Showing posts with label வீரபாண்டிய கட்டபொம்மன். Show all posts
Showing posts with label வீரபாண்டிய கட்டபொம்மன். Show all posts

Tuesday, November 8, 2011

வீரபாண்டிய கட்டபொம்மன் - பாகம் 2

வீரபாண்டிய கட்ட பொம்மன் ...தொடர்ச்சி..







 கட்டபொம்மன் காலத்தில் பயன் படுத்திய பொருட்கள் சில இன்னும் இருக்கின்றன.அவர் வணங்கிய ஜக்கம்மா கோவில் இன்னும் இருக்கிறது.
கட்டபொம்மனுடன் ஏற்பட்ட போரில் இறந்த வெள்ளையர்களின் கல்லறை இன்னும் ஒட்டபிடாரம் என்ற ஊரில் இருக்கிறது.மேலும் கட்டபொம்மனின் ஐந்தாவது தலைமுறையை சேர்ந்த பேரன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.பொம்முவின் 212 வது நினைவு நாள் அன்று வீரபாண்டியனின் கோட்டைக்கு சென்றோம்.வீரத்திற்கும் தீரத்திற்கும் பெயர் போன கட்டபொம்மனின் கோட்டையை எப்போவாவது செல்லும் போது காண தவறாதீர்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, November 2, 2011

வீரபாண்டிய கட்டபொம்மன் - பாகம் 1

மதுரை டு தூத்துக்குடி செல்லும் வழியில் பாஞ்சாலஞ்குறிச்சி என்ற அறிவிப்பு பலகைகண்டுகுறுக்குசாலையில்இருந்துஉள்ளே பயணித்தோம்.
பாஞ்சாலஞ்குறிச்சி என்றாலே வீரம் விளைந்த மண்ணு என்பார்கள்.வேட்டைக்கு சென்ற போது முயல் நாயை விரட்டியதால் வீரம் செறிந்த இடம் என்று அங்கு கோட்டையை கட்ட ஆரம்பித்தான் கட்டபொம்மன். ஆங்கிலேயர்களின் அடக்கு முறைக்கு அடி பணியாததால் அவனது கோட்டையை தரை மட்டம் ஆக்கினர் ஆங்கிலேயர்.(அதெல்லாம் வரலாறு..)அந்த இடம் தற்போது தொல்லியல் துறை வசம் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிற்து.கட்டபொம்மன் காலத்தில் இருந்த கட்டிட அஸ்திவாரங்களை மாதிரியாக கொண்டு தமிழக அரசு மாதிரி கோட்டை ஒன்றை நிறுவியுள்ளது. அதனுள் கட்டபொம்மன் வரலாற்று நிகழ்வுகள் வரையப்பட்டு இருக்கின்றன.





இன்னும் தொடரும்.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...