நல்ல உணவுகளுக்கான தேடலை வைத்து ஒரு வெப்சைட் ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்கிற வினாவோடு சுரேஷ்குமார் பேச ஆரம்பிக்க, அது பற்றின விடாமுயற்சிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச்சிறப்பாய் இந்த வெப்சைட் ஆரம்பித்து வெற்றிகரமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
www.yummydrives.com
www.yummydrives.com
இந்த இணையத் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்து மிகச்சிறப்பாய் பேருரையும் சிற்றுரையும் ஆற்றிய அனைத்து சிறப்பு
விருந்தினர்களுக்கும் மிக்க நன்றி...ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்களும் ஒவ்வொரு தனித்தன்மை உடையவர்கள்.
முதலில் திரு வெங்கடேஷ் ஆறுமுகம்.
இவரைப்பற்றி கொஞ்சம்...இவரை நான் கலக்கப்போவது யாரு என்கிற நிகழ்ச்சியில்
டீவியில் கண்டு மகிழ்ந்ததோடு சரி..பின் இவர் கருப்பசாமி குத்தகைக்காரர் என்கிற
திரைப்படத்தில் இவரின் நடிப்பை கண்டிருக்கிறேன்.பேஸ்புக்லாம் அப்போது வந்திராத
காலம் என்று நினைக்கிறேன்.மதுரை ராஜ்மஹால் துணிக்கடைக்கு போடப்பட்ட பிரமாண்ட செட்
உருவாக்கத்தில் எனது நண்பருக்கு உதவியாக இருந்தபோது நான் அவரை சந்தித்து
இருக்கிறேன்.அதற்கப்புறம் அவரது ஆபிஸ் இண்டீரியர் பணிக்காக அவரை மதுரையில்
சந்தித்து இருக்கிறேன்.(ப்ளான் மற்றும் கொட்டேசன் கொடுத்தோடு சரி...).ஓரிரு
வார்த்தைகள் பேசி இருப்போம் பார்மலாக அவ்ளோ தான்..பின் கோவையில் அவரது
நிறுவனத்திற்கு கிளை ஆரம்பித்த போது அப்போதும் அவரை சந்தித்து இருக்கிறேன்..(அப்போதும்
வேலை கொடுத்த பாடில்லை).ரயில்வே ஸ்டேசன் அருகில் ஒரு லாட்ஜில் கனத்த புகை
மண்டலத்தின் நடுவே ஒரு தேவதூதராய் காட்சியளித்த ஞாபகம் இன்னும் இருக்கிறது.
பின் கோவையில் போத்திஸ் ஆரம்பித்த போது அந்தவிழாவிற்கு சென்ற போது வெங்கி
அவர்களுடன் கை குலுக்கி ஒரிரு வார்த்தைகள் பேசி இருக்கிறேன்.அதற்கப்புறம்
பேஸ்புக்கில் அவரது பாலோயர் ஆகி அவரின் நகைச்சுவை கலந்த பதிவுகளை கண்டு அவ்வப்போது
லைக்கிட்டு இருக்கிறேன்..அவரின் மீது எனக்கு மிகக்கடும் பொறாமை
இருக்கிறது.. ஏகப்பட்ட அம்மணிகள் அவர்க்கு லைக்கிடுவது தான்...அது மட்டுமல்ல ஆதித்யா
டீவியில் ஆரம்பித்த வலைச்சிரிப்பு நிகழ்ச்சியிலும் அவர் கிருஷ்ணராக
காட்சியளிப்பதும் மிகுந்த பொறாமைக்குள்ளாக்கியது.... அவருக்கு மச்சம் உடம்பில்
இல்லை...அவரது உடம்பே மச்சத்தில் தான் இருக்கிறது எனவும் தெரிந்து
கொண்டேன்...எனினும் நமக்கு விதித்த்து
அவ்வளவுதான் என நொந்து கொண்டு என்னை நானே தேற்றிக்கொண்டேன்...
இந்த வெப்சைட் துவக்கத்திற்கு யாரை அழைக்க போகிறீர்கள் என சுரேஷ் கேட்டபோது
முதலில் ஞாபகத்திற்கு வந்தவர் தாமு அவர்கள் தான்..அவரை பலவிதங்களிலும் தொடர்பு
கொண்டபோது அவரை பிடிக்க முடியவில்லை...அடுத்து உடனடியாய் ஞாபகம் வந்தவர் நம்ம
வெங்கடேஷ் தான்...தாமுவை போன்ற உடலமைப்பு கொண்டவர், நல்ல சாப்பாட்டு பிரியர், மதுரைக்காரர்
வேறு, அவரின் உணவுப்பதிவுகளில் உள்ள எதார்த்தமான நகைச்சுவை தொனி நம்மை சிரிக்க,
வியக்க வைக்கும்.சரி...அவரை வரவேற்கலாமா என சுரேஷிடம் கேட்டபோது அவரும் வியந்து
சரியான ஆள் தான் என சொல்ல, அவரை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்னை சேர்ந்து விட்டது.அவரின்
நம்பர் முன்பு ஒரு காலத்தில் வைத்து இருந்தேன்.இப்போது இல்லை...முதலில் பேஸ்புக்
சாட் செய்தேன்..கண்டுக்கவில்லை...(ஒருவேளை பெண் பெயரில் ஃபேக் ஐடியாக இருந்தால்
ரிப்ளை வந்து இருக்குமோ..).உடனே என் நண்பருக்கு போன் போட்டு வெங்கடேஷ் கிட்ட பேசு,
அவரு சீஃப் கெஸ்டா வேணும்னு சொன்னேன்...உடனே பர்மிசன் வந்தது...அவரின் நம்பருக்கு
பேசினேன்...மதுரைக்காரர்களுக்கே உரித்தான குரல்.....என்னால் மறக்க முடியவில்லை....மிகப்பணிவாய்
குரல்.... வந்துடறேன் என சொல்லி , பங்சனுக்கு மிகச்சரியாய் ஒரு நிமிடம் முன்னதாக
வந்து ஆச்சர்யத்தினை தந்தார்....மிகச்சிறப்பாய் பேசி எங்கள் வெப்சைட்டுக்கு நல்ல
அறிமுகத்தினை தந்தார்...அவரின் மனைவி சென்னையில் ஒரு மாலில் ஹோட்டல் ஆரம்பித்து
இருப்பதாக சொல்லியிருக்கிறார்...யம்மி ட்ரைவ்ஸ் க்காக அங்கு சென்று சாப்பிட
வேண்டும்....
ஒரே ஒரு வருத்தம் தான் அவரிடம்.....என் கூட நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள்
என்று சொல்லவில்லை... அவசரவேலை காரணமாக அப்படியே சென்று விட்டார்...
மிக்க நன்றி வெங்கடேஷ்.....வந்திருந்து வாழ்த்தியமைக்கு.....
நேசங்களுடன்
ஜீவானந்தம்
நேசங்களுடன்
ஜீவானந்தம்
Yummy mmmm
ReplyDeleteYummy mmmm
ReplyDeleteYummy mmmm
ReplyDelete