ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் , மேட்டுப்பாளையம்.
கோவை மாவட்டத்துல மேட்டுப்பாளையத்தில் இருக்கிற ஒரு சக்தி வாய்ந்த அம்மன் கோவில் இது.ஊட்டி செல்லும் வழியில் மே.பா. பேருந்து நிலையம் ஒட்டி இடது ஓரமாக கோவிலுக்கு சாலை செல்கிறது.ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் இருக்கிறது.
பவானி நதி ஓரமாக இக்கோவில் அமைந்து உள்ளது.
நம்ம கம்பெனி வளர்ச்சிக்காக வருடா வருடம் இக்கோவிலுக்கு கிடா வெட்டுவோம்.இந்த முறையும் ஞாயிறு அன்னிக்கு கிடா, சமையல் பொருள்களுடன் கோவிலில் ஆஜராகி விட்டோம்.கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கிடா வெட்டி கொண்டு புக் பண்ணி இருந்த ஹாலுக்கு சென்று சமையலை ஆரம்பித்தோம்.
மட்டன் வறுவல், சிக்கன் வறுவல், சாப்பாடு, ரசம் என அசத்தி விட்டாங்க.
இடையிடையே தலைக்கறி, குடல், வறுவல் என அங்க அங்க செல்லும்.
எல்லாம் முடிந்த பின் வந்து சாப்பிட்டு விட்டு அனைவரும் கிளம்பி விடுவோம்.
ஒரு சின்ன பிக்னிக் மாதிரி ரொம்ப அருமையாக இருக்கும்.அப்படியே அம்மனை வேண்டியது போல இருக்கும்.இங்க பவானி ஆறு இருக்கிறதால் குளிக்க நல்ல இதமாக இருக்கும்.அப்புறம் புதிதாக போறவங்க, ஆத்துக்கு குளிக்க போறவங்க தக்க துணையுடன் போவது நல்லது.ஆற்றில் பாறைகள், சுழல்கள் இருக்கின்றன.கவனத்துடன் குளிக்க வேண்டியது அவசியம்.
நிறைய தோப்புகள் இருக்கின்றன.இங்கும் இடவசதியுடன் சமைத்து சாப்பிட இடம் கிடைக்கும்.நம்மள மாதிரி குடிமகன்களுக்கு ஏற்ற இடம்.
எப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு கூட்டம் அலை மோதும். அனைத்து ஹால்களும் புக் ஆகி இருக்கும். கிட்ட தட்ட ஆடு, கோழி பலி இடுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்.
கண்டிப்பாக அனைவரும் செல்லவேண்டிய கோவில் இது.இயற்கையை விரும்புகிறவர்கள் செல்லலாம்.ஒரு நாள் நல்ல கறி சோறு ஆக்கி குடும்பத்தோட, நண்பர்களோட தின்னுட்டு வரணுமா கண்டிப்பா போகலாம்..
நேசங்களுடன்
ஜீவானந்தம்