோக்களுக்கு  லைக்கிட்டு கொண்டிருக்கிறேன்....
இவரின் masala FM கேட்க

மிக்க நன்றி ரொஃபினா....வந்திருந்து விழாவை சிறப்பித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்.....

கரம் -  விருந்தினர் பக்கம் - 1  -  YUMMY DRIVES

நேசங்களுடன்
ஜீவானந்தம்

No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....